462 கதிர்வீச்சு இயற்பியல்
462 கதிர்வீச்சு இயற்பியல் நோயாளி (dummy patient) பயன்படுகிறது. 60% அரிசி மாவு 40% சோடியம் பைகார்பனேட் கொண்ட கலவை அல்லது லின்கன்ஷயர் போலுஸ் எனப்படும் 87% சுக்ரோஸ்,13% மெக்னீசியம் கார்ப னேட் கொண்ட கலவை கொண்டு அருவம் தயாரிக்கப் படுகிறது. மனித உடலில் உள்ள திசுக்களும், அரு லமும் ஒரே அடர்த்தியும், ஒரு கிராம் எடையில் ரேஅளவு எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் கொண்டிருக்கும். அருவத்தின் வெவ்வேறு இடங் களில் அயனியாக்க அறைகள் பொருத்தப்பட்டு இருக்கும். இவை கதிரூட்டப்படும்போது அருவம் பெறும் ஆற்றல் அல்லது அளவைக் கணக்கிடும். கதிரூட்டப்படும்போது வெவ்வேறு இடங்களில் நோயாளி அல்லது அருவம் பெறும் அளவு வேறுபடும். உடலின் உள்பகுதிகள் தோலில் படும் அளவின் ஒரு பகுதியையே பெறுகின்றன. இதைச் சதவிகித நெடுக்க அளவு (percent depth doss -PDD) என்பர். அளவியல் உதவி கொண்டு ஒரே அளவு PDD பெறும் இடங் களைக் கண்டு கொள்ளலாம். இவ்விடங்களை இணைக்கும் கோட்டுக்குச் சம அளவு வளைவு என்று பெயர். மருத்துவம் தொடங்குமுன் அருவத்தின் உதவி கொண்டு சம அளவு வளைவுகளை வரைந்து கொள்ள வேண்டும் (படம் 12). சம அளவு வளைவுகளின் அமைப்பு எக்ஸ் கதிரின் ஆற்றல், கதிரூட்டம் பெறும் பொருளின் பரப்பளவு, கதிர்வீச்சு மூலத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கதிர்வீச்சுகளை ஓரிடத்தை நோக்கிப் பாய்ச்சினால், சமஅளவு வளைவுகளின் அமைப்பு மாறும் (படம். 12). இம்முறையால் கட்டியின் மேல் அதிக அளவு படுமாறும் அதைச் சுற்றியுள்ள இடத்தில் குறைந்த அளவு படும்படியும் செய்யமுடியும். சம அளவு வளைவின் அமைப்பை வடிகட்டி, சிரிடு, ஆப்பு (wedge) ஆகியவற்றின் மூலம் மாற்றலாம். பாரீஸ் சாந்தினால் ஆன வார்ப்புகள் உதவி கொண்டு கட்டியை நோக்கிப் (அல்லது கட்டி யின் மீது) பல கற்றைகளைப் பாய்ச்சலாம். மேற் கூறிய முறைகளுக்கு நிலைப்புல மருத்துவம் (fixed field therapy) என்று பெயர். கட்டி முழுதையும் கதிரூட்ட, சுழற்சி மருத்துவ முறையையும் (rotation therapy) பயன்படுத்தலாம். இம்முறையில் நோயாளியை ஓரிடத்தில் நிலையாக வைத்துவிட்டுக் கதிர்வீச்சு மூலத்தைச் சுழற்றலாம்; அல்லது சுதிர்வீச்சு மூலத்தை நிலையாக வைத்து விட்டு நோயாளியைச் சுழற்றலாம். இரண்டு முறை யிலும் கதிரூட்டப்படும் கட்டி, சுழற்சி அச்சில் இருக்க வேண்டும். கதிர்வீச்சு மருத்துவத்தில் கட்டி உயி ரணுக்களும், யல்பான உயிரணுக்களும் கதிரூட்டம் பெறுகின்றன. அனைத்துத் திசுக்களும் உறிஞ்சும் ஆற்றலைத் தொகு அளவு (integrated dose) என்று கூறுவர். இது கிராம் ராட் என்னும் அலகில் அளக்கப்படுகிறது. 1 கிராம் ராட் = 100 எர்க். 15 திசுவுக்கு ராட் 10 கிராம் எடையுள்ள அளவுள்ள கதிர்வீச்சுக் கொடுக்கப்பட்டால், தொகு அளவு கிராம் ராட் 15 X 10 1 = 150 X100=15,000 GT. (அ) 150 சுதிர்வீச்சு மூலம் (ஆ) படம் 13. சுழற்சி மருத்துவ முறை (அ) நோயாளி நிலையாக வைக்கப்பட்டுக் கதிர்வீச்சு மூலத்தைச் சுழற்றுதல். (ஆ) சுதிர்வீச்சு மூலத்தை நிலையாக வைத்து நோயாளியைச் சுழற்றுதல் படத்தில் கறுப்பாகக் காட்டப்பட்டுள்ள கட்டி எப்போதும் சுழற்சி அச்சில் இருக்கும். கதிரியக்க ஊசிகள். நன்றாக மூடப்பட்ட கதிரி யக்க மூலத்தைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட பரப்பில் காமாக் கதிரின் விளைவைத் தோற்றுவிக்கலாம். ரேடியம் ஊசிகள் இம்முறையில் பரவலாகப் பயன் பாட்டில் உள்ளன. ரேடியம் கொண்ட சேர்மத்தை ஒரு பிணைப்பியுடன் (binder) கலந்து 1 செ.மீ. நீளமும், 1 மி.மீ. விட்டமும் கொண்ட சிறு குழாய் களில் நிரப்பி மூடிவிடுவர். இச்சிறு குழாய்களைப் பிளாட்டினம் உறையிலிட்டு மீண்டும் மூடிவிடுவர். இவ்வாறு தயாரிக்கப்படும் குழாய்கள் செல் (cell) எனப்படும். பொதுவாக நீண்ட ஊசிகளில் மூன்று செல்லும், நடுத்தரமான ஊசிகளில் 2 செல்லும், சிறு ஊசிகளில் ஒரு செல்லும் இருக்கும். இவ்வூசிகளை மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வூசிகளில் கசிவு உள்ளதா என்று அடிக்கடி ஆய்வு செய்து வர வேண்டும். மருத்துவம் செய்யுமிடத்தைச் சுற்றி ஊசிகள் குத்தப்படும் (படம் 14). தொலை மருத்துவம் (tele- therapy) போன்றே, இம்முறையிலும். சம அளவு வளைவுகள் வரைந்து கொள்ளவேண்டும். ஊசிகள் எவ்வாறு குத்தப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து இவ்வளைவுகளின் அமைப்பு மாறும். உடலில் குத்தப் பட்ட ஊசிகளின் அமைப்பை எக்ஸ் கதிர்ப்படம் மூலம் அறியலாம். வாய், தொண்டை ஆகிய இடங்