கதிரியக்க உயிரியல் 483
வகை அல்லது புறத்தோற்றத்தில் உடனே தெரியாமலிருந்து பலகாலம் கடந்து அதே உயிரினத்திலோ அதன் சந்ததியிலோ தோன்றலாம். வெளித்தோற்றத்தில் தெரியாமல் இருந்து வேதி ஆய்விலோ வேறு நுண் ஆய்வுகளின் மூலமோ தெரிய வரலாம். கதிரி யக்கத்தால், உயிரினங்களில் தோற்றுவிக்கப்படும் பலவகை விளைவுகள், அவற்றின் தன்மைகள் மற்றும் முழு விவரங்கள் ஆகியவை பற்றி விவரிப்பது கதிரி யக்க உயிரியல் (radiation biology) ஆகும். கதிரியக்கத் தால் ஏற்படும் மாறுபாடுகளையும் செயல்களையும் அவற்றிற்கான காரணங்களையும் ஊகித்து அறிய முடியும். இந்த ஊகங்கள் புது உத்திகளைத் தோற்றுவிப்பதிலும் புதுவகை ஆய்வுக் கருவிகளை உண்டாக்குவதிலும், கதிரியக்கத் தற்காப்பு (radiation protection) முறைகளை உருவாக்குவதிலும் உதவு கின்றன. மருத்துவம், வேளாண்மை, உயிரியல் ஆகிய துறைகளின் ஆராய்ச்சியில் கதிரியக்க ஆற்றல் பயன் டுகிறது. கதிரியக்க உயிரியல் 483 காலக் கதிர் வீச்சுப்பொருள்கள், நாளாவட்டத்தில் குறைந்தோ பலவகையான சேர்க்கை விளைவுகளால் தொடர்ந்தோ தோன்றின என்றும் கருதப்படும். கதிரியக்கச்சுழற்சி. புவியிலுள்ள சுதிர் இயக்கப் பொருள்கள் தாவரங்களால் கவரப்படலாம் அல்லது மண்ணிலிருந்து கசிந்து நிலத்தடி நீரில் கரைவதன் மூலம் உணவுச் சுழற்சியில் வந்தடையலாம். பொட் டாசியம் - 40 பெருமளவில் இருப்பதால் உள் கதிரியக் கத்தைக் கொடுக்கும் ஒரு காரணியாக உள்ளது. இதே போன்று C-14, ரேடியம், ரூபிடியம், போலோ னியம் ஆகியவை உயிர்ப்பொருள்களில், கதிரியக் கத்தின் மூலம் கலப்புத்தன்மையை உண்டாக்கு கின்றன. இவற்றைத் தவிர வேறு பலவகைகளிலும் இயற்கைக் கதிரியக்கக் கலப்பு ஏற்படுகிறது. சிகரெட் புகை பெரும்பாதிப்பை உண்டாக்காமல் இருந் தாலும் மிகக் குறைந்த அளவில், பொலோனியம் கதிரியக்கத்தை மூச்சுக்குழல் பகுதிகளில் படிய வைக்கிறது. கதிரியக்கம். இயற்கைத் தோற்றத் தாலும் சுற்றுப்புறச் சூழலின் கெடுதலாலும், மருத்துவ ஆய்வுகள் மற்றும் தொழிலகங்களில் பயன் படுத்தும் கருவிகளாலும் ஏற்படுவதைத் தவிர, வேறு வகைகளிலும் தோன்றலாம். எடுத்துக்காட்டாக ரேடியம், நீண்ட கதிரியக்கம் மனித கதிரியக்கப் பொருள்கள். கதிரியக்கத்தைத் தோற்று விக்கும் பொருள்கள் இயற்கையிலேயே புவி யில் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. ராலும் கதிரியக்கம் பல வகைகளில் தோற்றுவிக்க தோன்றும் படுகிறது. இயற்கையில் மிகக் குறைந்த அளவேயாகும். எனினும் கதிரியக் கத்தின மொத்த விளைவுகளைக் கணக்கிடும்போது, இயற்கையில் தோன்றும் கதிரியக்கத்தின் அளவுகளை யும் கணக்கிட்டுச் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. செயற்கைக் கதிரியக்கம், மருத்துவத்துறை ஆய்வுகள், தொழிலகங்கள் மற்றும் ஆராய்ச்சியின்போது வெளிப் படும் கதிரியக்கம், அணு ஆய்வுகளால் ஏற்படும் கதிரியக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இது குறிப் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மிகுதியாக ஏற்பட வாய்ப்புள்ளது. 1J15, இயற்கையில் தோன்றும் கதிரியக்கம் இரண்டு வகைகளில் தோன்றுகிறது. காஸ்மிக் கதிர்கள் வான வெளியிலிருந்து வளிமண்டலத்தில் நுழைவதால் ஏற் படுவது வகையாகும், மற்றது புவியின் மேற் பரப்பிலிருக்கும் கதிர் வீச்சுப் பொருள்களிலிருந்து காஸ்மிக் 3தான்றுவது ஆகும். கதிர்களை, வான வெளியிலிருந்து வளிம மண்டலத்தில் நுழைவதால் நேரடிக் கதிர்கள் (primary radiation) என்றும், இவை வளிம மண்டலத்தில் அணுக்களுடன் செயல்படுவதால் இரண்டாம் (secondary வகைக் கதிர்வீச்சுகள் radiation) என்றும் வகைப்படுத்தலாம். இக்கதிர் வீச்சின் அளவு கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ. ஒவ்வொரு 1500 மீட்டர் உயரத்திற்கும், இரண்டு மடங்காக உயருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. புவி யின் கதிரியக்கம், புலியின் மேற்பரப்பில் இருக்கும் கதிரியக்கப் பொருள்களால் தோற்றுவிக்கப்பட்ட தாகும். இப்பொருள்கள் புவி தோன்றிய காலத்தி லிருந்தே தொடர்ந்து இருந்தன என்றும், குறுகிய காலமாகச் சுவர்க்கடிகாரங்கள், கைக்கெடிகாரங்கள் ஒளிர்வதற்காகப் பயன்பட்டு வருகிறது. தற்போது பல்கிவரும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து சிறிய அளவில் கதிரியக்கம் ஏற் படுகிறது. இவை யாவும் கதிரியக்கத்தைத் குறைந் தொடர்ந்து தோற்றுவித்தாலும் வீரியம் திருப்பதால் உயிரினங்களில் ஏற்படும் விளைவுகள் மிகக்குறைவு. பலவகையான உயிர்ப்பொருள்களில் ஏற்படும் விளைவுகள். கதிரி யக்கம், முதன்முதலில் கண்டுபிடித்த காலத்திலிருந்தே தாக்கங்களை உயிர்ப்பொருள்களில் ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். ராண்ட்ஜன். எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்த நான்கு மாதங்களிலேயே கதிரியக்கம், செல்களைத் தாக்குவதாகக் கண்டுபிடித்தார். மண்டை ஓட்டின் மேல் கதிர்களைச் செலுத்தியதன் விளைவாகத் தலைமுடி முழுவதுமாக உதிர்ந்து விடும் ஒரு விந்தை யான செயலும் தெரியவந்தது. . கதிர்களைப் பயன்படுத்திய மருத்துவர்களில் பெரும்பாலோருக்குத் தோல் சிவந்து புண் ஏற் அறிவியலார் பெர் பட்டது. புகழ்பெற்ற பிரெஞ்சு காமி உட்படப் பலர் இக்காரணங்களால் உயிர் துறந் துள்ளனர். இவ்வாறு தாக்கங்கள் இருப்பினும் பயன் களும் இருப்பதைக் கண்டனர். எடுத்துக்காட்டாக, மேல்தோலின் நோய் எக்ஸ் கதிர்களால் நலமானது, மூக்கின் நுனியில் ஏற்பட்ட தீராத கட்டி கரைந்தது. உள் உறுப்புகளில் இரத்தப் புற்றுநோய் உடைய நோயாளியின் மண்ணீரல் வீக்கம் குறைந்தது போன்ற வற்றைக் கூறலாம்.