பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 கதிரியக்கம்‌

498 கதிரியக்கம் (natural rodioactivity), செயற்கைக் கதிரியக்கம் (artificial radioactivity) என்பவையாகும். ஒரு இயல்புக் கதிரியக்கம். இக்கதிரியக்கம். வேதித் தனிமத்தின் நிலையில்லா ஐசோடோப்பின் அணுக்கருக்கள் புறத்தூண்டுதல் இல்லாமல் தன் னியல்பாகச் சிதைவுற்று மற்றொரு தனிம ஐசோ டோப்பின் அணுக்கருக்கள் ஆவதாகும். சில குறிப் பிட்டதுகள்களைத் தனிமம் உமிழ்வதால் கதிரியக்கம் நடைபெறுகிறது. இயல்புக் கதிரியக்கம், ஈயத்தின் அணுக்கரு எடையைவிடப் பெரும மதிப்புடைய தனிமங்களில் நிகழ்கிறது. அணு எடை குறைவாகக் கொண்ட பொட்டாசியம் ஐசோடோப் (16K*0), கார்பன் ஐசோடோப் ( C), ருபீடியம் ஐசோடோப் (,ே Rb) போன்ற சில தனிமங்களும் அவற்றின் இயல்பான நிலைகளில் ஓரளவு கதிரியக்கத் தன்மையைக் கொண்டுள்ளன. கதிரியக்கத் தனிமம் உமிழும் கதிர்களின் இயல்பை அறிய ரூதர்ஃபோர்டு மேற்கொண்ட ஆய்வுகள் மூவகையானவை என உணர்த்தின. ஒரு காரீயப் பாளத்தில் இடப்பட்டுள்ள ஆழமான துளையின் அடியில் கதிரியக்கத் தன்மையுடைய பொருளான ரேடியம் வைக்கப்படுகிறது. இதனால் பாளத்தின் மேற்பகுதியிலிருந்து மட்டும் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. காரீயச் சுவர்ப் பகுதியை அடை யும் கதிர்கள் புறப்பரப்பை அடையுமுன் உள்ளேற்கப் படுகின்றன. வெளிப்படும் கதிர்வீச்சை இணையாக அமைந்த மின்னூட்டம் உள்ள இரண்டு தகடுகளின் நடுவே செல்லும்படிச் செய்யும்போது படம் 1 இல் காட்டியபடி ஒருவகைக் கதிர்கள் இடப்பக்கமும் இன்னொரு வகைக் கதிர்கள் வலப்பக்கமும் விலகல் அடைகின்றன. மூன்றாம் வகைக் கதிர்கள் இந்த மின்புலத்தால் பாதிக்கப்படாமல் நேராகவே செல் கின்றன. காரீயப் பாளத்தில் வைக்கப்பட்டுள்ள ரேடியம் அமைப்பை இப்போது மின்புலத்தைவிட்டு எடுத்துக் காந்தப்புலத்தில் வைக்கும்போது படம் 2இல் காட்டியபடி ஒரு வகைக் கதிர்கள் இடப்பக்கமும், மற்றொரு வகைக் கதிர்கள் வலப்பக்கமும் விலகல் அடைகின்றன. மூன்றாம் வகைக் கதிர்கள் காந்தப் புலத்தால் பாதிக்கப்படாமல் நேராகவே செல் கின் ன்றன. இடப்பக்கம் விலகிச் செல்லும் கதிர்கள் நேர் மின்னூட்டங்கொண்ட ஆல்ஃபாத் துகள்களைக் கொண்டுள்ளன. இவ்வகைக் கதிர்கள் ஆல்ஃபாக் கதிர்கள் எனப்படும். வலப்பக்கம் விலகிச் செல்லும் கதிர்கள் எதிர்மின்னூட்டம் கொண்ட பீட்டாத் துகள்களைக் கொண்டுள்ளன. இவை கதிர்கள் எனப்படும். மின்புலத்தாலும், புலத்தாலும் தாக்குறாமல் நேராகச் பீட்டாக் காந்தப் செல்லும் 1 1 1 1.1 ன்புலம் + ரேடியம், + படம் 1:படம் 2. கதிர்கள் மின்னூட்டமில்லாதவை. வை காமாக் கதிர்கள் அல்லது ஃபோட்டான்கள் எனப்படும். ரு ஆல்ஃபாக் கதிர் நேர்மின்னூட்டம் இரண்டு கொண்ட ஹீலிய அணுக்கரு ஆகும். அதாவது ஹீலியம் அணுவிலிருந்து இரண்டு எலெக்ட்ரான்களை நீக்கி விட்டால் இத்துகள் கிடைக்கிறது. ஆல்ஃபாத் துகள் ஹைட்ரஜன் அணுக்கருவைப் போன்று இரு மடங்கு நேர்மின்னூட்டமும் நான்கு மடங்கு அணு எடையும் கொண்டது. பீட்டாக் கதிர்கள் 10MeV ஆற்றலுடைய, மிகுவேக எலெக்ட்ரான்கள் ஆகும். பீட்டாத் துகள்களின் நிறை ஹைட்ரஜன் அணுவின் நிறையில். பங்கு ஆகும். வெற்றிடத் தில் இவற்றின் திசைவேகம் ஏறத்தாழ ஒளியின் திசை வேகத்தை ஒத்திருக்கும். வரை 1 1836 காமாக் கதிர்கள் மின்காந்த அலைகளாகும். கதிர்களின் அதிர்வெண் கடின எக்ஸ் கதிர்களை விட மிகுதி. எனவே, இக்கதிர்கள் மிகு ஊடுருவும் திறன் வாய்ந்தவை. பெக்குரல் கதிர்கள் அல்லது ஆல்ஃபா, பீட்டா, காமாக் கதிர்கள் வளிம, நீர்ம திண்மப் பொருள்கள் ஊடே செல்லும்போது செல்லும் வழியில் உள்ள அணுக்களை அயனிகளாக்குகின்றன. இறுதியில் இக்கதிர்கள் ஓய்ந்து விடுகின்றன. கதி ரியக்கப் பொருள்களிலிருந்து இக்கதிர்கள் மிகு வேகத்துடன் தம் பாதையில் இருக்கும் அணுவின் எலெக்ட்ரான்களுடன் மோதி, மோதலால் அணுவிலிருந்து எலெக்ட்ரான்களை நீக்கி அணுக்களை அயனியாக்கம் செய்கின்றன. எனவே, இக்கதிர்கள் அயனியாக்கும் காரணிகள் (ionising agents) எனப் படும். ஆல்ஃபாத் துகள்கள் பீட்டாத் துகள்களை