பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டக எஃகு 33

கட்டக எஃகு 33 திருப்புமையைத் தடுக்கும் இணைப்புகள் (moment resisting connection). தொடர் சட்டக அமைப்பில் பக்கவாட்டுச் சுமை, குத்துச் சுமை முதலியவற்றைத் தடுக்கும் விட்டங்களில் உறுதியும், திருப்புமைத் தடுப் பும் தேவையானவையாகும். காற்றழுத்தத்தால் கட்டடம் உருக்குலையும் வாய்ப்பு உள்ளது. இதனால் இதைத் தூண்களும் விட்டங்களும் வளைகின்றன. தடுக்க இவை தகுந்த இணைப்புகளுடன் இணைக்கப் பட வேண்டும். பலவிதகோண வடிவங்கள்,T வடி வங்கள் முதலியவற்றுடன் இணைப்பதால் திருப்புமை தடுக்கப்படுகிறது. விறைப்புத் தாங்கு சட்டம், நிரப்புத்தகடு பற்ற வைப்பு (plate fillet weld) முறைகளால் திருப்புமை தடுக்கும் இணைப்புகள் செய்யப்படுகின்றன. தூண் விளிம்புப்பட்டை (flange), வளையும் தன்மையைத் தடுப்பதற்கு விறைப்புத் தகடுகளால் பற்றவைக்கப் பட்டு வலிவூட்டப்படும். ஊசி இணைப்புகள். உறுப்புகளுக்கிடையே கோண மாற்றம் (angular change) தேவைப்பட்டாலும், திருப் புமைத் தடுப்பு, தேவையற்ற கீல் தாங்கியிலும் (hinge support) ஊசி இணைப்புகள் பயன்படுத்தப்படுகின் றன. பாலங்களில் உள்ள கோர்வு உத்திரத்திலும், பெரிய தூல இடைவெளிகளிலும் ஊசித்தாங்கிகள் ஊசியின் அளவு உள்ளன. அதன் வளைவுத்தடை யைப் (bending resistance) பொறுத்து அமையும். போதுமான தாங்குமானத்தை அளிப்பதற்கு வலி வூட்டப்பட்ட ஊசித்தகடுகள் தேவைப்படுகின்றன. என்கை உயர் வலிமை மரையாணிகள். வை வெப்பப் பதனிட்ட எஃகிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. உயர் இழுவலிமையும், உயர் நெகிழ் வலிமையும் உடைய மரையாணிகள் தயாரிப்பதற்குத் தேவைப்படுகின்றன. பொருள்களை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனம் A 325, A 490 ஆகிய இருதர (grade) மரையாணிகளுக்காகப் பரிந்துரைத்துள்ளது. கட்டக உறுப்பு இணைப்புகளில் இவை பயன்படுகின்றன. இம்மரையாணிகள் திருக்கக் கைக்குறடால் (torque wrench) உறுப்புகளுடன் இறுக்கப்படுகின்றன. மரை யாணி இணைப்பு உராய்வு மூலமாகச் சுமையைத் தகடுகளுக்குச் செலுத்துகிறது. இவ்வமைப்புள்ள ணைப்புகளின் வலிமை மரையாணிகளின் வகை யைப்பொறுத்து மாறுபடும். உராய்வுவகை, தாங்கி வகை என இரு வகையுள்ளன. மை ஒரே சுமை நிலையில். தரையாணிகளை விட உயர்வலிமை மரையாணிகளே மிகு அயர்வு வலி fatigue strength) உடையன என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. அதனால் இவை பாலக் கட்டு மானம், அதிர்வுசுமை உள்ள கட்டுமானம், கட்டடக் கட்டுமானம் இவற்றில் பயன்படுகின்றன. அ.க. 7. 3 இரா. சரசவாணி கட்டக எஃகு பொறியியல் கட்டகங்களில் பயன்படும் என்கு திறந்த உலைச் செயல்முறை (open hearth process), மின் உலைச் செயல்முறை (electric furnace process) ஆகிய முறைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. கரி எஃகு தகடுகளும். 11 மி.மீ. அல்லது அதற்கும் குறைவான தடிமனுடைய தகடுகளும், நிலையான சுமைகளை மட்டும் ஏற்கும் தகடுகளும் அமில- பெசிமர் எஃகு முறையில் செய்யப்படுகின்றன. இயற்பியல் பண்புகளும், வேதியியல் உட்கூறுகளும் பொருள்களை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனச் செந்தரப்படி முடிவு செய்யப்படுகின்றன. ASTM A36 குறிப்பீடு கொண்ட கரி எஃகு. கட்டகங்களில் பயன்படுகிறது. தன் நெகிழ் நிலை 248 மெஃகா பாஸ்கலாகும்: இழுவலிமை 400-552 மென்கா பாஸ்கலாகும். இவ்வகை எஃகு எளிதில் பற்ற வைக்கப்படும் தன்மையுடையது. ASTM -A242 குறிப்பீடு கொண்ட உலோகக் கலவை எஃகு, அரிப்பைத் தடுக்கும் தன்மையுடையது. இதன் நெகிழ் நிலை 345 மெஃகா பாஸ்கலும் இழு வலிமை (434-483) மெஃகா பாஸ்கலும் ஆகும். இது எளிதில் பற்ற வைக்கப்படும் இயல்புடையது. மாங்கனீஸ், செம்பு போன்றவை இதில் காணப்படு கின்றன. ASTM A441 குறிப்பீடு கொண்ட எஃகில் மாங்கனீஸ், செம்பு, சிலிக்கான் ஆகியவற்றுடன் வெனேடியமும் இணைந்து காணப்படும். 19 மி.மீ. தடிமனுள்ள தகட்டின் நெகிழ் நிலை 345 மெஃகா பாஸ்கலும், 200 மி.மீ. தடிமனுள்ள தகட்டின் நெகிழ் நிலை 276 மெஃகா பாஸ்கலும் ஆகும். இது பற்ற வைக்கப்படும் தன்மையுடையது. தரையாணி. மரையாணி இவற்றைத் தயாரிப்பதற்கு இது பயன்படு கிறது. நெய்வணப்பூச்சுக் கொடுக்கப்படாவிட்டால் தட்பவெப்பத்தால் அடர் பழுப்பு நிறமாக மாறுகிறது. தட்பவெப்பத்தால் மாறும் மற்றொரு வகை எஃகு ASTM - A588 ஆகும். ASTM -A440 குறிப்பீடுள்ள எஃகு. அரிப்பைத் தடுக்கும் தன்மையுள்ள மாங்கனீஸ் மிகுந்த எஃகாகும். இது 10 செ.மீ. தடிமனுள்ள தகடுகள் தயாரிப்பில் பயன்படுகிறது. குறிப்பாகத் தரையாணி, மரையாணி தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. இதன் நெகிழ் நிலை 345 மெஃகா பாஸ்கலாகவும், இழு வலிமை 434 - 483 மெஃகா பாஸ்கலாகவும் உள்ளன. வெனேடியம், நியோபியம் முதலியவற்றாலான ASTM A572 குறிப்பீடு கொண்ட எஃகு குறைந் தளவு உலோகக்கலவையினால் ஆனது. இது 290-448 மெஃகா பாஸ்கல் நெகிழ்நிலையைக் கொண்டுள்ளது.