பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியல்‌ படம்‌ 503

வரும் பொருள்களைச் பிடிக்கவும் இது உதவுகிறது. சுங்கத்துறையினர் கண்டு எம்.கே.சிவக்கொழுந்து கதிரியல் ஆய்வும் முறைகளும் எக்ஸ் கதிர்களின் உதவியால் நோய்களை ஆய்ந்தறிய அளவற்ற முறைகள் உள்ளன. அவை நோயாளிகளை எக்ஸ்கதிர்களின் உதவியால் நேரில் ஆய்வு செய்வதும் அவர்களுக்கு எடுக்கப்படும் படங்களை ஆய்வு செய்து முடிவுக்கு வருதலும் ஆக இருவகைப்படும். சில சமயங்களில் ஒரு நோயாளிக்கு இவ்விரு முறைகளும் மேற்கொள்ளப்படும். நேரில் ஆய்வு செய்யும்போது உதரவிதானம் (diaphragm) மூச்சுவிடும்போது மேலும் கீழுமாகப் போவதையும், இதயத்துடிப்புகளையும், ஆய்வின்போது பேரியம் போன்ற மருத்துவப் பொருள் கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயர்ந்து போவதையும், உணவுப் பாதையின் சுருங்கி, விரிதல் நிகழ்ச்சிகளையும் காண முடியும். இவற்றை இலை நிகழும் ஒரு நிகழ்வின்போது எடுக்கப்படும் படங்களில் காண முடியாது. ஒரு எடுக்கப்படும் சாதாரணமாக படத்தில் நுரையீரல் போன்று காற்று நிரம்பிய பகுதிகளையும், சுண்ணாம்புச்சத்து நிறைந்த எலும்புகள் போன்ற பகுதிகளையும் எளிதாகக் காணலாம். சிறுநீரகங்கள் அதைச் சுற்றியிருக்கும் கொழுப்புப் படலத்தால் பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை, இரத்தக்குழாய்கள் போன்ற வற்றைச் சாதாரண முறையில் காண முடியாது. அவற்றைச் சில மருந்துகளை உட்கொண்டோ இரத்தக் குழாய்களில் உட்செலுத்தியோதான் காண முடியும். இவ்வாறாக உணவுப்பாதையையும் அதில் ஏற்படும் கோளாறுகளையும் காணப் பேரியம் உட் கொள்ள வேண்டும். உட்கொண்ட பொருள் உணவுப்பாதையின் ஒவ்வொரு பகுதிக்கும் செல் வதைத் தகுந்த இடைவெளியில் படங்களாக எடுத்து ஆய்வு செய்யலாம். இரத்தக் குழாய்களையும், சிறுநீர்ப்பாதையை யும் அறிய அயோடின் கலந்த மருந்துப்பொருளை இரத்தக் குழாய்களில் உட்செலுத்தி, உடனேயோ வெவ்வேறு இடைவெளிகளிலோ படங்களாக எடுத் துக் கணித்து வரலாம். இவ்வாறே இதயத்தின் வெவ் வேறு பகுதிகள், வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள், நிணநீர்க்குழாய்கள், உமிழ்நீர், பித்தநீர், சுணைய நீர்க் குழாய்கள், நிணநீர் ஆகிய வற்றை மேற்கூறப்பட்ட அயோடின் கலந்த மருந்தைச் செலுத்துவதன் மூலமும் அவற்றைப் படங்களாக எடுத்து அறிய முடியும். அண்மைக்காலத்தில் அலகீடு (scan) எனப்படும் கதிரியல் படம் 503 ஆய்வு முறைகளுக்கு ஊடு கதிர்களும் பிற கதிரியக்கப் பொருள்களும் பயன்படுகின்றன. ஊடுகதிர்க்கருவி களைக் கணிப்பொறியுடன் இணைத்து உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், பிற வெட்டுத் தோற்றங்களையும் எளிதில் அறிந்து கொள்ள முடி கிறது. இதே முறையில் கதிரியக்கப் பொருள்களை உடலினுள் செலுத்தி அல்லது உட்கொண்டு அதி லிருந்து வரும் கதிரியக்கத்தால் அலகீடு செய்யமுடியும். இது ஐசோடோப் அலகீடு எனப்படும். இவ்வாறு நோய்க்கு ஏற்றவாறு தகுந்த முறைகளைத் தேர்வு செய்து, அதை மேற்கொண்டு பின்னர் ஆய்ந்து முடிவுக்கு வர முடியும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளையும் மேற்கொள்ள நேரிடும். எம்.கே.சிவக்கொழுந்து கதிரியல் படப்பிடிப்பாளர் கதிரியல் மருத்துவர் நோயாளிகளுக்குத் தேவையான உடற் பகுதிகளைத் தேவையான கோணங்களில் ஏற்றவாறு படம் எடுத்துக் கொடுப்பதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர் ஆவார். முதல்நிலைக் கல்லூரிப் படிப்புக்குப் பின்னர், தற்போது மேல்நிலைக் கல்விக்குப் பின்னர் ஓராண்டுச் சான்றிதழ் படிப்பு மேற்கொண்டு, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றுப் பின்னர் இத்தொழிலைச் செய்ய வருவர். சில இடங்களில் இது பட்டப்படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. உடற்கூறு, உடலியல் போன்ற மருத்துவத்துறையில் பல்வேறு பாடங்களும் இவர்களுக்கு ஓரளவு கற்றுத் தரப்படுகின்றன. நோய்களைப் பற்றியும், அவற்றின் இன்றியமையாமை, அவசரத் தன்மை போன்றவை பற்றியும் அவர்களுக்கு விளக்கிக் கூறப்படுகின்றன. படப்பிடிப்புத் தொடர்பான பயிற்சி மட்டுமன்றிக் கதிர் மருத்துவ முறைகளும் அவற்றை அளிக்கும் முறைகளும் கற்றுத் தரப்படுகின்றன. ஊடுகதிர் களாலும், கதிரியக்கப் பொருள்களாலும் உண்டாகும். அழிவாற்றல்கள் பற்றியும் அவர்கள் நன்கறிவர். -எம்.கே.சிவக்கொழுந்து கதிரியல் படம் பாலிஎஸ்ட்டர் அல்லது செல்லுலோஸ் அசிட்டேட் டால் ஆகிய கண்ணாடி போன்று மறுபுறம் இருக்கும் பொருள்கள் தெரிகின்ற ஏட்டில் இருபுறமும் புகைப் பட மருந்துக் கலவை பூசப்படுகிறது. இந்த மருந்துக் கலவை வெள்ளி உலோகக் கலவையுடன் ஹாலோ ஜன் கலவையைக் கலந்து தயாரிக்கப்படும். சாதா