கதிரியக்க அணுக்கருவினம் 477
கதிரியக்கம் என்பது இயற்கையில் கிடைக்கக் கூடிய, நிறை எண் 206க்கு மேற்பட்ட கனமான தனி மங்களால் வெளிவிடப்படும் தன்னிச்சையான சிதைவு ஆகும். ஹென்றி பெக்கொரல் என்னும் பிரான்ஸ் நாட்டு அறிவியலார், 1896 ஆம் ஆண்டு கதிரியக்கத் திற்குச் சற்றும் தொடர்பற்ற யுரேனியம் உப்பின் ஒளிர்தல் தன்மையைப் பற்றி ஆராயும்போது இந் நிகழ்வை எதிர்பாரா நிலையில் கண்டுபிடித்தார். இந்நிகழ்வில் வெளிவரும் கதிர்கள் கதிர்கள் பெக்கொரல் கதிர்கள் எனப்பட்டன. மேரி கியூரி அம்மையார் இந்நிகழ்விற்கு 1898 ஆம்ஆண்டு கதிரியக்கம் (radio activity) என்று பெயரிட்டார். கதிர்வீச்சின் பயனாக ஒரு கதிரியக்கத் தனிமம் மீண்டும் மாற்ற முடியாத வகையில் (irreversible) தன்னிச்சையாகச் சிதைவுறு கிறது. பொருள்களை ஆவியாக்கும் மிகு வெப்பமோ. உறையவைக்கும் மிகு குளிரோ, ஆற்றல்மிக்க மின் புலமோ, காந்தப்புலமோ இந்த நிகழ்வைத் தாக்குவ தில்லை என அறியப்பட்டது. எனவே, இது ஒரு முழுமையான நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு தனிமத்தின் கதிரியக்கத்தின்போது ஆல்ஃபா, பீட்டா, காமாக் கதிர்கள் என்னும் தனித்த பண்பு களையுடைய, ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகள் வெளி யிடப் படுவதைக் கியூரி அம்மையார் ஆய்வு மூலம் விளக்கினார். ஆஃபாக்கதிர்கள் கனமான, நேர்மின் னூட்டங் கொண்ட துகள்களால் ஆனவை எனவும் அத்துகள்கள் ஹீலியம் அணுக்களே எனவும் பின்னர் அறியப்பட்டன. அவை மிகக் குறைந்த ஊடுருவும் திறனும் மிகு அயனியாக்கத் திறனும் கொண்டவை. பீட்டாக் கதிர்கள் லேசான எதிர் மின்னூட்டங் கொண்ட எலெக்ட்ரான்களால் ஆனவை. மிகு ஊடு ருவும் திறனும் குறைந்த அயனியாக்கத் திறனும் கொண்டவை. காமாக்கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்ற ஆனால் மிகக் குறைந்த அலைநீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஆகும்; இவை மிகுஊடுருவும் திறன் கொண்டவை: நேரடி அயனி யாக்கத் திறனற்றவை. உடைய மேரி கியூரியும் அவர்தம் கணவரான பியரி கியூரி யும் பிட்ச்பிளண்ட் என்னும் யுரேனியத் தாதுப் பொருளிலிருந்து யுரேனியத்தை விட உயர் ஆற்றல் உடைய பொலோனியம் என்னும் அணுக்கருவினத்தை யும் அதைவிட மேலும் உயர் ஆற்றல் ரேடியம் என்னும் அணுக்கருவினத்தையும் பிரித் தெடுத்தனர். மேலும் பிட்ச்பிளண்டியிலிருந்து 1899 ஆம்ஆண்டு டீபைன் என்பார் ஆக்ட்டீனியம் என்னும் கதிரியக்கத் தனிமத்தைப் பிரித்தெடுத்தார். பல்வேறு முறைகள் மூலம் தற்போது ஏறத்தாழ 1,100 கதிரி யக்க அணுக் கருவினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஏறக்குறைய ஐம்பது மட்டுமே இயற்கையில் காணப்படுகின்றன. இயற்கையில் காணப்படும் கதிர்வீசும் அணுக் கருவினங்கள் சிதைவடைந்து புதிய அணுக் கதிரியக்க அணுக்கருவினம் 477 கருவினங்களைத் தோற்றுவிக்கின்றன. கதிர்வீசும் அணுக்கருவினங்களின் இத்தன்னிச்சையான விளை வாக்கத்திற்கு ரூதர்ஃபோர்டு, சாடி என்போர் முதன் முதலில் எளிய விளக்கம் ஒன்றைத் தந்தனர். கதிர் வீசும் அணுக்கருவிளங்கள் ஓர் ஆல்ஃபா அல்லது பீட்டாத் துகளை வெளியிடும்போது அவை சிதைவுற வேண்டும் என்று அவர்கள் கூறினர். ம்முறையில் ஒருவகை அணுக்கருவினம் மறைந்து புதியதோர் அணுக்கருவினம் உருவாகிறது. பொதுவாக, சிதை வுறும் அணுக்கள், தாயணுக்கள் எனவும் புதிதாகத் தோன்றும் சேயணுக்கள் எனவும் குறிக்கப்பெறுகின்றன. சேயணுவும் கதிரியக்கம் கொண்டிருப்பதால் மேலும் தன்னிச்சையாகச் சிதை வடைந்து வெவ்வேறான கதிர்வீசும் அணுக்கரு வினங்களைக் கொண்ட ஒரு தொடரைத் தோற்று விக்கின்றது. அணுக்கள் ம் கதிரியக்கமற்ற ஓர் அணுக்கருவினம் தோற்று விக்கப்படும் வரை இந்தச் சிதைவுகள் தொடர்ந்து நிகழ்கின்றன. கதிரியக்கச் சிதைவுகளை விளக்கக் கூடிய இடம் பெயர்தல் விதியைச் (displacement law) சாடி. ஃபஜான்ஸ் என்போர் 1913 இல் அமைத்தனர். அவ்விதியின்படி இதுவரை அறிந்த கதிரியக்க மாற்றங் களில் ஒரு கதிரியக்க அணுக்கருவிலிருந்து ஓர் ஆல்ஃ பாத் துகளோ ஒரு பீட்டாத் துகளோ வெளியிடப் படுகிறது. ஒரே சமயத்தில் அவ்விருவகைத் துகள் களோ வகைக்கு ஒன்றுக்கு மேற்பட்டோ வெளியிடப் படுவதில்லை. ஓர் ஆல்ஃபாத் துகள் வெளியிடப்படும் போது தாயணுக்கருவை விட நான்கு அலகு குறை வான நிறை எண்ணையும், இரண்டு அலகு குறை வான அணு எண்ணையும் கொண்ட புதியதோர் அணுக்கரு உருவாகிறது. ஒரு பீட்டாத்துகள் வெளியிடப்படும்போது உரு வாகும் புதிய அணுக்கரு தாயணுக்கருவின் நிறை எண்ணையும், ஓரலகு மிகுதியான அணு எண்ணையும் கொண்டிருக்கும். கதிரியக்க மாற்றத்தின் அடுத்தடுத்த நிலைகளில் தோற்றுவிக்கப்பட்ட வெவ்வேறு அணுக்கருவினங்கள் ஒரு தொடரை அமைக்கின்றன. இத்தகைய தொடர் களில் மூன்று உள்ளன. அவை யுரேனியம் - ரேடியம் தொடர், தோரியம் தொடர், ஆக்ட்டீனியம் தொடர் எனப்படும். யுரேனியம் - ரேடியம் தொடர் யுரேனியம் (ii) என்னும் அணுக்கருவில் தொடங்கி ரேடி யம் G ( 92 206 82 RaG) என்னும் கதிரியக்கமற்ற காரீய ஐசோடோப்பில் முடிவடைகிறது. தோரியம் தொடர் 232 தோரியம் (g02h) அணுக்கருவில் தொடங்கி, கதிரியக் கமற்ற 208 82 தோரியம் D ( ThD) என்னும் காரீயத்