460 கதிர்வீச்சு இயற்பியல்
460 கதிர்வீச்சு இயற்பியல் ஆகியவற்றைக் கட்டி வரப்பெற்ற உயிரணுக்களின் மீது பாய்ச்சும் முறைக்குத் தொலை மருத்துவம் (teletherapy) என்று பெயர். மாறாக, கதிரியக்கத் தனிமங்கள் கொண்ட ஊசிகளைக் கட்டியைச் சுற்றிச் செருகியும் கட்டியை அகற்றலாம். F A W H படம் 1 1. சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் எக்ஸ் கதிர்க் குழாயின் அமைப்புப் படம் A = நேர்மின்வாய்; C= எதிர் மின்வாய்; F = குளிர்விக்கும் குழாய்கள் (cooling fins ) M =கூடு (hood); = சன்னல் (window) 11 இல் மருத்துவத்திற்குப் பயன்படும் எக்ஸ் கதிர்க் குழாயின் அமைப்புக் காட்டப்பட்டுள்ளது. தாக்கி (target) 26° - 32° கோணத்தில் (சாய்வில்) வைக்கப்பட்டு இருக்கும். எனவே, அகன்ற கூம்பு வடிவத்தில் எக்ஸ் கதிர்கள் வெளிவரும் (கண்டறி முறையில் தோன்றும் எக்ஸ் கதிர்கள் புள்ளி மூலத் திலிருந்து வரும் கதிர்களை ஒத்திருக்கும்). நேர்மின் முனையில் தோன்றும் துணை எலெக்ட்ரான்களைத் தடுக்க இம்மின்முனை கூட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கும். மிகு ஆற்றல் இக்குழாயில் செலுத்தப்படு வதால், நேர்மின்முனை எப்போதும் நீர் அல்லது எண்ணெய் கொண்டு குளிர்விக்கப்பட்டு ருக்கும். இக்குழாயில் தோற்றுவிக்கப்படும் எக்ஸ் கதிர்கள் பெரிலியம் போன்ற உலோகத்தால் ஆன ஜன்னல் வழியாக வெளிவரும். இந்த ஜன்னல், எக்ஸ் கதிர் களை மட்டும் வெளிவிடும். ஆனால் துணை எலெக்ட் ரான்களை உறிஞ்சிவிடும். எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்கும் மின்சுற்று களில் திருத்திகள் பயன்படும். இவை தாக்கிகள் மிகுதி யாகச் சூடேறாமல் இருக்க உதவும். மேற்கூறிய குழாய்களில் 250 KV வரை மின்னழுத்தம் செலுத்தி எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்கலாம். 1 MV க்கும் மேற்பட்ட ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்க வேண்டுமானால், எதிர் பயன்படுத்தப்படும் மின்முனையிலிருந்து வெளிவரும் எலெக்ட்ரான்களை உருளை வடிவ மின்முனைகள் வழியே செலுத்தி முடுக்க வேண்டும். இவ்வெலெக்ட்ரான்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து நேர்மின்முனையைத் தாக்கும். மீ மின்னழுத்த எக்ஸ் கதிர்களை உண்டாக்க எலெக்ட்ரான்கள் சைக்ளோட்ரான், பீட்டாட் ரான், வான்-டி-கிராப் இயற்றி, நேர் போக்கி முடுக்கி போன்ற முடுக்கிகள் மூலம் முடுக்கப்படுகின்றன.அவை நேர்மின் முனையைத் தாக்கும்போது உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் தோன்றுகின்றன. மாறாக, உயர் ஆற்றல் கொண்ட எலெக்ட்ரான்களையே நேரிடையாக மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம். மின்னழுத்தத்தைப் பொறுத்துத் தோற்றுவிக்கப்படும் எக்ஸ் கதிர்களின் ஆற்றல் மாறுபடும். எக்ஸ் கதிர்களின் ஆற்றல் அரை குறைப்புத் தடிமன் (half vaiue thickness) என்னும் அலகில் அளக்கப்படுகிறது. படுகதிரின் ஆற்றலை உறிஞ்சி அதன் ஆற்றலைச் சரியாகப் பாதி அளவுக்குக் குறைக்கத் தேவைப்படும் உறிஞ்சுவான் உலோகத்தின் தடிமன் அரை குறைப்புத் தடிமன் ஆகும். 100KV ஆற்றல் வரை அலுமினியமும், IMV வரை தாமிரமும் மீ மின்னூட்ட எக்ஸ் கதிர்களுக்குக் காரியமும் உறிஞ்சுவானாகப் பயன்படுகின்றன. மேலோட்ட மருத்துவம் (superficial therapy) தொடு மருத்துவம் (contact therapy) போன்ற மேல் பரப்பு மருத்துவங் களுக்குக் குறைந்த ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர் களும், ஆழ் மருத்துவத்துக்கு (deep therapy) மீ மின் னூட்ட எக்ஸ் கதிர்களும் பயன்படுகின்றன. சில கதிரியக்கத் தனிமங்கள் (மீ மின்னூட்ட எக்ஸ் கதிர்களுக்குச் சமமான) உயர் ஆற்றல் கொண்ட காமாக் கதிர்களை வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டு (முறையே தனிமம், காமக் கதிரின் ஆற்றல்) "Co (1-17, 1.33 MeV) 1*1Cs (0.66Mev), ரேடியம். 220 Ra (0.19-2.43Mev) வரை, சராசரி 1.25MeV); twlr (0.3-0.6MeV) நீண்ட அரை ஆயுள் காலமும் (5.2 ஆண்டு) உயர் ஆற்றலும் கொண்ட காமாக்கதிர்களை வெளியிடுதல் ஆகிய பண்புகள் கொண்ட 60C0 தனிமமே மிகவும் பரவலாகப் பயன் பட்டு வரும் காமாக்கதிர் மூலம் (y-ray source) ஆகும். இக்கதிரியக்கத் தனிமங்கள் மருத்துவக்கருவி யில் ஒரு சிறு அறையில் வைக்கப்பட்டு இருக்கும். அறையில் உள்ள சிறு துளை வழியாகக் காமாக் கதிர்கள் வெளிவரும். தேவைப்படாதபோது இத் துளையை மூடவும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். கதிரியக்க மருத்துவத்தில் கட்டி உயிரணு எவ்வளவு கதிரூட்டத்தைப் பெறுகிறது என்பதை அறிதல் வேண்டும். எக்ஸ் கதிர் அல்லது காமாக்கதிர் மூலத்திலிருந்து வெளியேறும் ஆற்றலைத் திறப்பு (exposure ) என்பர். கதிர்வீச்சு எவ்வளவு அயனி யாக்கத்தை உண்டாக்க வல்லது என்பதைத் திறப்பு