பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 கப்பல்‌ கட்டுதல்‌

5/6 கப்பல் கட்டுதல் ம் மாஜகான் தளத்திலும். கல்கத்தா கார்டன் ரீச் தளத்திலும், கோவா கப்பல் தளத்திலும் கட்டப்படு கின்றன.மாஜகான் தளத்தில் ஆற்றல் மிக்க தரைப் போர்க் கப்பல்களும் (frigates), நீர்மூழ்கிக் கப்பல் களும் சுட்டப்படுகின்றன. மேலும், இங்கு கடலில் மண்ணெண்ணெய் எடுக்கும் கருவிகளும் செய்யப்படு கின்றன. இவற்றைத் தவிர, சிறிய பயணிப் படகுகள் (launches), மீன் படகுகள் (trawlers), இழுக்கும் கப்பல்கள் (tugs) போன்ற சிறிய கப்பல்களும் படகுகளும் கண்ட்லா, பம்பாய், இரத்தினகிரி, கோவா, மங்களூர், கொச்சி, மண்டபம், சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கல்கத்தா ஆகிய நகரங்களின் சிறிய தளங்களில் கட்டப்படுகின்றன. ய கப்பல்களை வாங்கும் நிறுவனங்கள் பெரிய கப்பலோட்டும் நிறுவனங்களாகவோ அரசு நிறுவன மாகவோ, துறைமுகமாகவோ தனியார் துறை நிறுவனமாகவோ இருக்கலாம். புதிய கப்பலின் முழுப் பொறியியல்விவரங்களும் (full technical specification) ஒப்பந்தங்களும் விவாதிக்கப்பட்ட பின்னரே கப்பலை வாங்க நிறுவனம் ஒத்துக் கொள்கிறது. கப்பல் கட்டுதல் ஒரு பூட்டுதல் தொழிலகம் (assembly industry) ஆகும். கப்பலின் 70% மேல் மதிப்புடைய பொருள்களைக் கப்பல் தளம் வெளி நிறுவனங்களிலிருந்து வாங்குகிறது. கப்பல் கட்டும் பல பணிகளும் வெளி நிறுவனங்களுக்குத் துணை ஒப்பந்தங்கள் மூலம் விடப்படுகின்றன. எனவே பற்பல இடங்களிலிருந்து வரும் விதவிதமான " பொருள்கள், கருவிகள், எந்திரங்கள் அனைத்தை யும், வெவ்வேறு தொழில் துறைகளின் முயற்சி மூலம் ஒன்றுகூட்டித் திட்டமிட்டுக் கப்பல் கட்டுவது மிகவும் இன்றியமையாததாகும். தற்காலக் கப்பல் தளங்களிலுள்ள வசதிகள். இத் துறையில் ஜப்பானும் தென்கொரியாவும் அண்மை யில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளன. அங்கு கைவேலையைக் (manual labour) குறைத்துத் தன்னியக்கக் கருவிகளைக் கொண்டு, பேருந்துகளை உற்பத்தி செய்யும் முறையில் பூட்டுந் தொடர் முறையே (assembly tine) பயன்படுத்துகின்றனர், ஒரே சமயத்தில் ஒரேவிதமான பல கப்பல்களைக் கட்டுவதால் அவற்றிற்குரிய சிறப்புநிலை எந்திரங் களைச் (special purpose machines) சிக்கனமாகக் கையாளுகின்றனர். வழக்கமாக, கப்பல்களின் உடல்களைச் (hulls) சரிந்த வழுக்கும் பாதைகளில் (sloping slipways) கட்டி, பிறகு நீரில் கன்னி ஒட்டம் விடுகின்றனர். இந்த முறை பம்பாயிலும், விசாகப்பட்டினத்திலும் கையாளப்படுகிறது. இம்முறையில் முதலீடு (capital investment) மிகுதியானாலும், கப்பல்களை விரை வாகவும், சிக்கனமாகவும், தரத்துடனும் கட்ட முடியும். அணைகளில் ஆற்றல் வாய்ந்த தூக்கும் துளைக்கருவிகளைப் (lifting appliances) பயன்படுத்த முடியும். வெளிநாட்டில் விலை மதிப்புள்ள போர்க் கப்பல்களையும், பண்டக் கப்பல்களையும் கூரை யுடைய சில அணைகளின் (cove:ed docks) தளங் களில் தயாரிக்கின்றனர். எஃகு தகடுகளும் கோணங்களுமே (section plates and section) கப்பல் கட்டும் மூலப் பொருள் களாகும். கோர்ப்புப் பட்டறை (fabrication shop) அருகில் எஃகு பொருள்களை வைத்து, அங்கிருந்து ஓந்தி இழுவைப் பெட்டிகள் (crane tractor trailors) மூலம் அவற்றைப் பட்டறைக்கு எடுத்துச் செல் கின்றனர். அங்கு தகடுகளைச் சமமாக்கி (leveller), இரும்புத் தூண் அடி மூலமாகத் துருவெடுத்து (grit blasted) துருவிலிருந்து பாதுகாக்கத் துத்தநாகம் அல்லது அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்ட உள் சாயத்தைத் (zinc or aluminum based primer) தடவி உருளைக் கன்வேயர் மூலம் தானே இயங்கும் புகை வெட்டும் சாதனங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். கப்பல்களின் இடப்புறமும், வலப்புறமும் கண்ணாடிப் பிம்பமாக உள்ளமையால் கணிப்பொறியால் இயங்கும் கருவிகளில் ஒரேசமயத்தில் இரண்டு தகடுகள் வெட்டப் படுகின்றன. பல கப்பல்கள் கட்டப்பட்டால் ஒரே சமயத்தில் 4, 6 அல்லது 8 தகடுகளையும் வேண்டிய முடியும். வடிவங்களில் வெட்ட தாமே இயங்கும் பற்றவைப்பு எந்திரங்களைக் கொண்டு களையும் கோணங்களையும் கோக்கும் சமதளப்பேனல்களை பெரிய தளங்களின் வளைவுடைய பல தகடு சாலையில் வரிசை யாகத் தயாரிக்கின்றனர். வளைவான பேனல்களுக்குத் தனிப்பட்ட துணைக் கருவிகளைப் {special curved tigs) பயன்படுத்துகின்றனர். இங்கு தயாராகிய துணைக்கோவைகள் (sub assemblies) பளுதூக்கிகளால் எடுத்துச் செல்லப்பட்டுப் பாதுகாப் பிடத்தில் (buffer store) வைக்கப்படுகின்றன. மிகவும் கனமான கோவைகளைத் தூக்குவதற் குத் தளங்களில் ஆற்றல் மிக்க பளு தூக்கும் கருவி களைப் (lifting appliances) பயன்படுத்துகின்றனர். கப்பல்களை நீரில் கன்னியோட்டம் செய்ய (afiat out- fitting) மிதக்கும் பளுதூக்கிகள் உதவுகின்றன. கப்பல்களின் அடிப்படை வரைவிக்கும் (basic design) விளக்கவரைவிக்கும் (detailed drawings) கணிப்பொறிகள் உதவுகின்றன, தாமே இயங்கும் புகைவெட்டும் கருவிகளைக் கணிப்பொறிகள் இயக் குகின்றன. ஆயிரக்கணக்கான பொருள்களையும், தொழில் திறன்களையும் ஒன்றுகூட்டித் திட்டமிட்டுக் கட்டுவதற்குக் கணிப்பொறிகள் இன்று மிகவும் பயன்படுகின்றன. கப்பல் திட்டமிட்ட நேர வரைமுறை. முதலில் அடித்தள மிடுதல் (keel laying) எந்திரம் நிறுவுதல் (machinary installation), நீரோட்டம் (launching) பரிசீலனை,