468 கதிர்வீச்சு மண்டலம்
468 கதிர்வீச்சு மண்டலம் தேயாகும். ஆனால் எலெக்ட்ரான்களின் நகர்வு இயக்கம் கிழக்கு நோக்கியிருக்கும். கூடுதல் மின் அல்லது காந்தப்புலம் அல்லது புறத்துகள்களோடு மோதுதல் போன்ற திடீர்ச் சலனங்கள் (perturbations) இல்லையென்றால் இவ்வியக்கம் முடிவிலாக் மாகத் தொடர்ந்து இருக்கும். கால புவிக்காந்தப் புலம் புலியின் அச்சைப் பொறுத்து வடிவொப்புமை கொண்டதன்று. எனவே, கதிர்வீச்சு மண்டலமும் புவி அச்சைப் பொறுத்து வடிவொப்புமை யற்றதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சிக்கிய துகள்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே செல்லும்போது புவிக்கருகில் தாழ்ந்து செல்கின்றன. ஆனாலும் சில Reகளுக்கு மிகுதியான உயரத்தில் துகள்கள் செல்லும்போது இந்த விளைவு குறைந்து விடுகிறது. வெளி ஓரங்களில், சூரியக் காற்றால் ஏற் படும் அழுத்தத்தால் துகள் பாதையில் வளைவுகள் ஏற்படுகின்றன. படம் 1. புவிக்காந்தப்புலத்தில் சிக்குண்ட ஒரு புரோட்டானின் இயக்கம் சிக்குண்ட துகள்களின் துகள்தொகை. புவியின் கதிர்வீச்சு மண்டலத்தில் சிக்கிய மின்னூட்டத் துகள் களின் பங்கீடுபடம்2 இல் மாதிரியமைப்பாகக் காட்டப் பட்டுள்ளது. படத்தில் குறுக்குவெட்டுத் தோற்றமாக எலெக்ட்ரான் பாய்மம் இடப்பக்கமும் புரோட்டான் பாய்மம் வலப் பக்கமும் காட்டப்பட்டுள்ளன. கருமப் படலம் மிகுதியாகச் சிக்கிய கதிர்வீச்சின் வெளி அமைப்பு இரு பெருமங்களைக் காட்டுகிறது. அவை ஏறத்தாழ 1.5 Re உயரத்தில் மையங்கொண்ட ஓர் உள்கதிர்வீச்சு மண்ட டலம், 4-5Re உயரத்திற்குள் மையங்கொண்ட ஒரு வெளிக் கதிர்வீச்சு மண்டலம் ஆகியன. உள்கதிர்வீச்சு மண்டலத்தில் பல நூறு MeV ஆற்றல் கொண்ட புரோட்டான்களே மிகு கொண்ட துகள்கள் ஆகும். ஊடுருவும் திறன் 15 Mevக்கு மிகுதியான ஆற்றல்களில் மிகு ஆற்றல் புரோட்டான்களின் செறிவு 105 செ. மீ நொடி -1 யாளி ல அளவை எட்டுகிறது. ஆனாலும் புவியிலிருந்து தொலைவு பெருமமாக, மிகு ஆற்றல் புரோட்டான் களின் பாய்மம் விரைவாகக் குறைந்து ஏறத்தாழ 4 Re தொலைவில் முக்கியமற்றதாகி விடுகிறது. சில Mev அளவு ஆற்றல் கொண்ட குறை ஆற்றல் புரோட் டான்கள் ஏறத்தாழ 6Re வரை பரந்திருக்கும் நிலை கண்ணிப்புலத்தில் (trapping region) காணப் படுகின்றன. எலெக்ட்ரான்களும் இக்கணிப்புப்புலம் முழுதும் உள், வெளி மண்டலங்களில் அந்தந்த இடத்தில் பெருமங்களோடு காணப்படுகின்றன. எலெக்ட்ரான்களின் ஆற்றல் சில MeV அளவு வரை இருக்கும். வெளிக் கதிர்வீச்சு மண்டலப் பகுதியில் எலெக்ட்ரான்களே மிகு நுழை திறன் கொண்டவை. ஒரு சில MeV ஆற்றல் உள்ள ஹீலியம் சுருக்கள் (a-துகள்கள்), புவியின் காந்தப்புலத்தில் சிக்குண் டுள்ளன என்பதும் ஆய்வுகளால் கண்டறியப் பட்டுள்ளது. ஒரு சில நூறு துகள்களின் பாய்மம் (ஆற்றல் 2 MeV) ஏறத்தாழ 3Re உயரத்தில் காணப்படுகின்றது. எனவே a-துகள்களின் பாய்மம் புரோட்டான்களின் பாய்மத்தில் 2×10-4 பகுதியே எனத் தெரிகிறது. ஏறத்தாழ 20 Kev ஆற்றல் வரை யுள்ள பாய்மமும் சிக்குண்ட ஆக்சிஜன் அயனிகளின் மிகுந்த திறனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காந்தப் புயல்களுக்குப் பின் பெருமளவில் காணப்படும் இந்த ஆக்சிஜன் அயனிகள் இன்றியமையாதவை. ஏனெனில் சிக்குண்ட அயனிகளில் சில, புவியின் வெளியிலிருந்து வந்தவை எனும் கருத்தை இவை மெய்ப்பிக்கின்றன. புவி மையக்குத்துத் தளத்தில் Re அலகின் உயரத்தைப் பொறுத்து எலெக்ட்ரான், புரோட்டான் ஆகியவற்றின் பல திசைப் பாய்மத்தின் மாதிரி அளவுகள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இவை சராசரி அளவுகளேயாகும். நேரத்தைப் பொறுத்து இவ்வளவுகளின் மாறுதல், குறிப்பாக வெளி மண்டலத் தில் உள்ள எலெக்ட்ரான்களுக்குள்ள மதிப்புகளின் மாறுதல் மிகுதியாக உள்ளது. அட்டவணையில் பாய் மத்தின் மதிப்பு 2.7 பங்கு குறையும், ஆற்றல் இடை வெளிப் பண்பியல் ஆற்றல் E.எனப்படும். உயரம் மிகுதியாக ஆகப் புரோட்டான்களுக்கு E.இன் மதிப்பு ஒழுங்கு முறையாகக் குறைவதை அட்டவணை காட்டு கிறது. உள், வெளி மண்டலங்களுக்கு டைப்பட்ட குதி தவிரப் பிற பகுதிகளில் எலெக்ட்ரான்களும் இப்பண்பைக் கொண்டுள்ளன. இவ்விடைப்பகுதியில் எலெக்ட்ரான் பாயம் ஒரு சிறுமத்தைக் கொண்டு உள்ளது. ஆற்றல் பகுப்பு. குறைவாற்றல் கொண்ட எலெக்ட்ரான்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. கால மாறுதல்கள். கதிர்வீச்சு மண்டலத்துள் செறிவு, ஆற்றல் நிறமாலை, துகள்களின் வெளிப் பங்கீடு ஆகியவை காலத்தைப் பொறுத்து மாறு கின்றன. காந்தப்புல மாறுதல்களால் சிறிய மாற்றங் கள் ஏற்பட்டாலும், காந்தப்புயல் வீச்சு நேரங்களில்