பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 கதிரியக்க அணுக்கருவினம்‌

4/6 கதிரியக்க அணுக்கருவினம் (electron spin resonance spectroscopy), மின்தொடர் வான் உத்தி (scavenger technique), ஒளித்தெறி ஒளிப் பகுப்பு (flash photolysis). மின்புலம், வெப்பநிலை மாற்றம் போன்ற முறைகளால் வினைகளின் இயங்கு முறைகளையும் வினைகளின் இடைநிலைகள் பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். கதிர்வீச்சால் தூண்டப்பட்டு நிகழும் வேதி வினைகளின் காலவெளி நானோ நொடியிலிருந்து மில்லி நொடி வரை நீடிக்கும். இதைவிடக் குறுகிய காலவெளியில் நிகழும் வினைகள் பற்றியும் (எடுத்துக்காட்டாக, பீகோ நொடி (picosecond 10-12 sec ) ஃபெம்ட்டா நொடி, (femto second. பட்டுள்ளன. = 10-15 sec ] ஆய்வுகள் நடத்தப் நீர், நீரியக் கரைசல் ஆகியவற்றில் கதிர்வீச்சால் தூண்டப்பட்டு நிகழும் வினைகள் மிகவும் பரவலாக ஆராயப்பட்டு வந்துள்ளன. கதிர்வீச்சு ஊடுருவி 10- நொடி கால டைவெளியில் நீரிய பொருள்களில் கீழ்க்காணும் திண்ம விளைபொருள்கள் தோன்று கின்றன. H, O → H, OH, H2, H,O, Eag இதில் என்னும் குறியீடு கதிர்வீச்சால் தூண்டப் பட்ட வினை என்பதைக் குறிக்கிறது. கதிர்வீச்சு பகுப்பிற்கு(radiolysis) உட்படுத்தப்பட்ட நீரியக் சுரை சலில் உண்டாகும் விளைபொருள்களின் சமநிலை அடர்த்தி கரைசலில் உள்ள பிற பொருள்களைப் பொறுத்தது. அதன் pH ஐயும் பொறுத்தது (படம்2). கரிமப்பொருள்களில் (organic syutems) மிகவும் சிக்கலான வினைமுறைகள் நிகழ்கின்றன. H CO, CO, CH,, பல துண்டுபட்ட மூலக்கூறுகள் (frag- mented molecules) போன்றவை தோற்றுவிக்கப்படு கின் றன. நிறைவுறா ஹைட்ரோகார்பன் மூலக் கூற்றைக் கதிர்வீச்சுக்கு உட்படுத்தும்போது பல்லுறுப் பாக்கல் வினை (polymerisation) நிகழ்கிறது. (காட்டு: ஸ்டைரீன் மூலக்கூறிலிருந்து பாலிஸ்டைரீன் ). அலிஃ பாட்டிக் சேர்மங்களைவிட (aliphatic compound) அரோமாடிக் சேர்மங்கள் (aromatic) கதிர்வீச்சில் சேதமடையாமல் நிலையாக உள்ளன. அரோமாட்டிக் சேர்மங்களில் படியும் ஆற்றல் பென்சீன் வளையத்தில் தேங்கி விடுகிறது. கிளர்ச்சி இறக்கம் (deexcitation) நேரும்போது இவ்வாற்றல் கிளர்வு ஒளியாக வெளி வருகிறது. எனவே ஆந்த்ரசீன், நாஃப்தலின் போன்ற சேர்மங்கள் மினுமினுப்புப் பண்பைக் கொண்டுள்ளன. டால் அணு உலை அறிவியல் கதிர்வீச்சின் இடையீட் உயிரியல் பொருள்களில் ஏற்படும் மாற்றங் களின் விவரம், கதிர்வீச்சு உதவிகொண்டு பல்லுறுப்புப் பொருள்களைத் தயாரித்தல், உணவுப்பண்டம். மருந்து, அறுவை மருத்துவத்தில் பயன்படும் பொருள் கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்துதல், அசாதா 3 2 Z OH each HO₂ H₂Oz 4 8 10 PH படம் 2. 20MeV வரை ஆற்றல் 0.1 முதல் உள்ள Y - கதிர், எலெக்ட்ரான்கள் கொண்டு நீரைக் கதிரூட்டும்போது, உண்டாகும் விளைபொருள்கள் நீரின் pH-ஐப் பொறுத்து மாறுதலைக் காட்டும் வரைபடம். ரணமான சூழ்நிலையில் (எடுத்துக்காட்டாக, குறை வெப்பநிலையில், உயர் அழுத்தத்தில்) வேதி வினை களைத் தூண்டுதல் போன்ற பல நடைமுறைத் தேவைகளுக்குக் கதிர்வீச்சு வேதியியல் தொடர்பான ஆய்வு பயன்பட்டு வருகிறது. பா. வெங்கடரமணி நூலோதி.J.W. T. Spinks and R.J. Woods An Introduction to Radiation Chemistry, John Wiley & Sons, New York, Second Edition, 1976. கதிரியக்க அணுக்கருவினம் ஓர் அணுவின் புரோட்டான்களும் நியூட்ரான்களும் அமைந்த மையப்பகுதி பொதுவாக அணுக்கரு எனப் படுகிறது. எந்த ஓர் அணுக்கருவையும் அதன் அணு எண் (புரோட்டான்களின் எண்ணிக்கை Z) நிறை எண் (புரோட்டான் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை A) ஆகியவற்றால் குறிப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட அணு எண்ணும் நிறை எண்ணும் கொண்ட அணுக்கருக்கள் ஓர் அணுக்கருவினத்தை அமைக்கின்றன. கதிரியக்கத் தன்மை கொண்ட அணுக்கருவினம் கதிரியக்க அணுக்கருவினம் (radio nuclides) எனப்படுகிறது.