பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்வீச்சு மண்டலம்‌ 471

குண்டு விடுகின்றன. இவ்வாய்வில் குறிப்பிடத்தக்கது பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்படியான செறிவு மிக்க கதிர்வீச்சு மண்டலங்கள் ஏற்படுத்திய 1962 ஆம் ஆண்டு ஜுலை 9 நாள் நடத்தப்பட்ட ஸ்டார் ஃபிஷ் (starfish) எனும் ஆய்வாகும். சோவியத் இல் மூன்று அணுக்கரு வெடிப்பு குடியரசு ஆய்வுகள் மூலம் குறுகிய காலம் நிலைத்திருந்த மண்டலங்களை ஏற்படுத்தியது. 1962 சிக்குண்டுவிடும் எலெக்ட்ரான்கள், அயனிகள் ஆகியவற்றை ஏவூர்திகள், செயற்கைக் கோள்கள் ஆகியவை சுமந்து செல்லும். துகள்முடுக்கிகள் மூலமாக வும் கதிர்வீச்சு மண்டலங்களுக்குள் செலுத்தலாம். இவ்வகை ஆய்வுகள் புவிக்காந்தப் புலத்தின் பண்புகள், மின்னூட்டத் துகள்கற்றைகளைத் தாக்கும். ஆய்வு செய்ய, அயனிக்குழுவின் திண்ம லையின்மை வடிவமைக்கப்பட்டது. கு சிக்குண்டுவிடும் துகள்களின் தோற்றமும் மறைவும். உள்மண்டலங்களில் உள்ள பெரும்பாலான மிகு ஆற்றல் புரோட்டான்கள் (> 50 Mev) காஸ்மிக் கதிர்கள் வெளிமண்டல அணுக்களில் மோதுவதால் மிகு ஆற்றல் நியூட்ரான்களில் தற்சிதைவால் உருவா கின்றன என நம்பப்படுகிறது. ஆனால் கதிர் வீச்சு மண்டலத்தில் உள்ள பெரும்பான்மையான கள் வெளி மண்டலம் அல்லது சூரியனின் காற்று ஆகியவற்றிலிருந்து தோன்றும் எலெக்ட்ரான் கள் அல்லது அயனிகளாக உள்ளன. இவை இதுவரை அறியப்படாத விசைகள் மூலம் முடுக்கமும் ஆற்றலும் பெறுகின்றன. . துகள் கதிர்வீச்சு மண்டலத் துகள்களின் தோற்றமூலம் குறித்த கொள்கைகள், சிறைப்பட்ட துகள்களை முடுக்கும் மாறும் தன்மையுள்ள மின், காந்தப்புலக் கொள்கைகளின் அடிப்படையில் உள்ளன. சூரியக் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களால், புவிக் காந்தப்புலம் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவ தால் தோன்றும் தூண்டு மின்புலங்கள், மின்னூட்டத் துகள்களை முடுக்கம் செய்கின்றன. பெறச் மேலும், இம்மாறும் புலன்கள் துகள்களை ஒரு கூட்டிலிருந்து இடமாற்ற மற்றொரு கூட்டிற்கு மடையவும் செய்கின்றன. இதனால் புவிக்காந்தப் புலத்தின் வெளிப்பகுதியில் செலுத்தப்படும் துகள்கள் உட்பகுதிக்குச் விண்வெளியிலுள்ள செல்கின்றன. புவிக் காந்தப்புலங்களைப் பற்றிய போதிய கொள்கை யறிவு இல்லாத காரணத்தால் இக்காந்தபுல மாறுதல் களைக் கொண்டு துகளின் முடுக்கம். விரவல் முறை ஆகியவை பற்றிய விரிவான கணக்கீடுகள் செய்ய துவரை முடியவில்லை. இவை பற்றிய கொள்கை யறிவு வளர்ச்சியடைந்த பின்னரே, முற்றிலும் பொருத்தமான ஆய்வுகள் மூலம் இவற்றை உறுதி செய்ய முடியும். சிக்குண்ட துகள்கள் இறுதியாக மறைந்து போகும் கேள்விக் முறைமையின் இயற்பியல் தன்மையும் கதிர்வீச்சு மண்டலம் 471 குறியே ஆகும். சிக்குண்ட எலெக்ட்ரான்களின் சராசரி வாழ்நாள், மைய மண்டல எலெக்ட்ரான்களுக்கு ஏறத்தாழ ஓர் ஆண்டு எனும் அளவிலிருந்து, வெளி யோர மண்டல எலெக்ட்ரான்களுக்குச் சில நாள்கள் எனும் அளவு வரை மாறுபடுகிறது. புவியிலிருந்து கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள சில் துகள்கள், புவியின் வளிமண்டலத்தில் உள்ள அணுக் களோடும், மூலக்கூறுகளோடும் மோதுவதால் நீக்கப் படுகின்றன. இறுதியாக இத்துகள்கள் தம் ஆற்றலை மிகுதியான அளவு இழந்து அயனிக்கோளத்தின் (ionosphere) பகுதியாக மாறுவதே மொத்த விளை வாகும். பெரும உயரங்களில் சிறைப்பட்ட துகள்கள் மின்காந்த அலைகளோடு மோதுவதே அவை மறைதலுக்கான. வழிமுறையாகும். இம்மின்காந்த அலைகள் சிறைப்பட்ட துகள் குழுக்களாலோ காந்தக் கோளத்தில் ஏற்படும் வேறு முறைகளாலோ உருவாக்கப்படலாம். எக்காரணத் சலனமேற்படுத்தி அலைகளின் மின்காந்தப்புலன்கள் தாலும், துகள் இயக்கங்களில் அடர்வுமிக்க கீழ் வெளி மண்டலத்திற்குத் திருப்பப் பட்டு மோதல்கள் மூலம் நீக்கப்படுகின்றன. கொள்கையடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட துகள்களின் இழப்புவீதம் ஆய்வு மதிப்புகளோடு ஒத்திருந்தாலும் இக்கணக்கீடுகளில் கையாளப்படும் நுட்பக் குறைவுகளால் இவ்விடைகளை முடிவானவை யாகக் கொள்ள முடியாது. புவியில் உள்ள மிகு ஆற்றல் வானொலி அலைபரப்பிகளிலிருந்தும், மின்னல்களால் ஏற்படும் மின்னிறக்கங்களிலிருந்தும் கிளம்பும் மின்காந்த அலை களால் கதிர்வீச்சு மண்டலங்களில் உள்ள எலெக்ட் ரான்கள் நீக்கப்படுகின்றன எனும் உண்மையை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. ஆனால் கதிர்வீச்சு மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதில் இம்முறையின் இன்றியமையாமை ஆய்விற்குரியது. பிற நிகழ்வுகளுடன் உள்ள தொடர்புகள். வளிமண்ட லத்தின் அயனிக்குழுச் சூழலின் பொது இயல்புகளில் ஒன்றே கதிர்வீச்சு மண்டலமாகும். சூரியனிலிருந்து அயனிக்குழு தொடர்ச்சியாகப் புவிக்காந்தப்புலத்தில் மோதிக்கொண்டே உள்ளது; மேலும் அயனிக்கோளத் தின் எலெக்ட்ரான்களும் அயனிகளும் ஓர் அயனிக் குழுவாகிச் சில நேரங்களில் முடுக்கம் பெறுகின்றன. இந்த அயனிக் குழுவின் சில எலெக்ட்ரான்களும் அயனிகளும் புவிக்காந்தப்புலத்தில் சிக்கிக் கதிர்வீச்சு மண்டலத்தை உருவாக்குகின்றன. வளிமண்டலத்திற்குள் காந்தப்புலக் கோடுகள் வழியாகக் கீழே செலுத்தப்படும் எலெக்ட்ரான், புரோட்டான்களால் துருவ அரோராக்கள் (polar aurors) கிளர்ச்சியூட்டப்படுகின்றன. இந்தத் துகள்கள் கதிர்வீச்சு மண்டலங்களில் தேக்கி வைக்கப்பட்டவை அல்ல என்றாலும் அரோரா துகள்களை முடுக்கும்