பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதுப்புத்‌ துடுப்பு மீன்கள்‌ 505

வியத்தகு உறுப்புகள் ஆகியவற்றால் இவை ரிப்பிடிஸ் டியாவிலிருந்து வேறுபட்டுள்ளன. டெவோனியக் காலத்தில் வின ரைவாக நடைபெற்ற படிமலர்ச்சி வேறுபாடுகளின் நிலையான தன்மை, வேறு எவ்வித விலங்கினப் படிமலர்ச்சியிலும் இல்லை. பழமைப் பண்புகள் நிறைந்த நுரையீரல் மீன்கள்கூடப் பல மாற்றங்களைப் பெற்றுள்ளன. டெவோனியன் தொடக்ககாலச் சீலக்காந்த்துகள் அண்மைத் தொல் (கிரேட்டேசியக் காலம்) படிவங்களிலிருந்து தலைப் பகுதியின் எலும்பாக்கத்தில் மட்டும் மாறு பட்டுள்ளன. முதன்முதல் தோன்றிய சீலக்காந்த்து கள் ஆழமில்லாத நன்னீர் நிலைகளில் வாழ்ந்தாலும் இடையுயிரூழிக் காலத்தில் வாழ்ந்த பிற எலும்பு மீன் இனத்துடன் இவையும் கடலில் வாழ்ந்தன. பெரும்பாலான எலும்பு மீன்கள் இயற்கையின் பல் வேறுபட்ட சூழ்நிலை இடங்களில் பரவின என்றாலும் சீலக்காந்த்துக்கள் மட்டும் தம் தனித்தன்மையை இழக்கவில்லை. கிரேட்டேசியக் காலம் வரை பெரு மளவில் வாழ்ந்த இவை தொல்படிவப் பதிவுகளி லிருந்து மறைந்து விட்டன. கதுப்புத் துடுப்பு மீன்கள் 505 1938 இல் தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு லண்டன் பகுதியில் மீன்பிடி இழுவலையில் கிடைத்த ஓர் அரியமீன் அதைப் பிடித்த பரதவர் இனத்தலை வனின் கையை நன்றாகக் கடித்துவிட்டது. ரோடிஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்மித் என்பார், பரத வர் தலைவனைக் கடித்த மீன், சீலக்காந்த் வகை யைச் சார்ந்து வாழும் தொல்லினமே என்று அறுதி யிட்டுக்கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. எதிர்பாராமல் கோடைவெயிலில் அம்மீன் தென் பகுதியில் பலமணி நேரம் கிடந்ததாலும், பேருந்து ஓட்டுநர் கெடு நாற்றமுடைய அம்மீனை எடுத்துச் செல்லத் தயங்கியதாலும், விடுமுறை, அஞ்சல் துறையின் தாமதம் இவற்றாலும் அம்மீனின் எலும்பும் தோலுமே ஸ்மித்துக்கு எஞ்சின. அவர் அந்த மீனை உயிருடன் எடுத்துச் சென்று ஆய்வகத்தில் ஆய்வு செய்ய விரும்பியது ஏமாற்றமாக முடிந்தது. இப்பெரிய மீனின் பண்புகள் இடையுயிரூழிக்காலச் சீலக்காந்த்துகளைப் பெரிதும் ஒத்து இருந்தமையால் ஸ்மித் இதை வாழும் தொல்லினம் என்று அறிவித்த தோடு, இந்த அரிய மீனைத் தம் கவனத்திற்குக் VOL 7 a b (a) பிள்கார்பனிஃபெரஸ்-பின் டிரையாசியக் காலத் தொல் படிவங்களிலிருந்த தொகுக்கப்பட்ட சீலக்காந்த் (b) உயிருள்ள சீலக்காந்த்.