பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்வீச்சு இயற்பியல்‌ 461

அளிக்கிறது. ரான்ட்ஜன் என்னும் அலகில் திறப்பு அளக்கப்படுகிறது. 0.001293 கிராம் அளவு எடை யுள்ள காற்றில் (1 கனசெ.மீ. காற்று STP) 1 நிலை மின்னூட்டம் அளவு மின்னூட்டத் துகளைத் (நேர் அல்லது எதிர்) தோற்றுவிக்க வல்ல கதிரியக்கத்தின் ஆற்றல் 1 ரான்ட்ஜன் ஆகும். 1 ரான்ட்ஜன் 2.1X109 அயனி இரட்டைகளைத் (ion pair) தோற்றுவிக்கும். குறிப்பிட்ட ஓரிடத்தில் 1 கிராம் அளவுள்ள பொருள் கதிர்வீச்சிலிருந்து உறிஞ்சும் ஆற்றலை அளவு (dose) அல்லது உறிஞ்சளவு என்று கூறுவர். இது ராட் (rad) என்னும் அலகில் அளக்கப்படுகிறது. ஒரு கிராம் எடையுள்ள பொருளில் 100 எர்கு அளவு ஆற்றலைக் கதிர்வீச்சு இழக்குமானால், அளவு 1 ராட் ஆகும். ஒரு ரான்ட்ஜன்=0.869 ராட் திறப்பு அல்லது கதிர்வீச்சு மூலத்தின் ஆற்றல் செந்தர அயனியாக்கும் அறை உதவி கொண்டு கணக்கிடப்படுகிறது. பிட்டபரிமாணத்தில் இவ்வறை தயாரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளிக்கு இவ்வறையைக் கதிரூட்டத்துக்கு உட்படுத்துவதால் உண்டாகும் அயனியாக்க மின்னோட்டம் அளக்கப்படுகிறது. குறிப் கதிர்வீச்சு இயற்பியல் 461 இவ்விவரங்களிலிருந்து கதிர்வீச்சு மூலத்தில் ஆற்றல் கணக்கிடப்படுகிறது. நடைமுறையில் விரல் உறை உருவில் உள்ள அயனியாக்கும் அறை (thimble ionization chamber) பயன்படுகிறது. செந்தர அயனி யாக்கும் அறை உதவிகொண்டு விரல் உள்ள அயனி யாக்கும் அறை அளவீடு செய்யப்படுகிறது. அளவீடு செய்யப்பட்ட மின்தேக்கி, விக்டோரீன் மின் அளவி victoreen electrometer) ஆகிய கருவிகளும் கதிர் வீச்சின் ஆற்றலை அளக்கப் பயன்படுகின்றன. பெரஸ் சல்ஃபேட் கரைசலைப் பயன்படுத்தும் ஃபிரிகே அள வியல் அல்லது வேதி அளவியல் (Fricke's dosimeter chemical dosimeter), லித்தியம் ஃபுளூரைடைப் பயன்படுத்தும் வெப்ப ஒளிர்வான் அளவியல் (thermo Iuminescent dosimeter), வெப்பச்சார் தடைப் பொருள்களைப் (thermistor) பயன்படுத்தும் வெப்ப அளவியல் (calorimetry) ஆகிய முறைகளும், கருவிகளும் உறிஞ்சு அளவைக் கணக்கிடப் பயன்படுகின்றன. or கதிரூட்டப்படும்போது ஒரு கிராம் எடையுள்ள பொருள் எவ்வளவு ஆற்றலை உறிஞ்சுகிறது என் பதை அளக்க அருவம் (phantom) எனப்படும் போலி தோளில் படும் அளவு (அடிதாக்கில்) க. TO 100 20 10 கொடுக்கப்பட்ட அளவு கதிர்ப்புவம் t 20 80 120 100 80 134 கட்டி (சிறுநீர்ப்பையில்) கதிர்ப்புலம் 3 (கதிர்ப்புலம், 2 படம் 12. கதிரியக்க அளவு வளைவுகள் (Isodose curves) தோலில் படும் கதிரியக்கத்தின் அளவு 100 ஆக இருப்பினும் உள் உறுப்புகள் வெவ்வேறு அளவு கதிரியக்கங்களைப் பெறுவதை இவ்வளவுகள் காட்டுகின்றன. 120, 80, 60 போன்ற எண்கள் சதவிகித நெடுக்குக் கதிரியக்க அளவக் குறிக்கின்றன. (அ) அடி நாக்கின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், (ஆ) சிறுநீர்ப் பையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் காட்டுகிறது. மூன்று கதிர்வீச்சு மூலங்களைப் (கதிர்ப்புலம்) பயன்படுத்தும்போது கட்டிகள் மிகு கதிரூட்டம் பெறுவதைப் படம் (ஆ) காட்டுகிறது.