பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 கதிரியக்க ஐசோடோப்‌

484 கதிரியக்க ஐசோடோப் மருத்துவர்கள், மனிதனின் உறுப்புகளை ஆராய் வதிலும், நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், கதி ரியக்கத்தைப் பயன்படுத்தியபோது, உயிரியல் வல்லு நர்கள், பிற உயிரினங்களில் கதிரியக்கத்தின் விளைவு களை ஆராய்ந்தனர். எக்ஸ் கதிர்களையும், ரேடியத் தின் கதிர் வீச்சையும், தாவரங்களிலும் விலங்குகளி லும் செலுத்தி ஆய்வு செய்தனர். தாவரங்களின் விதை, தவளை மற்றும் பறவைகளின் முட்டை, பாக்டீரியாக்களின் மேல் மேல் செலுத்தப்பட்ட வீரியக் கதிரியக்கத்தின் பயனாக இயல்புமீறிய வகைத் தாவ ரங்களும் விலங்கினங்களும் தோன்றின. கதிரியக்கத்தால் ஏற்படும் விளைவு, அறிகுறிகள், தன்மைகள், அவை தோற்றமளிக்கும் காலம், அவற் றின் இடைவெளி, உயிர்ப் பொருளின் வாழ்வுக் வகையைப் காலம் ஆகியவை, செலுத்தப்பட்ட கதிரியக்கத்தின் அளவு (திறன்), எண்ணிக்கை (முறை), உயிரினத்தின் பொறுத்தமையும். இதற்கு ஏற்றாற் போல் தாக்கங்கள் உடன் ஏற்படலாம் அல்லது காலந்தாழ்ந்தும் ஏற்படலாம் அல்லது அவ்வினத்தின் பின் பரம்பரையிலும் தோற்றமளிக்கலாம். எடுத்துக் காட்டாக, 100,000 (ராடுகள்) அளவுக்குமேல் கதிர் களை எலிகளின் மேல் செலுத்தும்போது விரை விலேயே அவை இறந்தவிடுகின்றன. சற்றுக் குறை வான அளவில் செலுத்தும்போது ஓரிரு நாள் சென்ற பி பிறகு அவை இறக்கின்றன. 300-900 (ராடுகள்) அளவில் சுதிரியக்கத்தைச் செலுத்தும்போது அவை இறக்காமல் இருக்கலாம் அல்லது காலந்தாழ்த்து இறக்கலாம். பயன்கள். கதிரியக்கம், சில கதிரியக்கத்தின் ஆண்டுகளாக நடைமுறையில் பயன்பட்டு வருகிறது. கதிரியக்க மூலகங்கள் எக்ஸ் கதிர்கள், மருத்துவம். தொழில்கூடங்கள், வேளாண்மை இவற்றில் பல வகை களில் பயன்பட்டு வருகின்றன. உயிரியல், மருத்துவம், சுற்றுப்புறச் சூழ்நிலையியல் ஆகிய துறைகளில் தற் போது காணப்படும் பல புதிய முன்னேற்றங்கள், உத்திகள் கதிரியக்கத்தால் ஏற்பட்டுள்ளன. மருத்து வத்துறையில் கதிரியக்கம், ஓர் இன்றியமையா உத்தியாக நோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுவ துடன், செயல்பாடுகளில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டுபிடிப்பதிலும், உடலில் தோன்றும் சுட்டிகள் போன்றவற்றை நலப்படுத்துவதிலும் பயன்படுகிறது. எக்ஸ் கதிர்கள் மட்டும் நீண்ட காலமாக மருத்துவ முறையில், பெரும்பாலும் பயன்பட்டு வந்தன. தற் போது தனிமங்களிலிருந்து தோன்றும் கதிரியக்கம் மிகுந்த அளவில் பயன்பட்டு வருகிறது. தொழிற் சாலைகளில் பற்பல வகைகளில் கதிரியக்கத் தனிமங் கள் பயன்பட்டு வருகின்றன. கதிரியக்கத்தால் தோற்றுவிக்கப்படும் எரிபொருள், ஓர் இன்றியமை யாப் பொருளாகும். அணு உலைகளைப் பயன்படுத்தி யுரேனியம்-235 போன்ற கதிரியக்சு மூலங்களிலிருந்து மின்னாற்றல் உருவாக்கப்படுகிறது. வ்வகை ஆற்றல் தொடர்ந்து கிடைப்பதுடன், அதன் உற் பத்திச் செலவும் குறைகிறது. மேலும் இந்த எரி பொருள். சுற்றுப்புறச் சூழ்நிலையைத் தாக்கும் கழிவுப்பொருள்களை உண்டாக்குவதில்லை. ஆய்வு செய்யும் பொருளில், சிதைவு ஏற்படாவண்ணம் செயல்புரிகிறது. உணவுப் பொருளைப் பாதுகாக்க, விதை உருளைக்கிழங்குகள் முளைக்காமல் பாதுகாக்க, விதைச் சேமிப்புக்கிடங்குகளில் பூச்சியால் ஏற்படும் அழிவைத் தடுக்க, உணவுப் பண்டங்களைக் கெடுக் கும் பாக்டீரியா மற்றும் பூசணங்களை அழிக்க, கதிரியக்கம் பயன்படுகிறது. இவை தவிர வேளாண் ஆராய்ச்சிகளில் திடீர் மாற்றம் (mutation) மூலம் பயிர்ச் செய புதுவகைகளை உண்டாக்குவதிலும், லியல்களை ஆராய்வதிலும், மண்வள ஆய்வுகளிலும் கதிரியக்கம் பயன்படுகிறது. தற்போது சுற்றுப்புறச் சூழ்நிலை பற்றிய பலவகை ஆய்வு முறைகளுக்குக் கதிரியக்கம் துணைபுரிகிறது. கதிரியக்க ஐசோடோப் குறைய 300 6. மூசாசரீப் சாடி வை கதிரியக்கத்தைப் பற்றி ஆராயும்போது, என்பார் சில புதிய தனிமங்களைக் கண்டார். அனைத்து வகையிலும் ஒத்திருந்தாலும், நிறையிலும் கதிரியக்கப் பண்பிலும் வேறுபட்டன. இவற்றிற்கு ஒரே அணு எண்ணும், வெவ்வேறான நிறை எண்ணும் உள்ளன. இவையே ஐசோடோப்புகள் (isotopes) எனப்படுகின்றன. வேதியியல் தனிமங்களில் ஏறக் நிலையான ஐசோடோப்புகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலையற்ற ஐசோடோப்பு களும் காணப்படுகின்றன. நிலையற்ற ஐசோடோப்பு களே கதிரியக்க ஐசோடோப்புகள் (radioisotopes) எனப்படுகின்றன. ஆஸ்ட்டன் என்பாரால் செய்யப் பட்ட ஆய்வுகளிலிருந்து பெரும்பாலும் அனைத்துத் தனிமங்களுக்கும் ஐசோடோப்புகள் உண்டு என அறியப்பட்டது. ஒரு தனிமத்தில் உள்ள ஐசோ டோப்புகள் குறிப்பிட்ட விகிதத்திலேயே காணப்படு கின்றன. அந்தத் தனிமத்தை இயற்பியல், வேதி யியல் மாற்றங்களுக்கு உட்படுத்தினாலும் விகிதம் மாறுவதில்லை. கதிரியக்க ஐசோடோப்புகள் ஆல்ஃபா, பீட்டா, காமாக் கதிர்வீச்சால் வேறொரு தனிம ஐசோடோப்பு களாக மாற்றமடைகின்றன. தனிமத்தொகுதி இடப் பெயர்ச்சி விதிப்படி (group displacement law) ஒரு தனிமம் a - துகளை உமிழும்போது கிடைக்கும் புதிய தனிமம் அதன் முன்னோடித் தனிமம், தனிம மீள் வரிசை அட்டவணையில் காணப்படும் இடத்திலிருந்து