பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 கந்தகம்‌ (வேதியியல்‌)

512 கந்தகம் (வேதியியல்) S 0.212nm 5 105° S, மூலக்கூறின் அமைப்பு படும். இது நிலைமாறு வெப்பநிலைக்கு மேலும், உருகுநிலைக்குக் கீழும் நிலைப்புத்தன்மையுடன் உள்ளது. கந்தகக் குழம்பைப் படிகமாக்கும்போது பெரும்பாலும் நிறமற்ற, ஊசி வடிவப் படிகங்களாகப் படிகிறது. இதுவும் மேற்காணும் அமைப்பும் கார்பன் டைசல்ஃபைடு, நீர் இவற்றில் கரையும் தன்மையைப் பெற்றுள்ளன. நெகிழிக் கந்தகம். இது படிக உருவமில்லாதது. கார்பன் டைசல்ஃபைடில் குறைவாகவே கரைகிறது. இது y-கந்தகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதை உருகிய கந்தகக் குழம்பைக் கொதிநிலைக்கருகில் வெப்பப்படுத்தித் திடீரென்று குளிர்வித்துப் பெற லாம். இது A - கந்தகமும், ஈ-கந்தகமும் கலந்த கலவை யாகத் தெரிகிறது. இதில் கந்தக அணுக்கள் கோணல் மாணலான (zig zag) சங்கிலித் தொடர்களால் ணைக்கப்பட்டுள்ளன. பர்ப்பிள் கந்தகம். து கந்தக ஆவியை உயர் வெப்பநிலையிலிருந்து திடீரென்று--195°C வெப்ப நிலைக்குக் குளிர்விக்கும்போது உண்டாகிறது. இதில் கந்தக அணுக்கள் S மூலக்கூறுகளாக அமைந் துள்ளன. இது நிலையில்லாதது; அறை வெப்ப நிலைக்கு வெப்பப்படுத்தும்போது மஞ்சள் கந்தகமாக மாற்றமடைகிறது. என நீர்மக் கந்தகம். இதன் பாகுத்தன்மை வெப்பநிலை அதிகரிப்பிற்கேற்ப அதிகரிக்கிறது. வெப்பநிலை உயர உயர நிறமும் சுருஞ்சிவப்பு, கறுப்பு மாறுதலடைகிறது. 200°C வெப்பநிலையில் பாகுத் தன்மையும், நிறமும் உச்ச மாற்றமடைகின்றன. இவ்வெப்பநிலைக்கு மேல் நிறம் வெளிறி, பாகுத் தன்மையும் குறைகிறது. வளிம நிலைக் கந்தகம். சாதாரணக் கொதிநிலை யில் (444,60°C) கந்தக வளிமம் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தைப் பெற்றுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பிற் கேற்ப இதன் நிறம் அடர் சிவப்பாகிப் பின்னர் வெளிர்கிறது. 650°C வெப்பநிலையில் வைக்கோல் B மஞ்சள் நிறமடைகிறது. வளிம நிலைக் கந்தகத்தில் S, Sg, S. S, ஆகியவை சமநிலையில் உள்ளன ; இவற்றின் விகிதங்கள் வெப்பநிலைக்கேற்ப மாறுபடு கின்றன. கொதிநிலையில் S; 750 C இல் S;2000°C மேல் இது கந்தக அணுக்களாகப் பிரிகையுறுகிறது. இது பிற உருவங்கள். கந்தகப் பால் (milk of sulphur) என்பது நன்கு பொடியாக்கப்பட்ட படிக உருப்பெற்ற கந்தகத் தூள் நீரில் தொங்கிக் தொங்கிக் கொண்டிருக்கும் தொங்கல் (suspension) கரைசல் ஆகும். கார்பன் டைஆக்சைடில் கரையக்கூடியது. கூழ்மக் கந்தகம் (colloidal sulphur) S-கந்தகம் என்றும் குறிப்பிடப்படுகிறது; கந்தகம் நீரில் சிதறி சிதறி இது உண்டாகிறது. இதை ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமத்தைச் சல்ஃபர் டை ஆக்னசடு கலந்த நீரிலோ சோடியம் தயோசல்ஃபேட்டை நீர்த்த சல்ஃப்யூரிக் அமிலத்துடனோ கலந்து பெறலாம். வேதிப் பண்புகள். இது தீவிர தனிமமாகும். சாதாரணமாக அனைத்துத் தனிமங்களோடும் வினை புரிகிறது. இது நேர் எதிர் ஆக்சிஜனேற்ற நிலை களையும், அயனி, சக, அணைவுப்பிணைப்புகளையும் உண்டாக்க வல்லது. தனிமக் கந்தகம் பைப்பிரிடின் கரைசலில் கரைந்து சிவப்பு நிறக் கரைசலை உண்டாக்குகிறது. அனைத்து வகைக் கந்தகமும் இந்த ஆய்வைக் கொடுக்கின்றன. இது கந்தகத்தை அறிய உதவும் எளிய ஆய்வு ஆகும். பல் ஹாலைடுகள். கந்தகம், S, F,, SF,, SF8, S, F10. S,C1, SC1, SCI, S,Br எனப் ஹாலைடுகளை உண்டாக்குகிறது. கந்தக அயோடைடுகள் காணப் படுவதில்லை. இவற்றுள் டைசல்ஃபர் டைகுளோ- ரைடும் (சல்ஃபர் மேனோகுளோரைடு S,Cl) சல்ஃபர் ஹெக்சாஃபுளோரைடும் முக்கியமானதாகும். எரிச்ச லூட்டக்கூடிய, அரிக்கும்தன்மை வாய்ந்த, தங்கம் போல் மஞ்சள் நிற நீர்மமாகும். இது கந்தக குளோரைடு சேர்மங்களிலேயே நிலையானதாகும். இதன் உறைநிலை -- 80°C: கொதிநி லை 135.6°C. இது நீரை விட அடர்த்தி மிக்கது; நீரில் கரையாதது. ஆனால் மெதுவாக நீராற்பகுப்படைந்து ஹைட்ரோ கு ளோரிக் அமிலமாகவும், சுந்தகம் கலந்த கலவை களாகவும் பிரிகையுறுகிறது. இது எத்திலீனுடன் னைபுரிந்து கடுகு வளிமத்தை உண்டாக்குகிறது. தாவர எண்ணெய்களுடன் வினைபுரிந்து ரப்பர் போன்ற பொருள்களை உண்டாக்கப் பயன்படு கிறது. சல்ஃபர் டைகுளோரைடு (SCI,) அடர்த்தியான, சிவப்பு நீர்மமாகும். இது (S,Cl) குளோரினுடன் வினை புரிவதால் உண்டாகிறது. இதன் உறைநிலை 78°C. கொதிநிலை 59°C. சல்ஃபர் டெட்ரா குளோ ரைடு (SCI,) மஞ்சள் நிறத்திண்மம் - 30°C இல் சில நிறநீர்மமாக உருகுகிறது. இது டிரை இது டிரை குளோரோ சல்ஃபோனியம் அயனிகளையும் (SCI,+) குளோரைடு -