பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்வீச்சு இயற்பியல்‌ 453

பொறிகள் (computers) ஆகிய துறைகளில் நிகழும் ஆய்வுகளும் அவற்றின் பட்டறிவும் இத்துறையின் தற்போதைய முன்னேற்றத்துக்குக் காரணம் ஆகும். கண்டறியும் சுதிரியக்கவியல் (diagnostic radiology). இதன் முக்கிய நோக்கம் குறிப்பிட்ட நோய் உள்ளதா இல்லையா என்று அறிந்து கொள்ளுதலும் இருப்பின் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்று தெரிந்து கொள்ளுதலும் ஆகும். இம்முறையில் பொதுவாக எக்ஸ் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மனித உடலை ஊடுருவிச் செல்லும் எக்ஸ் கதிர்களை உடலில் உள்ள திசுக்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப உறிஞ்சிக்கொள்கின்றன. எனவே, மனித உடலின் உட்பகுதிகளைப் பற்றிய விவரங்களைக் நிழற்படத்தை வெளிவரும் எக்ஸ் கதிர்கள் தோற்று விக்கின்றன. கொண்ட நோய்களைக் கண்டறிய செறிவுள்ள மெல்லிய எக்ஸ் கதிர்க் கற்றைகள் பயன்படுகின்றன. இக்கதிர் களைத் தோற்றுவிக்கும் எக்ஸ் கதிர்க்குழாயின் அமைப்பைப் படம் 1 இல் காணலாம். மிகு மின் னோட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் செறிவுள்ள எக்ஸ் - கதிர்களைத் தோற்றுவிக்க முடியும். எதிர் மின்முனையிலிருந்து வெளிவரும் எலெக்ட்ரான்கள், சாய்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள (சாய்நிலைக் கோணம் 16 - 20°) நேர்மின்முனையைத் தாக்கும் போது சிறு பரப்பளவில் எக்ஸ் கதிர்கள் வெளிவரும். இப்பரப்பைக் குவிபுள்ளி (focal spot) என்பர். மிகக் குறைந்த பரிமாணம் (எ. கா. 1 மீ.மீ x 1 மி.மீ) குவிபுள்ளியைத் தோற்றுவிக்க நேர்மின்வாய் சுழற்றப் படும் (படம் 1) சுழலும் நேர்மின்வாய்கள் பொது வாகக் கதிர் வரைமுறைகளுக்கும் நிலையான நேர் மின்முனைகள் பல் கதிர் வரைமுறைக்கும் (dental radiography) பயன்படுகின்றன. எக்ஸ் கொழுப்பு, மென் திசுக்கள், உடலில் உள்ள பாய் மங்கள், எலும்பு ஆகியவற்றின் எக்ஸ் கதிர் உறிஞ்சு திறன் வேறாகும். எலும்பு உறிஞ்சு திறன் மிகுதி யாகக் கொண்டது. எனவே, அதன் நிழல் கதிர்ப் ப டலத்தில் விழுகிறது. மிகு அடர்த்தி கொண்ட திசுக்கள் அடர்த்தியான நிழலைத் தோற்று விக்கும். எடுத்துக்காட்டாக, கட்டி உண்டான திசுக் கள் அதை அடுத்த இயல்பான அதே வசைத் திசுக் களைவிட மிகுந்த எக்ஸ் கதிர்களை உறிஞ்சும். எனவே, கட்டிகள் அடர்த்தியான நிழலைத் தோற்று விக்கும். மாறுபடு ஊடகம் (contrast medium) என்று குறிப்பிடப்படும் பொருள்களை நோயாளிக்குக் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள குழிவு (cavity) கொண்ட உறுப்புகளைப் பற்றி - அறிந்து கொள்ள லாம். பேரியம் சல்ஃபேட், அயோடின் தனிமம் கொண்ட சேர்மங்கள் மாறுபடு ஊடகங்களாகப் பயன்படுகின்றன. இவை பெருமளவில் எக்ஸ் கதிர் கதிர்வீச்சு இயற்பியல், 453 களை உறிஞ்சுவதால், இப்பொருள்கள் தங்கியுள்ள இடம் அடுத்த பகுதியிலிருந்து மாறுபட்டுத் தெரியும். மாறுபடு ஊடகத்தின் உதவிகொண்டு மலக்குடல். பெருங்குடல், உணவுக்குழாய், கருப்பை, இரத்தக் குழாய், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை எக்ஸ் கதிர்ப் படங்களில் தெளிவாகக் காணலாம். குறைந்த ஆற்றல் உள்ள (30 KeV), எக்ஸ்கதிர் களைப் பயன்படுத்தும்போது எலும்புகளின் உறிஞ்சும் தன்மை மிகுதியாக இருப்பதால் உள் உறுப்புகள் எக்ஸ் கதிர்நிழற்படத்தில் சரிவரத் தெரிவதில்லை. (சான்று மார்பறையில் உள்ள நுரையீரல்) ஆற்றல் மிகுந்த (100 கி.எ வோ க்கும் அதிகமான) எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தும்போது, அனைத்துத் திசுக்களும் ஏறக் குறைய ஒரே அளவில் எக்ஸ் கதிர்களை உறிஞ்சு வதால், உள் உறுப்புகளையும் நிழற்படத்தில் காண லாம். பின் குறிப்பிட்ட முறையில், நிழற்படத்தில் பல உறுப்புகளுக்கு இடையே உள்ள மாறுபாடு குறை ளி கிறது. மேலும், நோயாளி மிகுகதிர்வீச்சுக்கு உட்படுத் மென் திசுக்களை ஆய்வு செய்யச் தப்படுகிறார். செறிவுள்ள குறைந்த ஆற்றல் உடைய எக்ஸ் கதிர்கள் பயன்படுகின்றன. (சான்று: மார்பகத்தை ஆய்வு செய்யக் கையாளப்படும் மார்பக வரைமுறை -mammography). எக்ஸ் கதிர்கள் தோற்றுவிக்கும் உள் உறுப்பு 4 களின் உருத்தோற்றங்களைப் புகைப்படத்திலோ ஒளித்திரையிலோ தொலைக்காட்சித் திரையிலோ பதிவு செய்யலாம். படம் 2 இல் காட்டப்பட்டுள்ள அமைப்பால் புகைப்படத்தில் உருவங்களைப் பதிவு செய்யலாம். நோயாளியின் உடலிலிருந்து வெளி வரும் எக்ஸ் கதிர்கள், பேரியம் காரீய சல்ஃபேட்டு துத்தநாக சல்ஃபைடு. கால்சிய டங்ஸ்டேட் போன்ற நின்றொளிர் பொருள்கள் (phosphors) மீது படும். போது வெளிவரும் ஒளிர்ஒளி (fluorescent light) எக்ஸ் கதிர்ப் புகைப் படலத்தில் உறுப்பு களின் உருவத்தைத் தோற்றுவிக்கிறது. ஒளிர்வான் படிகங்களின் அளவைப் பொறுத்துப் புகைப் படலத் தில்தோற்றுவிக்கப்படும் உருவத்தின் தரம் மாறுபடும். உடல் துத்தநாக சல்ஃபைடு பூசப்பட்ட ஒளிர் திரையில் எக்ஸ் கதிர்கள் படும்போது பச்சை நிறத்தில் உருவம் தே தோன்றும். இதைக் காரீயக் கண்ணாடி வழியாகக் காணலாம் (படம் 2). இக்கண்ணாடி எக்ஸ் கதிர் களைத் தடுத்து நிறுத்தும். ஆனால் ஒளிர் ஒளியைத் தன்னுள் செலுத்தும் எனவே இக்கண்ணாடி இவ் வுருவத்தைப் பார்ப்பவரை எக்ஸ் கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. ஒளிர்திரையில் தோன்றும் உருவத்தைச் செறி வாக்கி மிகைப்படுத்திச் சிறுபடலத்தில் புகைப்பட மாகவும் பதிவு செய்யலாம். இம்முறைக்கு ஒளிர் இயல் (fluroscopy) என்று பெயர். நோயாளியின் மீது