474 கதிர்வீச்சு வேதியியல்
414 கதிர்வீச்சு வேதியியல் திகழ்ந்தார். இந்த இருவர் மட்டுமே இன்று மிகு வளர்ச்சி பெற்றிருக்கும் கதிர்வீச்சு வானியலுக்கு அடிப்படையானோர் ஆவர். இவர் 30 அடி விட்ட முள்ள முதல் எதிரொலிக்கும் கதிர்வீச்சுத் தொலை நோக்கியை வீட்டன் II (Whcaton - II) அமைத்துப் பால்வழியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அலை களை வரைபடத்தில் உருவாக்கினார். இவருடைய விடாமுயற்சியை அறிவியல் உலகம் அப்போது கண்டு கொள்ளவே இல்லை. இரண்டாம் உலகப்போருக்குப்பின் வானியல் துறையில் முன்னேற்றம் இரண்டாம் உலகப்போரின்போது கதிர்வீச்சு ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டு ராடார் அமைப்பு மூலம் சூரியனிலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு அலைகள் கண்டுபிடிக்கப் பட்டன. இங்கிலாந்து தீவுக்குக் கிழக்கே ஏதோ ஒரு மூலத்திலிருந்து பரப்பப்பட்ட கதிர்வீச்சுத் தொடர்பு வன்மையான சு குறுக்கீட்டால் தாக்கமுற்றது. ஜெர்மானியர்கள் ராடார் கண்ணை மூடும் ஏதோ ஒரு புதிய செய்கை என எண்ணியபோது அது சூரியனிலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு என அறியப் பட்டது. மிகு உணர்வு நுட்பமுள்ள கதிர்வீச்சு ஏற்பி மூன்னேற்றத்திற்குப்பின் 1951 இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கதிர்வீச்சு வானியல் நன்கு வளரத் தொடங்கிப் பல ஆய்வாளர்களுக்குப் பயன்படத் தொடங்கிற்று. சூரியனிடமிருந்து வரும் கதிர்வீச்சு அலைகள் ஆராய்ச்சியில் இடம் பெற்றன. எரி, வீழ் மீன்கள் பிறப்பிடம் யாது என்னும் புதிர் நீங்கியது. விண்மீன்களுக்கிடைப்பட்டிருக்கும் ஆளித் துகள் படலங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட அலை நீளத்தில் கதிர்வீச்சு அலைகள் பெறப்பட்டன. எங்கி ருந்து இவ்வலைகள் தோற்றுவாய் பெற்றிருந்தனவோ அந்த இடங்களில் எல்லாம் ஒளித் தொலைநோக்கி யைப் பயன்படுத்தி வானியல் வல்லுநர்கள் புதுப்புது விண்பொருள்களையும், நிகழ்ச்சிகளையும் கண்டனர். இவை புதிர் பொருள்களாக வெடிக்கும் விண்மீன், பெருங்குமுறலுடைய பெருமுகில்கள், வெடிக்கும் அண்டங்கள், வீண்மீன்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் இவையெல்லாம் வானத்தில் நடக்கும் வேடிக்கைகளாகக் காட்சியளித்தன. கதிர்வீச்சு வேதியியல் கி. இராஜேந்திரன் அயனிகளைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்ட a, py,e,P, எக்ஸ் - கதிர் போன்ற கதிர்களை உறிஞ்சுவதால் ஒரு பொருளில் ஏற்படும் வேதி விளைவுகளை (chemical effects) ஆராயும் பகுதிக்குக் கதிர்வீச்சு வேதியியல் (radiation chemistry) என்று பெயர். உதவி கதிர்வீச்சு வேதியியல் தொடர்பான ஆய்வு களுக்கு இரண்டு வகையான கதிர்வீச்சு மூலங்கள் (radiation source) பயன்படுகின்றன. அவை இயற்கை அல்லது செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்புகள், துகள் முடுக்கி என்பன. துகள் முடுக்கி கொண்டு செறிவான ஆற்றலுள்ள கதிர் வீச்சுக் கற்றைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. சில முடுக்கி வகைகளின் எடுத்துக்காட்டுகளும், அவை தோற்று விக்கும் கதிர்களின் ஆற்றல் அளவுகளும்; எகஸ் கதிர்க்குழல்கள் (300MeV வரை), வான் டி கிராப் முடுக்கி (5MeV வரை), நேர்போக்கு எலெக்ட்ரான் முடுக்கி (லினாக்) (600 MeV), பீட்டாட்ரான் (300 MeV வரை) சைக்ளோட்ரான் (20MeV வரை ) முதலியன. மூலங்களிலிருந்து தொடர்ந்த (continuous) கதிர்களோ துடிப்பான (pulsed) கதிர்களோ தோற்று விக்கப்படலாம். பின் குறிப்பிட்ட வகையில் செறி வான கதிர்வீச்சுக் கற்றைகள் குறிப்பிட்ட டை வெளியில் தோற்றுவிக்கப்படும். அயனிப்படிகத்தில் (ionic crystal) கதிர்வீச்சு, உந்த மாற்றம் மூலம் தன் ஆற்றலை இழக்கிறது. அதனால், படிக அணிக்கோவையிலுள்ள அணுக்கள் இடம் பெயர்கின்றன. இது விக்னர் விளைவு (wigner et அல்லது பிரிவமைப்பு (discomposition) எனப்படும். தன் காரணமாகப் படிகத்தின் மின்கடத்தல். வெப்பக்கடத்தல் ஆகிய பண்புகளில் மாற்றங்கள் தோன்றுகின்றன. அயனியாக்கும் கதிர்வீச்சு வளிமம், நீர்மம், சகபிணைப்புகள் கொண்ட திண்மம் ஆகியவற்றில் ஆற்றலைத் தன்பாதையில் சிறு பரப்புகளில் இழக் கிறது. இச்சிறு பரப்புகள் ஸ்பர் (spur) எனப்படுகின் றன. கதிர்வீச்சின் ஆற்றலைப் பொறுத்துச் சிறு கோளம், சுவடுகள் போன்றவையும் தோற்றுவிக்கப் படும் (படம் 1). இச்சிறு பரப்பில் இழக்கப் பட்ட ஆற்றல் அங்குள்ள மூலக்கூறுகளில் கிளமச்சி அயனியாக்கம். பிரிகை போன்ற விளைவுகளை உண்டாக்கும். இதனால் அயனி இணை (ion pi), தனித்தியங்கும் உறுப்பு (free radicals) ஆகியன தோற்றுவிக்கப்படுகின்றன. ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இணையில்லா எலெக்ட்ரான்களைக் கொண்ட அணு அல்லது மூலக்கூறு இயங்கு உறுப்பு (free radicaly எனப்படுகிறது. ஸ்பரின் சராசரி விட்டம் 20 A என்று அறியப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பர்களுக்கு இடையே உள்ள வெளி, ஸ்பர், கோளம், சுவடு ஆகியவற்றின் பரவல் போன்றவை கதிர்வீச்சின் பண்பு, அதன் ஆற்றல், கதிர்வீச்சுக்கு உட்படுத்தப் படும் பொருளின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தவை. கதிர்வீச்சு வேதியியல் ஆய்வில் விளைபொருள் களின் விளைச்சல் பட்டறிவினால் G மதிப்பு என்னும் அலகில் அளக்கப்படுகிறது. 100eV அல்லது 1 J (ஜூல்) அளவு கதிர்வீச்சு ஆற்றலை உறிஞ்சுவதால், எவ்வளவு மதிப்பெண் உள்ள X - மூலக்கூறுகள் தோற்றுவிக்கப்