பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஐசோடோப்‌ 487

ஐசோடோப் அரைவாழ்வுக் காலம் ஐசோடோப் சில கதிரியக்க ஐசோடோப்புகளின் அரைவாழ்வுக் காலங்கள் கதிரியக்க ஐசோடோப் 487 அரைவாழ்வுக் காலம் H3 12 ஆண்டுகள் ]131 8 நாள்கள் C¹ 5700 ஆண்டுகள் Hg203 43 நாள்கள் Na 3 ஆண்டுகள் Na24 14.8 மணி Coco 5.3 ஆண்டுகள் Cu:4 12. 8 மணி psa 14.3 நாள்கள் Br2 34 மணி $39 87.1 நாள்கள் C11 21 Ca 152 நாள்கள் N13 9.9 மணித்துளி மணித்துளி 46 நாள்கள் 01 125 நொடி Fe59 சுவடு அறியும் முறையில் பயன்படும் பெரும் பர்லான கதிரியக்க ஐசோடோப்புகள் நீ - துகளை உமிழ்பவை. இவற்றைப் பயன்படுத்தும்போது கால நேரம் மிக இன்றியமையாதது. பொதுவாக, அதன் அரைவாழ்வுக் காலத்தைப் போலப் பத்து மடங்கான காலத்திற்குக் கதிரியக்க ஐசோடோப் பயனுடைய தாசு இருக்கும். அட்டவணையில் சில கதிரியக்க ஐசோடோப்புகளும் அவற்றின் அரை வாழ்வுக் காலங்களும் தரப்பட்டுள்ளன. பகுப்பறிதலில் கதிரியக்க ஐசோடோப்புகள் மிகக் குறைவாகக் கரையும் உப்புகளின் கரைதிறன்ை அறுதி யிடவும், ஒரு கரைசலில் மிக நுண்ணளவே உள்ள ஒரு பொருளின் அளவை அறுதியிடவும் பயன் படுகின்றன. கிளர்வூட்டிப் பகுத்தல். நியூட்ரான் கொண்டு தாக்கும்போது ஒரு தனிமத்திலிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐசோடோப்புகள் கதிரியக்கம் பெறுகின்றன. கதிரியக்கம் ஊட்டப்பட்ட பொருளை அதன் கதிரியக்கத்தைக் கொண்டு அடையாளம் காணமுடியும். பாறைகள், மண்வகைகள், மணல் ஆகியவையும் கிளர்வு பெறச் செய்தபின் பகுத்தறியப் படுகின்றன. அவற்றில் நுண்ணளவில் இருக்கும் தனிமங்கள் கண்டறியப்படுகின்றன. குற்றவியல் துறையிலும் இம்முறை பயன் படுகிறது. அபினி, கஞ்சா போன்ற பொருள்கள் அவை பயிரிடப்படும் மண்ணின் அமைப்பைப் பொறுத்துச் சில நுண்ணளவில் தனித்த தனிமங்களைக் கொண்டுள்ளன. எனவே இப்பொருள்களைக் கிளர் வூட்டிப் பகுத்து அவை எந்த நாட்டிலிருந்து கடத்தப் பட்டவை என்பதை உறுதிப்படுத்தலாம். வேதியியல் பயன்கள். பகுப்பாய்வு வேதியியல், மின்வேதியியல், கூழ்ம வேதியியல் போன்ற பல்வேறு வேதியியல் துறைகளிலும் கதிரியக்க ஐசோடோப்பு கள் பெரிதும் பயன்படுகின்றன. மின் வேதியியலில் அயனிகளின் பிரிகை (dissociation) பற்றியும், பரி மாற்றம் பற்றியும் அறியக் கதிரியக்க ஐசோடோப்பு கள் உதவுகின்றன. கூழ்ம வேதியியலின் சில அடிப் படைத் தத்துவங்களை உறுதிப்படுத்தக் கதிரியக்கம் உதவியுள்ளது. கதிரியக்க ஐசோடோப்புகளைக் கொண்டு விரவல் வீதம் (rate of diffusion) முடிவு செய்யப்படுகிறது. நிலவியல் பயன்கள். நிலத்தடியில் பெட்ரோலியம் உள்ளதை உறுதிப்படுத்த கதிரியக்க ஐசோடோப்புகள் பெரிதும் பயன்படுகின்றன. மேலும் நிலத்தடியில் நீர்ப்பகுதி, எண்ணெய்ப் பகுதி இவற்றின் இடைப் பட்ட தொலைவை அறுதியிடவும் கதிரியக்க ஐசோ டோப்புகள் பயன்படுகின்றன. யுரேனியம் அல்லது தோரியம் கொண்ட தாதுக்களில் இருக்கும் ஹீலியம் வளிமத்தின் அளவைக் கொண்டு கனிமத்தின் வயதைக் கணக்கிடலாம். மேலும் தொல்பொருள் ஆய்விலும் கதிரியக்க ஐசோடோப்புகள் பெரிதும் பயன்படு கின்றன. தொழில் துறைப்பயன்கள். தொழில் துறையின் ஆய்விற்கும், தரக் கட்டுப்பாட்டிற்கும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. கதிரியக்கத் தனி மங்களின் ஊடுருவும் ஆற்றல்மிக்க கதிர்களைக் கொண்டு, மூடிய தொட்டிகளில் உள்ள எண்ணெய் மட்டங்களையும், வேறு நீர்ம மட்டங்களையும் தொட்டிகளைத் திறக்காமலேயே கண்டறியலாம். பற்றவைப்புகள், வார்ப்புகள் முதலியவற்றில் உள்ள குறைகளையும் கண்டறியலாம். வண்ணம், முகத்தூள், நெகிழிப் பொருள் ஆகியவற்றில் கலக்கப் படும் பொருள்களுக்கான ஏற்ற நேரங்களைக் (optimum time) கணக்கிடலாம். மை வேளாண்மைப் பயன்கள். பல இனங்களைச் சேர்ந்த செடிகள், பல்வேறு நிலைகளில் கதிரியக்கத்திற்கு