கதிர்வீச்சு இயற்பியல் 455
எக்ஸ் கதிர்கள் ஒளிர்திரை வில்லை கதிர்வீச்சு இயற்பியல் 455 படக்கருவி குழல் எலெக்ட்ரான் கற்றை எலெக்ட்ரான் துப்பாக்கி! குறிப்பலை வெளிவரு முனை படத்தைத் தாங்கிச் செல்லும் குழல் நோயாளியின் உடடல் தாக்கி செறிவாக்கி ஒளி உமிழ் பரப்பு திரை படம் 3 எக்ஸ்-கதிர் உருவத்தைத் தொலைக்காட்சித் திரையில் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகளின் அமைப்புப் படம் நோயைக் கண்டறியும் முறைகளில் மிகவும் முன்னணி யில் உள்ளது. அணுக்கரு மருத்துவம் (nuclear medicine). மிகக் குறைந்த செறிவில் சில தனிமங்களை உடலுக்குள் செலுத்தினால், அவை சில குறிப்பிட்ட உறுப்புகளால் மட்டுமே தொகுக்கப்படுகின்றன. சான்றாக,தைராய்டு சுரப்பி அயோடின் தனிமத்தைப் பிற சுரப்பி களைவிட மிகுதியாக உட்கவரும். எனவே, சில கதிரி யக்கத் தனிமங்களை நோயாளிக்குள் செலுத்தி, உடல் உறுப்புகளின் இயங்குமுறையைக் கண்காணிக்கலாம். தைராய்டு சுரப்பி, ஈரல், மூளை, நுரையீரல், இரத்தச் சுற்றோட்ட மண்டலம் ஆகியவற்றைக் கண் காணிக்க 1311, - Tc99 தனிமங்களும், எலும்பு மஜ்ஜை யைக்காண "Fe தனிமமும் ஈரலைக் கண்காணிக்கக் கூழ்பிரிகை நிலையில் உள்ள 19*Au தனிமமும் பயன்படு கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கதிரியக்கத் தனிமம் குறைந்த அரை ஆயுள் காலம் கொண்டதாகவும், வளர்சிதை வினை மாற்றத்தால் உடலிலிருந்து வெளி யேற்றப்படும் தன்மை கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். இல்லையெனில், தங்கிப்போன கதிரியக் கம் உடலுக்குக் கேடாக முடியும். குறிப்பிட்ட அளவுள்ள கதிரியக்கத் தனிமம் நோயாளிக்குக் கொடுக்கப்பட்டு, அது உடலில் சேர நேரம் அளிக்கப்படும். பின்பு நோயாளியின் உடலி லிருந்து மாதிரி எடுக்கப்பட்டுக் கதிரியக்கம் எவ்வளவு குறைந்துள்ளது என்று கணக்கிடப்படும். இவ்வொடுக் கத்திலிருந்து குறிப்பிட்ட உறுப்பின் பருமனைத் ந்து கொள்ளலாம். பிளாஸ்மா, சிவப்பு உயிரணு Nal படிகம். ஒனி மின்சாரப்பெருக்கி ஈயப் பாதுகாப்பு ஒருதுனை கொண்ட இணையாக்கி படம் 4. தைராய்டு சுரப்பியை அலகிடுதல். ஒரு துளை இணையாக்கியைப் பயன்படுத்தும் நேர்கோட்டியல் அலகிடு வானின் (rectilinear scanner) அமைப்புப் படம்.