கதிரியக்கக் கழிவுகள் 491
வைத்து ஆய்வு செய்த தொடக்ககால ஆய்வாளர் கள் உயிருக்குக் கேடு தரும் வகையில் சுதிர்களால் பாதிக்கப்பட்டனர். மேரிகியூரியும் அவருடைய மகள் ஐரீனும் இரத்தச்சோகை நோயால் இறந்தனர். 1920. ல் கடிகார முகப்புகளில் ரேடியத்தைப் பூசுவதில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் தூரிகைகளைக் கூர்மையாக்குவதற்காக அவற்றை வாயிலிட்டு ஈரப்படுத்தியதன் காரணமாக நோயுற்று இறந்தனர். எக்ஸ் கதிர்கள் நடைமுறைக்கு வந்தபிறகு இரத்தச்சோகை நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது. எக்ஸ் கதிர்க்கருவிகளை இயக்கு வோரில் காணும் விகிதம் பொது மக்கள் விகிதத்தைப் போலப் பத்துமடங்காக உள்ளது. அணுக்கருப் பிளவு உத்திகள் அந்தத் தீமையைப் பன்மடங்காக உயர்த்தி யுள்ளன. அணுகுண்டு. அணு உலை இவற்றிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் உலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் காற்றையும் கடலையும் நச்சாக்கி விடுகிறது. யுரேனியம் அல்லது புளுட்டோனிய அணுக்கருக் கள் பிளவுபடும்போது ஏறத்தாழ 200 வகை கதிரியக்கப் பொருள்கள் வெளிப்படுகின்றன. அவற்றில் சில நியூட்ரான்களை விரைவாக உட் கவர்ந்து பிளவு வினைகளைத் தடுத்து இடையூறு செய்வதால், அணு உலையில் உள்ள எரிபொருளை அடிக்கடி வெளியிலெடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது. இந்தக் கதிரியக்கப் பொருள்கள் அனைத்துமே வெவ்வேறு அளவுகளில் உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. அவற்றின் தன்மையையும், ஆற்றலையும், சிதைவு வேகத்தையும் பொறுத்து அவற்றின் தீங்கு விளைவு அமையும். உடலில் புகும் பீட்டாத் துகள்களை விட ஆல்ஃபாத் துகள்கள் மிகு தீங்கானவை. மெதுவாகச் சிதையும் பொருளை விட வேகமாகச் சிதையும் பொருள் பெருமளவு கதிர் வீச்சை வெளியிட்டு மிகுதியாகத் தீங்கு விளைவிக்கும். அணுவிலிருந்து ஆற்றல் பெறும் திட்டங்கள் தொடங்கப்பட்டபோது அறிவியலார் கதிரியக்கத்தின் கொடுமையைப் பட்டறிவின் மூலம் தெரிந்து கொண்டனர். பணியாளர்களைப் பாதுகாக்க விரி வான நடவடிக்கைகளை எடுத்தனர். கதிரியக்கப் பொருள்கள் தடித்த சுவர்களை உடையE அறை களில் வைக்கப்பட்டன. அவற்றை எந்திரங்களின் உதவியுடன் தொலைக் கட்டுப்பாட்டு முறைகளில் கையாண்டனர். தீங்கு ஏற்படாத அளவுக்கு எவ் கதிரியக்கத்தை உடல் ஏற்றுக்கொள்ளும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் செய்யப் பட்டன. கதிரியக்கக் கழிவுகளைப் பாதுகாப்பாக வெளியேற்றப் பல புதிய உத்திகள் கண்டுபிடிக்கப் வளவு பட்டன. கதிரியக்கக் கழிவுகள் 491 கதிரியக்கக் கழிவுகளில் பெரும்பகுதி சில வாரங் களுக்குள் வலிவிழந்து விடும். அவை தம் கதிரியக் கத்தை இழந்தவுடன் வெளியே கொட்டப்படு கின்றன. ஒன்று முதல் 30 ஆண்டுகள் வரை அரை ஆயுள் உள்ள கதிரியக்கக் கழிவுகளே தீங்கானவை. அவை குறைந்த அரை ஆயுள் உள்ளவையாதலால் செறிவு மிக்க கதிர்களை வெளியிடும். அதே சமயத் தில் பல பரம்பரைகளைத் தாக்குமளவிற்குப் போது மான வாழ்நாளுடையவை. 30 ஆண்டு அரை ஆயுள் உள்ள ஓர் அணுக்கருத் துகள் 200 ஆண்டு ஆன. பிறகே தன் கதிரியக்கத்தில் 99% ஐ இழக்கும். பிணைவு (fusion) விளைபொருள்களைப் பல வகைகளில் பயன்படுத்தலாம். அவற்றிலிருந்து வரும் கதிர் ஆற்றலை வெப்பமாக மாற்றி அந்த வெப்பத்தை வெப்பமின் இரட்டைகள் (thermo couple) மூலம் மின்னாற்றலாக மாற்றலாம். சிறிய கருவிகளை இயக்க அவை போதுமான ஆற்றலைத் தரும். ஸ்ட்ரான்ஷியம் -90, புளுட்டோனியம், கியூரியம் போன்ற ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி லேசான, பல ஆண்டுகள் பயன்படும் அணு மின்கலங்களை அமைத்து விண்வெளிக்கலங்களில் பயன்படுத்து கின்றனர். விளை பிணைவு விளைபொருள்கள் புற்றுநோய் மருத் துவம், நுண்ணுயிர் நீக்கம், உட்பொருள் பாதுகாப்பு, வேதிப் பொருள் உற்பத்தி போன்ற பல துறைகளில் பயன்படுகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் பயன் படுத்தியது போக மிகுதியான பிணைவு பொருள்கள் எஞ்சியுள்ளன. ணு உலைகள் தொடர்ந்து பலப்பல கதிரியக்க எச்சங்களை வெளி யிட்டுக் கொண்டேயுள்ளன. அவற்றுடன் எதிர் பாராத அணுகுண்டு வெடிப்புகளால் பல பிணைவு விளைபொருள்கள் திடீரென்று காற்றிலும் கடலிலும் தரையிலும் பரவி விடக்கூடிய தீமை உள்ளது. அணு உலைகளிலும் பல சமயங்களில் வெடி விபத்துகள் ஏற்பட்டுப் பலர் இறந்துள்ளனர். ஓர் அணுமின் நிலையத்தில் இரண்டு லட்சம் இரண்டு லட்சம் கிலோவாட் மின் சாரத்தை உண்டாக்கும் போதெல்லாம் 0.675 கிலோ கிராம் நிறையுள்ள கதிரியக்கக் கழிவுகள் ஒவ்வொரு நாளும் உண்டாகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகுதியான கதிரியக்க நீர்மத்தைத் தரைக்கடியில் புதைத்து வைத்துள்ளனர்.கி.பி. 2000 ஆண்டுக்குள் ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சம் காலன் கதிரியக்க நீர்மத்தைக் கழித்து விட வேண்டிய நிலை ஏற்படும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து அறிவியலார் கதிரியக்கக் கழிவுகளைக் கற்காரை உருளைகளில் அடைத்து ஆழ் கடலில் அமிழ்த்தி வைத்துள்ளனர். பழைய உப்புச் சுரங்கங்களின் ஆழத்தில் அவற்றைச் சேமித்து வைக்கவும், அவற்றை உருகிய கண்ணாடி அல்லது ஸின்ராக் (synrock) என்னும்