504 கதிரியல் மருத்துவர்
504 கதிரியல் மருத்துவர் ரணமாக வெள்ளி உலோகத்துடன் புரோமின் என்னும் ஹாலோஜன் கலந்து தயார் செய்யப்படும். இக்கலவையை வெளிச்சத்திலோ ஒளியிலோ ஊடு கதிரிலோ காட்டினால் கலவையில் வேதி மாற்றம் ஏற்பட்டுவிடும். ஆதலால் இக்கலவை பூசப்பட்ட ஏடுகளோ சுருள்களோ பயன்படும்வரை இருட்டி லேயே இருக்க வேண்டும். பயன்படும் இடத்திற்கும் அலுமினியத்தகட்டால் ஆன பெட்டியொன்றில் (cassette) தான் எடுத்துச் செல்லப்படும். அங்கு, நோயாளியின் உடலினுள் ஊடுருவிச் செல்லும் கதிர்கள் பின்னர் வெளிவந்து, அலுமினியத் தகட்டால் ஆன பெட்டியை ஊடுருவி மாற்றத்தை மருந்துக்கலவை பூசப்பட்ட ஏட்டில் விளைவிக்கின்றன. இம்மாற்றத்தை நிலையான தோற்றமாக ஆக்க, ஏடு இருட்டறையில் விரிவான முறைகளில் கழுவப்படுகிறது. பின்னர் அந்த ஏடு காய வைக்கப்பட்டு மருத்துவரின் ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றது. ஏடுகள் வெவ்வேறு அளவு களில் பயன்படுகின்றன. திரைப்படத் துறையில் பயன்படுவதுபோல நீண்ட சுருள் படங்களாகவும் பயன்படுவது உண்டு. கதிரியல் மருத்துவர் எம்.கே. சிலக்கொழுந்து கதிரியல் தொடர்பான மருத்துவர் கதிரியல் மருத்து வர் (radiologist) எனப்படுவார். அவர் தம் அடிப் படை மருத்துவக் கல்விக்குப்பின்னர், கதிரியல் மருத்துவக் கல்வியும், பயிற்சியும் மேற்கொண்டவர். கதிரியல் மருத்துவக் கல்வி, இளநிலைக்கல்வி எனவும். முதுநிலைக் கல்வி எனவும் மூன்று நான்காண்டுப் பயிற்சி கொண்டது. மேலும் கதிரியல் கல்வி, ஆய்வுத் துறை (diagnosis } எனவும் மருத்துவத் துறை (therapy) எனவும் இருவகைப்படும். ஒருவர் ஒரு துறையில்தான் பயிற்சி மேற்கொள்ள முடியும். அதற்கேற்ப அவர் ஆய்வாளர் என்றோ, மருத்துவர் என்றோ குறிப்பிடப்படுவார். இவர்கள் கதிர்வீச்சி னால் ஏற்படும் அழிவாற்றல்களை முற்றிலும் அறிந்து', அவற்றை மனத்தில் கொண்டு தம்மையும் பிறரையும் பேணி. அறிவன அறிந்து. தத்தம் செய்யவேண்டியன செய்து முடிப்பர். கதுப்புத் துடுப்பு மீன்கள் ஏறத்தாழ 340-400 துறையில் எம்.கே.சிவக்கொழுந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டெவோனியக் காலத்தொடக்கத்தில் உலகக் கடற்பரப்பில் பல இடங்களில் நுரையீரல் மீன்கள் (lung fishes) தோன்றிப் படிமலர்ச்சி பெற்றிருந்தன. அதே காலத்தில் கதுப்புத்துடுப்பு மீன்களும் (crossop- terygii) தோன்றிப் படிமலர்ச்சி பெற்றிருந்தமைக்கு இன்று பல தொல் படிவச் சான்றுகள் கிடைத் துள்ளன. டெவோனியக் காலத்தின் பிற எ எலும்பு மீன்கள் பல பண்புகளைப் பெற்றிருந்தாலும், தலை யின் முன் மூக்குப்பகுதி, பின் செவிப்பகுதியாகப் பிரிந்து இவ்விரண்டும் அசையும் மூட்டுகளால் பொருந்திய ஒரு தனிப்பண்பை நோக்கக் கதுப்புத் துடுப்பு மீன்கள் வேறுபட்டே தோன்றின. இந்த இணைப்பு, தலைப்பகுதியை மேலும் கீழும் அசைக்கப் பயன்பட்டிருக்க வேண்டும் எனக் கருத இடமேற்படு கிறது. கதுப்புத்துடுப்பு மீன்களில் 1-4 மீ. நீளமுடைய பெரிய கொன்றுண்ணியாகிய ரிப்பிடிஸ்டியா பிரிவும், மிகப்பெரிய சிறிய சீலகாந்த் பிரிவும் அடங்கும். சீலகாந்த்தின் நீளம் 1.5மீ. ஆகும். ரிப்பிடிஸ்டியாவில், போரோலெப்பிஃபார்ம்ஸ் (porolepiformes), ஆஸ்டியோலெப்பிஃபார்ம்ஸ் (osteo lepiformes) 67607 இரண்டு குடும்பங்கள் உள்ளன. போரோலெப்பிஃபார்ம்ஸ் என்பவை மருங்கில் ஒடுங்கிய பெரிய உடலையும்,முதுகருகில் தோள் கதுப்புத் துடுப்புகளையும் கொண்டிருந்தன. மூச்சை உள்ளிழுக்கவும் வெளியிடவும் வெளி மூக்குத்துளை களையும், வாய்க்குழியில் உள் மூக்குத்துளைகளையும் கொண்டிருந்தன. மேலும் மையப்பகுதியற்ற முள் ளெலும்புகளும், சமச்சீரற்ற {heterocercal) வால் துடுப்பும் இருந்தன. ஆஸ்டியோலெப்பிஃபார்ம்ஸ் என்பவை மெலிந்த உடல், அகன்ற தலை, தடித்த செதில்கள் ஒரு புற மூக்குத்துளை, பல்வேறு அமைப் புடைய வால்துடுப்பு ஆகியவற்றைப் பெற்றிருந்தன. சிறப்பாக இவை தண்டுவட நரம்புகளுடன் தொடர் பும், வளையம் போன்ற மையப்பகுதியுமுடைய முள் ளெலும்பைப் பெற்றிருந்தன. அனைத்து ரிப்பிடிஸ்டி யாக்களும் ஆழமற்ற நீர்நிலைகளில் கொன்றுண்ணி யாக (predators) வாழ்ந்தாலும். பெரும்பாலான ஆஸ்டியோலெப்பிடுகள் கரையோரங்களிலேயே வாழக்கூடிய தகவமைப்பைப் பெற்றிருந்தன. ஆஸ் டியோலெப்பிடுகளிலிருந்தே, நாற்கால் விலங்குகள் படிமலர்ச்சியுற்றன என அனைத்துத் தொல்லியல் வல்லுநர்களும் கருதுகின்றனர். இடை டெவோனியக் கால முதல் இறுதி இடவோனியக் காலம் வரை ரயே ரிப்பிடிஸ்டியாலி லிருந்து சீலக்காந்த்துகள் தோன்றி இருக்கவேண்டும். கதுப்பற்ற முதல் முதுகுத்துடுப்பும், தனித்தன்மை வாய்ந்த சமச்சீர்மையும், மூன்று கதுப்புடைய வால் துடுப்பும் இவற்றின் சிறப்புப் பண்புகளில் குறிப்பிடத் தக்கவையாகும். சதைப்பற்றுடன் தொங்கும் ஆரைகளை மையக்கதுப்புக் கொண்டிருக்கும். தலையின் எலும்பமைப்பு, துடுப்பமைப்பு. உள் மூக்குத்துளையின்மை, தலையின் முன்பகுதியிலுள்ள