488 கதிரியக்கக் கனிமங்கள்
488 கதிரியக்கக் கனிமங்கள் உட்படுத்தப்பட்டுப் பூச்சிகள் தாக்காத, மிகு விளைச் சலைத் தரக்கூடிய, பல பருவநிலைகளைத் தாங்கக் கூடிய கோதுமை, பார்லி, பீன்ஸ், கரும்பு போன்ற பல தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன. மருத்துவப் பயன்கள். மருத்துவத்தில், நோய்க் குறி களைக் கண்டறியக் கதிரியக்கத் தனிமங்கள் உதவு கின்றன. கதிரியக்கச் சோடியத்தைக் கொண்டு குருதிக்குழாயில் ஏற்படும் அடைப்பு எந்த இடத்தில் உள்ளதென்பதைக் கண்டுபிடிக்கலாம். இரும்பு-59 ஐ உடலில் செலுத்திச் சோகை, பாலிஸைத்தீமியா போன்ற நோய்கள் கண்டறியப்படுகின்றன. கல்லீரல், சிறுநீரகங்கள், மண்ணீரல் ஆகியவை இயல்பான உம். நிலையிலும், தாக்கமுற்ற நிலையிலும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறியக் க கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. சிறுநீரகம், கல்லீரல் பற்றி ஆராய அயோடின்-131 மண்ணீரல் பற்றி ஆய்வு செய்யக் குரோமியம்-15 உம் பயன்படுகின்றன. கணையம் பற்றி ஆராயச் செலீனியம் - 75 பயன்படுகிறது. மருத்துவத்துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதால் இந்த மருந்துப் பொருள்களைக் கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தி எந்த மருந்து ஏற்றது, உடலில் கலக்கும் ஆய்வு மருந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பவற்றை யும் அறியக் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படு கின்றன. மருத்துவ மனைகளில் கோபால்ட் -60 இலிருந்து வெளிப்படும் காமாக் கதிர்களைக் கொண்டு காயங்களுக்கான கட்டுப்பொருள்களும் (dressings1, மருந்து ஊசிகளும் அறுவை மருத்துவத் தையல் பொருள்களும் நோய் நுண் ஒழிப்புச் (sterilisation செய்யப்படுகின்றன. காண்க, கதிரியக்க அணுக் கருவினம். ஜா.சுதாகர் கதிரியக்கக் கனிமங்கள் இயற்கையாகக் கிடைக்கும் கனிமங்களில் சில ,8,7 எனும் சில கதிர்களை வெளிப்படுத்தியவாறு மாற்றம் பெறுகின்றன. மேலும் உயர் வெப்பத்தையும் இவை வெளிவிடுகின்றன. இது து கதிரியக்கம் எனப்படும். இவ்வாறு சுதிர்களை வெளிப்படுத்தியவாறு மாற்ற மடைந்து பெருமளவில் ஆற்றலையும் வெளிவிடும் கனிமங்கள் கதிரியக்கக் கனிமங்கள் (radioactive minerals) எனப்படும். கனிமங்கள் பல கதிரியக்கக் உள்ளன. அவற்றில் முக்கியமானவை யுரேனியம், தோரியம், ரேடியம் முதலியனவாகும். கள் யுரேனியம், இது உலோகங்களுள் ஒன்று. யுரேனியத்திலிருந்து சிதைந்து அதிலிருந்து கிடைப் பது ரேடியமாகும். ரேடியம் கிடைப்பது அரிது. யுரேனியம் இயற்கையில் பல கனிமங்களுடன் சேர்ந்து கிடைக்கிறது. அதில் சில கனிமங்கள் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கேற்கின்றன. அவற்றுள் முக்கியமான மூலத்தாதுக்கள் பின்வருமாறு: பிச்பிளெண்டு. இதில் 50-90%U0, உம், UO, உம் இருக்கும். யுரேனி டைட், இதில் 65-80%UO, உம், U0, உம் இருக்கும். சமார்ஸ்கைட். இதில் 9-18%U0, உம், UO, உம் இருக்கும். தோரியனைட், இதில் 12-33%U0, உம், UO, உம் இருக்கும். இதன் அடர்த்தி எண் 18.68. இது கதிரியக்கத் தன்மையுடையது. இதுa,B,y கதிர்களைத் தொடர்ச்சி யாக வெளியிட்டுக் கொண்டே இருக்கும். யுரேனியம், வரிசையாகப் பல தனிமங்களாகவும், ஐசோடோப்புகளாகவும் மாறிக்கொண்டே வந்து முடிவில் ஈயத்தை விளைவிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் மூன்று ஐசோடோப்புகள் உள்ளன. அவை U-238 (99.3%), U-235 (0.7%), U-234 (0.00% 6). யுரேனியத்துடன் சிறிதளவு ரேடியமும் கலந்துள்ளது. ரண்டாம் உலகப் போருக்கு முன் ரேடியத்துக்காகவே இக்கனிமத்தை எடுத்தனர். பயன் பயன், ரேடியம் மருத்துவத்துறையில் புற்று நோயை நலமாக்கப் பயன்படுகிறது. உலோகங் களிலும், உலோகக் கலவைகளிலும் உள்ள குறைகளை அறிந்துகொள்ள உதவுகிறது. ஒளிரும் நெய்வனங்கள் (luminescent paints) செய்யப் பயன்படுகிறது. யுரேனியம் -- 235 அணுகுண்டுகளைத் தயாரிக்கவும். அணு ஆயுதப் படைக்கலங்களைச் செய்யவும், அணு ஆற்றல் நிலையங்களில் எரிபொருளாகவும் படுகிறது. யுரேனியத்தின் ஐசோடோப் பல ஆராய்ச் சித் துறைகளில் பயன்படுகிறது. 0.45 கிலோகிராம் யுரேனியத்திலிருந்து வெப்ப பெறக்கூடிய ஆற்றல் 1300 டன் நிலக்கரியில் இருந்து பெறக்கூடிய ஆற்றலுக்குச் சமமாகும். மேலும் யுரேனிய உப்புகள் கண்ணாடிகளுக்குப் பலவகை நிறங்களைக் கொடுப்ப தற்கும், எஃகு, தாமிரம், நிக்கல் போன்றவற்றோடு உலோகக் கலவைகள் செய்வதற்கும் பயன்படு கின்றன. எடை கனிமங்கள் பிட்சுபிளெண்டு. இது யுரேனியத்தின் முக்கிய மூலத்தாதுவாகும். அரிய தனுடன் தனிமங் களான கோபால்ட்டும். நிக்கலும் சேர்ந்து கிடைக்