பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 கதிரியக்கங்‌ காணல்‌

496 கதிரியக்கங்காணல் இழந்த ஆற்றல் அப்பொருளிலேயே தங்கிவிடுகிறது. அப்பொருளைச் சூடாக்கும்போது தேங்கியிருந்த ஆற்றல் ஒளிக்கதிராக வெளிவருகிறது. இத்தகைய பொருள்கள் வெப்ப ஒளிர்வுப் பொருள்கள் (thermo luminiscent materials) எனப்படும். மாங்கனீஸ் கொண்டு ஊக்குவிக்கப்பட்ட கால்சியம் ஃபுளுரைடு இப்பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதை 200° 260° C வெப்ப நிலைக்குச் சூடாக்கினால் ஒளிக் கதிர்கள் வெளிவரும். ஒளி மின்சாரப் பெருக்கி உதவி கொண்டு இவ்வொளிக் கதிர்களைக் கண்டறியலாம். கதிரியக்கம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளோர் வெறும் கதிர்வீச்சு அளவைக் (radiation dose) கண்டறிய வெப்ப ஒளிர்வுப் பொருள்கள் கொண்ட அளவு மானிகள் (dosimeters) பயன்படுகின்றன. குறை கடத்திக் காணி (semiconductor detector). அயனியாக்க எண்ணி, ஒளித்துடிப்பு எண்ணி ஆகிய வற்றைவிடக் குறை கடத்திக் காணி எளிதானது. உணர்வு நுட்பம் மிகுந்தது; விரைவாகக் கதிர் வீச்சைக் காணவல்லது; கதிர்வீச்சின் ஆற்றலை நுட்பமாக உணர வல்லது. இம்முறைக்கு மிகவும் ஏற்ற காணி ஜெர்மேனியமும் சிலிகானும் ஆகும். {p-type) (காட்டு: சிலிகான்) n-வகை (n-type) (காட்டு: பாஸ்ஃபரஸ் கலப்புக் கொண்ட சிலிகான்) குறைகடத்திகள் இணைக்கப்பட்ட சந்திப்பு (junction) ஆகும் (படம் 5அ). மின்புலத்தில் இப்பொதுமுகத்தில் (interface ) முக்கிய காணியின் பகுதி p வகை போரான் கலப்புக் கொண்ட துளைகளோ எலெக்ட்ரான்களோ இரா (படம்) அயனியாக்கக் கதிர்வீச்சு இப்பகுதியில் படும் போது துளைகளும், எலெக்ட்ரான்களும் தோற்று விக்கப்படுகின்றன (படம்-5இ). மின்னழுத்தம் உள்ள தால், அயனிகள் எதிர் மின்முனைகளுக்குச் செல் கின்றன. இதனால் தோன்றும் மின்துடிப்பைக் (electrical pulse) கணக்கிடலாம். பரவலாகப் பயன் படும் குறை கடத்தி லித்தியம் கலப்புக் கொண்ட ஜெர்மானியக் காணியாகும். p-வகை ஜெர்மானியம் முதலில் தயாரிக்கப்பட்டு, அதில் லித்தியம் நகர்வுறச் செய்யப்படுகிறது. இதனால் n -வகை ஜெர்மானியம் தோன்றும். வெப்ப அதிர்வால் (thermal agitation) உண்டாகும் இரைச்சல் மின்னழுத்தத்தைக் (noise voltage) குறைக்க Ge (Li) காணியை எப்போதும் நீர்ம நைட்ரஜன் வெப்பநிலையில் குளிர்வித்துப் (-196°C) பாதுகாக்க வேண்டும். துணைக்கருவிகள். கதிர்வீச்சுக் காணியிலிருந்து வெளிவரும் மின்துடிப்பைப் பகுத்து ஆராய்வதற்கு முன் அதைப் பதனிட வேண்டும். இதற்குப் பயன் படும் துணைக் கருவிகளின் அமைப்பு, படம் 6இல் தரப்பட்டுள்ளது. உள்ள காணியில் மின் முனைகளுக்கும் பிற துணை வினைகளுக்கும் (secondary process) தேவை யான உயர் மட்ட மின்னழுத்தம் திறன் கொடுப்பா னால் (power supply) தரப்படுகிறது. காணியிலிருந்து வெளிவரும் மின்துடிப்பை உருவமைக்க மிகைப்பிக்கு மு காணி முன் மிகைப்பி மிகைப்பி மேல்பாருபடுத்தி ண்கேவர். உயர் மட்ட மின்முைததம் கீழ்குடுக்தி பாகுபடுத்தி இருமுன்ன ஆய்வு ஸ்கேலர் பல்முனை ஆய்வு பதிப்பி பதிப்பி பல் முனை ஆய்வு படம் 6.கதிர்வீச்சுக்காணலில் பயன்படுத்தப்படும் துணைக்கருவிகளின் அமைப்புப் படம்.