பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம்‌ 497

அனுப்பப்படுகிறது. ஒரு வழி ஆய்வில் (single channel analyser) இத்துடிப்பு நேரிடையாகக் கணக்கிடப்படும். பல் வழி ஆய்வில் (multi channel analyser) மிகைப் படுத்தப்பட்ட துடிப்பு, பாகுபடுத்திக்குச் (discrimi- nator) செல்லும். குறிப்பிட்ட மின்னழுத்த இடை வெளியில் உள்ள துடிப்பு மட்டுமே பாகுபடுத்தியி லிருந்து வெளிவரும். இச்செயலினால் படுகதிரை ஆற்றல் வாரியாகப் பகுப்பாய முடியும். ஸ்கேலர் (scaler) என்னும் கருவி துடிப்புகளை எண்ணுவது. ஒரு குறிப்பிட்ட கால டைவெளியில் உணரப்படும் துடிப்புகள் எண்ணப்படும். அனைத்து எண்ணி அல்லது காணிகளுக்கும் பின்னணி இயக்கம் (background activity) (B) இருக்கும். மொத்த எண்ணிக்கை A ஆக இருக்குமானால், கதிரியக்க மூலத்தின் இயக்கம் (A-B) ஆகும். கணக்கிடப்பட்ட மொத்த எண்ணிக்கை N - ஆக இருக்குமானால், தரமான விலக்கம் ஏ. (standard deviation), σ =√N ஆகும். சராசரி மதிப்புக்கும் பதிவான மதிப்புக்கும் இடையே உள்ள சிதறலைத் (scatter) தரமான விலக்கம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அயனியாக்கச் செயலைப் பதிவு செய்யும் காணிகள். வளிம் ஊடகத்தில் கதிர்வீச்சுத் தோற்றுவிக்கும் அயனியாக்கத்தை நேரிடையாகவும் பதிவு செய்ய லாம். முகில் அறையில் (cloud chamber) தெவிட்டிய நிலையில் உள்ள வளிமம் நிரப்பப்பட்டு இருக்கும் அறையை விரிவடையச் செய்யும்போது வளிமம் குளிர்விக்கப்பட்டு மிகத் தெவிட்டிய நிலையை அடை "கிறது. இந்நிலையில் வளிமம் திவலைகளாக அயனி கள் மீது படியும். திவலைகள் மூலம் தெளிவு செய்யப்பட்ட அயனியாக்கப்பட்ட பாதையை ஒளிப் படம் மூலம் பதிவு செய்யலாம். தூசுகள் இருக்கக்கூடா. ஏனெனில் இத்தூசுகள் மீது சொட்டுகள் படியும். கதிரியக்கம் 497 சேர்மம் கொண்ட கலவையால் ஆனது. தட்டின் வழியே கதிர்வீச்சுச் செல்லும்போது, அது இழக்கும் ஆற்றல், வெள்ளி -புரோமின் ஆகிய அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை அறுக்கிறது. தட்டைக் கழுவும்போது உருவாகும் வெள்ளி புரோமைடு மணிகள் கதிர்வீச்சின் பாதையைக் காட்டும். இவ்வணுகுமுறை உதவிகொண்டு கதிர்வீச்சின் தன்மை, ஆற்றல் ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். பேரண்டக்கதிர் ஆராய்ச்சியில் இம்முறையைக் கையாளுகின்றனர். தனி மனிதருக் குக் கிடைக்கும் கதிர்வீச்சு அளவை அளக்கவும் ஒளிப் படத் தட்டுகள் பயன்படுகின்றன. சுதிரியக்க அலகு. கதிரியக்கப் பொருளின் வலிமை கியூரி என்னும் அலகில் அளக்கப்படுகிறது. 1நொடி யில் 3.70×100 சிதைவுகள் உண்டானால் அது ஒரு கியூரி அளவுள்ள கதிரியக்கம் ஆகும். எக்ஸ்கதிர், காமாக் கதிர்களின் வலிமையை ராண்ட்ஜன் என்னும் அலகில் அளக்கின்றனர். 0.001293 கிராம் நிறை யுள்ள காற்றில் ஒரு ராண்ட்ஜன் அளவுள்ள கதிரி யக்கம் ஒரு நிலைமின் அளவு கொண்ட மின்னூட்டத் துகள்களை (நேர்மின் அல்லது எதிர் மின்) தோற்றுத் விக்கும். கதிர்வீச்சு அளவை ராடு என்னும் அலகிலும் அளக்கலாம். ஒரு கிராம் நிறையுள்ள பொருளில் 100 எர்க் அளவு ஆற்றலை இழக்கும் கதிர்வீச்சின் வலிமை ஒரு ராடு ஆகும். கதிரியக்கப் பொருள்களுடனோ, கதிர்வீசும் மூலத்துடனோ பணிபுரியும் மக்கள் பெறும் கதிர் வீச்சு அளவை அளக்க, கதிரியக்க அளவிகள் பயன் பட படுகின்றன. இதற்கு வெப்ப ஒளிர்வுகாணி, இவ்வறையில் ஒளிப் த்தட்டு, காற்று நிரப்பப்பட்ட அயனிக்கலம் கொண்ட பேனா கதிரியக்க அளவி ஆகியவை பயன் படுகின்றன. குமிழ் அறையும். மேற்கூறிய தத்துவத்தில் இயங்குகிறது. இவ்வறையில் சூடாக்கப்பட்ட மிகத் தெவிட்டிய நிலையில் உள்ள வளிமம் அழுத்த நிலை யில் இருக்கும். டை எத்தில் ஈதர் இதில் பயன்படும் பொருள்களில் ஒன்று. தகுந்த வளிமங்கள் கொண்டு நியூட்ரான்களையும் கண்டறியலாம். உயர் பொறி அறையில் அறையில் (spark chamber) மின்னழுத்தம், (காட்டு: 20 KV) வரிசையாக அமைக்கப்பட்ட தகடுகள் இடையே பாயும்போது பொறியைத் தூண்டும். இப்பொறி அயனியாக்கப் பட்ட பாதையில் தோன்றும். மேற்கூறிய காணிகளில் காந்தப்புலன் மூலம் அயனியாக்கத்துக்குக் காரண மான துகள்களின் மின்னேற்றம், உந்தம், நிறை போன்ற பண்புகளை அறிந்து கொள்ளலாம். கதிர்வீச்சைக் கண்டறிய ஒளிப்படத்தட்டும் பயன்படுகிறது. ஒளிப்படத்தட்டு வெள்ளி புரோமைடு VOL 7 - பா. வெங்கடரமணி நூலோதி.R.M. Singru Introduction to Experi- mental Nuclear physies, Wiley Eastern Pvt. Ltd, Delhi, 1974; H.H. Willard, L.L. Merritt and J. A. Dean, Iastrumental methods of Analysis, Van Nostr- and-East west Press Ltd, New Delhi, 1965. கதிரியக்கம் அணுக்கரு தன்னியல்பாகச் சிதைவுறுவது கதிரி யக்கம் (radioactivity) எனப்படும். 1896 ஆண்டில் ஹென்றி பெக்குரல் என்பார் கதிரியக்கத் தைக் கண்டறிந்தார். கதிரியக்கம் இரு வகையாகப் பகுக்கப்படுகிறது. அவை இயல்புக் கதிரியக்கம்