பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 கதிர்வீச்சு இயற்பியல்‌

454 கதிர்வீச்சு இயற்பியல் எக்ஸ் கதிர் முன் திரை உடல் உடல் முன் புல் பசைப்பூச்சு புகைப்படலம் ஒளிபுகா உறை பிள்புறப் பசைப்பூச்சு பின்திரை ாெள்லூலோக படலம் ஒளிர்வான் ஒளிகும் காப்புப் பூச்சு எதிரொனிப்பூச்சு ஒளிர்வான் ஈயக் கணணாடி படம் 2. (அ) புகைப்படலத்தில் எக்ஸ்- கதிர் உருவத்தைப் பதிவுசெய்யக் கையாளப்படும் அமைப்பு. (ஆ) ஒளித்திரையில் எக்ஸ்-கதிர் உருவத்தைத் தோற்று விக்கக் கையாளப்படும் அமைப்பு, பட்டு வெளிவரும் எக்ஸ்-கதிர்கள் இரண்டு வகைப் படும். ஒன்று திசுக்களால் ஓரளவு உறிஞ்சப்பட்டு வெளிவரும் எக்ஸ் கதிர்கள். மற்றொன்று, சிதறிய எக்ஸ் கதிர்கள், சிதறிய எக்ஸ் கதிர்கள் கதிரியக்க வரைபடத்தின் தரத்தைக் கெடுக்கும். பல்வேறு தடிப்பும் உருவமும் கொண்ட காரீயத் துண்டுகளைப் பயன்படுத்திச் சிதறிய எக்ஸ் கதிர்களைப் புகைப் படலத்தில் அல்லது ஒளித்திரையில் விழாமல் தடுக்க லாம். தொலைப்படக் காட்சித் திரையில் உருவத்தைத் தோற்றுவிக்கக் கீழ்க்காணும் முறை கையாளப்படு கிறது (படம்-3). ஆர்த்திகான் (orthicon), வீடிகான் (vidicon), ப்ளம்பிகான் (plumbicon) போன்ற படக் கருவியின் ஒளிர்திரையில் செறிவாக்கப்பட்ட உருவம் படுகிறது. இவ்வுருவம் படக்கருவியில் உள்ள எலெக்ட்ரான் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் எலெக்ட்ரான் கற்றையால் அலகிடப்பட்டு மின் குறிப்பலையாக (electrical signal) மாற்றப்படுகிறது. இக்குறிப்பலைகள் மின்னணுச்சுற்றுகளின் உதவி கொண்டு உருவமாக மாற்றப்பட்டுத் தொலைக் காட்சித் திரையில் தோன்றுகின்றன. ம படக்கருவியின் திரையில் தோன்றும் உரு வத்தைத் தொடர்ந்து படமாக எடுக்கலாம். இம் முறைகள் திரைப்படக் கதிரியக்கவியல் (cine radiology), கினோஸ்கோபி (kinescopy) என்று குறிப் பிடப்படும். இவ்வழி முறைகள் உதவி கொண்டு உள் உறுப்புகளின் அசைவுகளைக் கண்காணிக்கலாம். ஓர் எக்ஸ் கதிர்ப்படம் எடுத்தபின், சுதிர் மூலத்தைச் சற்று நகர்த்தி மற்றொரு படம் எடுத்து இவ்விரண்டு படங்களையும் அடுத்தடுத்து வைத்து ஆய்வு செய்தால் முப்பரிமாணத்தில் தேவைப்படும் உறுப்புத் தோற்றமளிக்கும். இம்முறைக்குத் திட்பக் கதிரியக்க வரை முறை (stereo radiography) என்று பெயர். நோயாளியை ஒரே இடத்தில் வைத்து எக்ஸ் கதிர் மூலத்தையும், காணியையும் (eye piece) எதிர்த திசையில் நகர்த்தினால் ஒரு குறிப்பிட்ட உறுப்பின் உருவம் மட்டும் தெளிவாகத் தெரியும். இம்முறைக்குக் குறுக்குவெட்டு வரைமுறை (tomography) என்று பெயர். ஓர் உறுப்பின் குறுக்கு வெட்டில் கதிர் மூலத்தையும் காணியையும் எதிரெதிராக நகர்த்திக் காணியிலிருந்து வெளிவரும் குறிப்பலைகளை ஒரு கணிப்பொறிக்குள் செலுத்தினால், அக்குறிப்பிட்ட உறுப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கணிப் பொறி வரைந்து காட்டும். இம்முறைக்குக் கணிப் பொறி அச்சுவழிக் குறுக்குவெட்டு வரைமுறை tomography-CAT) என்று (computer axial பெயர். இம்முறை CAT அலகிடுதல் (CAT scanning) என்று குறிப்பிடப்படும், CAT அலகிடுதல் முறை,