பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 கதிரியக்கங்‌ காணல்‌

492 கதிரியக்கங் காணல் செயற்கைப் பாறையினாலான உறைகளிலிட்டுப் புவியில் புதைத்து விடவும் திட்டங்கள் தீட்டப்படு கின்றன. ஆனால் அவை எவ்வாறேனும் கசிந்து வெளிப்பட்டுப் பெருந்தீங்கை உண்டாக்கிவிடலாம் என்னும் அச்சமும் உள்ளது. அணுஆற்றலால் இயங்கும் விண்வெளிக் கலங்களும், நீர் மூழ்கிக் கப்பல் களும் விபத்துக்குள்ளாகலாம் என்னும் அச்சமும் இருக்கிறது. திரெஷர் என்னும் அமெரிக்க நீர் மூழ்கி 1963 ஏப்ரல் மாதத்தில் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிவிட்டது. ஆனால் இதுவரை அதிலிருந்து கதிரியக்கம் எதுவும் வெளிப்படவில்லை. அணுகுண்டு ஆய்வுகளின் காரணமாகச் சிதறப் படும் கதிரியக்கச் சாம்பல், கட்டுப்படுத்த முடியாத நச்சாகும். அவற்றின் காரணமாகப் புற்றுநோய், மரபியல் கோளாறுகள் போன்றவை தோன்றலாம். கதிரியக்கச் சாம்பலிலுள்ள ஸ்ட்ரான்ஷியம் - 90 என்னும் ஐசோடோப் உடலில் புகுந்தால் எலும்பு களில் தங்கி நீண்ட நாள் நிலைத்துவிடும். அது உடலில் இரத்தச்சோகைநோய், புற்றுநோய் போன்ற வற்றை உண்டாக்கும். கதிரியக்கங் காணல் ரா. சேகரன் அணுத்துகள்கள், உள் அணுத் துகள்கள், மின் காந்தக் கதிர்கள் ஆகியவற்றைக் கண்டு, அவற்றின் தன்மை களை ஆராய்தலே கதிரியக்கங்காணல் (radiation detection) ஆகும். இத்தகைய கதிர்கள் சூரியன், விண்மீன்களிலிருந்து வெளிவருகின்றன. மேலும் கீழ்க் காணும் சூழ்நிலைகளிலும் இக்கதிர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அவை பேரண்டக் கதிர்கள் (cosmic rays), அணுக்கரு உலைகள் (nuclear reactors), அணுக்கரு இயற்பியல் ஆய்வுகள். அணுக்கரு மருத்துவம், கதிரியக்க ஐசோடோப்புகள் கொண்ட மருந்துகளைப் பயன்படுத்துதல், மூலப்பொருள் தேடல் (யுரேனியத்தாதுக்கள், எண்ணெய் தேடல்). உயிரினங்கள் மீது படும் கதிர்வீச்சு அளவைக் கண் காணிக்கும் உடல்நிலை இயற்பியல் தொடர்பான ஆய்வுகள் ஆகும். பருப்பொருளில் கதிர் வீச்சின் இடையீட்டுச் செயல்கள் (interaction of radiation with matter). பருப்பொருளில் கதிர்வீச்சின் இடையீட்டுச் செயல் களினால் கதிரியக்கத்தை அறியலாம். மின்னூட்ட முள்ள துகள்கள் பருப்பொருளை ஊடுருவிச் செல்லும் போது, அதன் பாதையில் உள்ள அணுக்கள். மூலக் கூறுகள் ஆகியவற்றைக் கிளர்விக்கின்றன ; அயனி யாக்குகின்றன. இதனால் அயனி - இரட்டைகள் (ion pairs) உண்டாக்கப்படுகின்றன. ஓர் அயனி - இரட்டை யைத் தோற்றுவிக்க 30 - 35ey அளவுள்ள ஆற்றல் தேவைப்படுகிறது. புரோட்டான், க.நீ கதிர்கள் ஒரே முறையில் தங்கள் ஆற்றலை இழக்கின்றன. ஆனால் அவற்றின் அயனியாக்க எண் வேறுபடும். காட்டாக, ஒரு செ.மீ. நீளமுள்ள பாதையில் a - கதிர் ஏறத்தாழ 25.000 அயனி இரட்டைகளையும், நீ-சுதிர் 60 அயனி இரட்டைகளையும் தோற்றுவிக்கும்.நீ கதிர்களின் நெடுக்கம் மிகுதியானது. ஊடகத்தில் உள்ள அணுக்கருக்களுடன் இடை யீட்டுச் செயல்களில் ஈடுபடுவதால் 8 கதிர்களின் பாதை வழுவும். ஊடகத்தில் உள்ள அணு எலெக்ட் ரான்கள் (atomic electrons), அணுக்கருக்கள் ஆகிய வற்றுடன் மீட்சி மோதுகை (elastic scattering), மீட்சி யிலா (inelastic) மோதுகை ஆகிய செயல்பாடுகளில் எலெக்ட்ரான்கள் தங்கள் ஆற்றலை இழக்கும். மிக வேகமாகச் செல்லும் எலெக்ட்ரான்கள் ஊடகத்தில் வேகத்தடைக்கு உள்ளானால், கதிர்கள் அல்லது ஃபோட்டான்கள் தோன்றும். இதை, பிரெம்ஸ்ஸ்ட் ராலங் (bremsstahlung) என்பர். இந்த ஜெர்மன் சொல்லின் பொருள் கதிர்வீச்சுத் தடுப்பு என்பதாகும். இக்கதிர்வீச்சு இரண்டாம் நிலை அயனியாக்கத்தைத் (secondary ionization) தூண்டும். நியூட்ரான்கள் (n), காமாக் கதிர்கள் மறைமுகமாக ஊடகத்தில் அயனியாக்கத்தைத் தோற்றுவிக்கின்றன. சில அணுக் கருக்கள் நியூட்ரான்களைக் கவரும்போது அணுக் கரு வினைகள் (nuclear reaction) தூண்டப்படுவதால் மின்னூட்டமுள்ள துகள்கள் தோன்றுகின்றன. B10 on Li² + a 22U235 + onit FISSION +' (1) (2) காமக்கதிர்களின் ஆற்றல், ஊடகத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, ஒளி மின் விளைவு, காம்ப்டன் விளைவு, இரட்டைத் துகளாக்கம் (pair production) ஆகிய முறைகளில் காமாக் கதிர்கள் ஆற்றலை இழக்கின்றன. . ஒளி மின் விளைவில், காமாக்கதிர்களை உட் கவரும் அணுவிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளி யேற்றப்படுகின்றன. குறைந்த ஆற்றல் உள்ள காமாக்கதிர்கள் தனிமம் கொண்ட ஊடகத்தில் செல்லும்போது இவ்விளைவு மிகுந்து காணப்படும். காம்ப்டன் விளைவில், காமாக்கதிர், தன் ஆற்றலில் ஒரு பகுதியை வெளியேற்றப்பட்ட எலெக்ட்ரானுடன் மீட்சியிலா மோதலில் இழந்து, மாறுபட்ட பாதை யில் செல்லும். 3 MeV - க்கும் குறைவான ஆற்றல் உள்ள காமாக்கதிர்கள் குறை இலக்குகளைத் (light target) தாக்கும்போது இவ்விளைவு சிறப்புப் பெறு கிறது. காமாக்கதிர் தன்னை அழித்துக் கொண்டு பாசிட்ரான் எலெக்ட்ரான்களாக வெளிவரும் செயல் இரட்டைத் துகளாக்கம் எனப்படும். 1.02 MeV -க்கும் மேற்பட்ட ஆற்றல் உள்ள காமாக் கதிர்கள்