பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கட்டக ஆய்வியல்‌

30 கட்டக ஆய்வியல் வழங்கி வருகிறது. து பல எளிய உத்திகளைக் கொண்டது. திருப்புமைப் பகிர்வு முறை (moment distribution method) தோராய முறைகளில் மிகவும் பரவலாகப் பயன்படுவது பெயர்ச்சி முறையின் ஒரு வடிவமாகும். ஆனால் அப்பெயர்ச்சிக் கூறுகளின் கணக்கீடு தேவை யின்றி வி சைக் கூறுகளே நேரடியாகக் கணக்கிடப்படு கின்றன. படம் 8. ல் காட்டப்பட்டுள்ள கட்டகத்தில் ஒவ்வோர் உறுப்பின் நிலைமுனை விசைகளும், பெயர்ச்சிகளும் முன்னரே கணக்கிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிணைப்பிலும் நிலைமுனை விசைகளின் கூட்டு (பூஜ்யமாக இல்லாவிடில்) சமநிலையின்மை யைத் (inequilibrium) தோற்றுவிக்கும். இக்கூட்டுத் திருப்புமை,பிணைப்பில் பெயர்ச்சியைத் (சுழற்சியை ) தோற்றுவிக்க முனைகிறது. அவ்வழி, பிணைப்பில் இணைந்திருக்கும் ஒவ்வோர் உறுப்பும் இத்திருப்புமை யைத் தனது பெயர்ச்சிக்கு நேர் விகிதத்தில் பகிர்ந்து கொண்டு சுழற்சியடைகிறது. இப்பகிர்வுத்திருப்புமை களை ஒவ்வொரு பிணைப்பிலும் கணக்கிடல் ஒரு தோராயமான கணக்கீடேயாகும். ஒவ்வொரு பிணைப் பும் சுழற்சியடையும் போது அதில் இணைந்திருக்கும் உறுப்புகள் பகிர்ந்து கொள்ளும் திருப்புமை நிலையை அளித்தாலும் அச்சுழற்சிகள் உறுப்புகளின் மறுமுனைகளிலும் திருப்புமையைச் செலுத்துகின்றன. இவ்வாறு பிற பிணைப்புகளின் கழற்சியால் தோற்று விக்கப்படும் திருப்புமைகள் மீண்டும் சமநிலையின் மையைத் தோற்றுவிக்கின்றன. (ஆனால் இச்சம நிலையின்மை அளவில் மிகக் குறைவாக இருக்கும்). இச்சம சம சமநிலையின்மை மீண்டும் உறுப்புகளின் பெயர்ச் சிக்கேற்பப் பகிரப்பட்டு, இப்பகிர்வுத்திருப்புமைகளு டன் மறுமுனைகளில் தோற்றுவிக்கப்படும் உடன் விளை திருப்புமைகள் (carry over moments) கணக் கிடப்படும். இக்கணக்கீட்டுப் படியின் ஒவ்வொரு தொடரிலும் சமநிலையின்மை விரைவாகக் குறைந்து சில தொடர்களில் பூஜ்யத்தை நெருங்கும். பல்வேறு படிகளின் திருத்தங்களையும் தொகுக்க இறுதி விடை கள் கிடைக்கப் பெறுகின்றன. இம்முறையிலும் கருக்க உத்திகள் பலவற்றைக் கட்டசு ஆய்வியல் நூல்கள் குறிப்பிடுகின்றன. தூண் ஒப்புமை முறை (column anology method). இது சிறு கட்டகங்கள், குறிப்பாகக் குறுக்குவெட்டுச் சீராகவின்றி மாறும் உறுப்புகள் கொண்ட கட்டகங் களின் ஆய்வில் பயன்படுத்தப்படும் முறையாகும். இது விசை முறையின் ஒரு வடிவமே. இம்முறையில் கட்டகத்தின் நடுக்கோட்டுப்படம் தூணின் வெட்டுமுக மாக ஒப்புமை செய்யப்படுகிறது. கட்டகத்தின் வளை வுறுதியின்(flexural rigidity El) தலைகீழியைத் (அதா வது 1/EI) தூண் வெட்டுமுக நடுக்கோட்டின் அகல் மாகக் கொண்டால், அவ்வொப்புமைத் தூணின் மீது புற வளை திருப்புமைகளைச் சுமையாகச் செலுத் தினால், தூணில் தோற்றுவிக்கப்படும் ஒப்புமைத் தகைவுகள் கட்டகத்தின் அகவிசைக் கூறுகளைத் தரும் என்பது இம்முறையின் அடிப்படையாகும். கீல் இணைப்புச் சட்டகங்களின் ஆய்வு (analysis of pin jointed frames). இல் இணைப்புச் சட்டகங் களில் ஆய்வுகள் ஒரளவு எளியவையாகும்.நிலை யியல்சார் சட்டகங்களின் ஆய்வு சமனிலைச் சமன் பாடுகளின் தீர்வாகும். இத்தீர்வுகள் பிணைப்பு முறை {method of joint), நீள்மைக் செழு முறை (method of tension coefficients), GN&G வெட்டுமுறை (method of sections) எனச் சிறு சிறுவேறுபாடுகளுடன் கையாளப்படினும் அடிப் படை, சமநிலைச் சமன்பாடுகளின் தீர்வேயாகும். மிகைத்தடைச் சட்டகங்கள் பெயர்ச்சி முறை, அல்லது விசை முறை வழியில் தீர்வுகள் காணப்படு கின்றன. விசைமுறையைப் பயன்படுத்தும்போது பெயர்ச்சிகள் அலகு விசை முறை (unit force method) கொண்டே பெரும்பாலும் தீர்வு காணப்படுகின்றன. எவ்வகைச் நகரும் சுமைகளுக்கான ஆய்வுகள் (analysis for உத்திரங்கள் moving foads). பாலங்கள், தொழிலக போன்ற பல கட்டகங்களில் சுமைகள் செயல்படும் இடம் மாறக்கூடும். எனவே, ஒரு குறிப்பிட்ட அக விசைக்கூறு சுமையின் செலுத்தத்தில் பெரும மதிப்பு அடைகிறது என்பது ஆய்வின் ஓர் அடிப்படைத் தேவையாகும். கட்டகத்தின் பல்வேறு பகுதிகள் வழியே ஓர் அலகு விசை நகர்த்தப்படும் போது, ஒரு குறிப்பிட்ட அகவிசைக் கூறு பெறும் மதிப்புகளைக் காட்டும் விளைவுக்கோடுகள் (influence (ines) இவ்வாய்வில் பயன்படுகின்றன. படம் 9 இல் ஒரு விட்டமும் அவ்விட்டத்தின் தாங்கியொன்றின் எதிர்வினைக்கான காட்டப்பட் விளைவுக்கோடும் டுள்ளன. படிம ஆய்வு model analysis). கட்டகங்களின் ஆய்வுக்குப் பல்வேறு முறைகள் வகுக்கப்பட்டிருப்பி னும் ஒரு சில எளிய கட்டகங்களுக்கே எளிதில் தீர்வு காண முடியும். பெரும்பாலான கட்டகங்களுக்குத் தோராயமான தீர்வுகளே காண இயலும். குறிப்பாக மீட்சி வரம்பைத் தாண்டும் கட்டகங்கள், மிகையான பெயர்ச்சிகள் தோன்றும் கட்டகங்கள் ஆகியவற்றில் தோராயத்திற்காக மேற்கொள்ளும் கருதுகோள்கள் (assumptions) ஆய்வு முடிவுகளில் பெரும் ஐயப் பாட்டைத் தரலாம். எனவே சிக்கலான, செலவு மிகுந்த கட்டகங்களின் ஆய்வைச் சோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளப் படிம ஆய்வு தேவைப்படு கிறது. நேர் படிம ஆய்வு (direct model analysis) மறைமுகப்படிம ஆய்வு (indirect model analysis) என இருவகை முறைகள் உண்டு. நேர் படிம ஆய்வில் கட்டகங்கள். விசைகள் முதலியவற்றின் அளவு ஒரு குறிப்பிட்ட விகிதங்களில்