பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கட்டகங்கள்‌

34 கட்டகங்கள் இது மரையாணி, தரையாணி தயாரிப்பில் பயன்படு கிறது. 379 மெஃகா பாஸ்சுலுக்குக் குறைவாக நெகிழ் நிலை இருப்பின் இது பற்றவைக்க ஏற்றதன்று. ASTM-A5 14 குறிப்பீடுள்ள எஃகு வெப்ப பதனிடப் பட்ட எஃகாகும். இது மிகுதியான இழுவலிமையைக் கொண்டுள்ளது. இவ்வெஃகில் குறைந்தளவில் கரி காணப்படுவதால் சிறப்பு முறையில் பற்ற வைக்கப் படுகிறது. கரி மென்மையான கரி - எஃகு தரையாணிகள், எஃகு கட்டகங்களில் சிறப்பாகப் பயன்படுகின்றன. இவ்வெஃகு ASTM - A502 குறிப்பீடுள்ள முதல்தர எஃகாகும்.ASTM - A502 குறிப்பீடுள்ள இரண்டாம். தர எஃகிலிருந்து உயர் வலிமை கரி-மாங்கனீஸ் தரையாணிகள் தயாரிக்கப்படுகின்றன. கட்டக எங்கு விட்டம் தானியங்கு விட்டப்-பற்றவைப்புப் பொறியால் கட்டக எஃகு விட்டம் தயாரிக்கப்படுகிறது. செய்யப்படுகின்றன. பல கட்டக இணைப்புகள், உயர் வலிமை மரையாணிகளால் இதற்கு ASTM - A325 குறிப்பீடுள்ள எஃகு பயன்படுகிறது. உயர் வலிமை எஃகாலான கட்டகங்களுக்கும், 10 செ.மீ. விட்டமுள்ள மரையாணிகளுக்கும் ASTM -A490 எஃகு பயன்படுகிறது. இரா. சரசவாணி கட்டகங்கள் . தெளிவான ஏற்பாடுகளுடன் அமைந்த தொடர் புடைய பொருள்கள் அல்லது உறுப்புகள் ஒருங்கி ணைந்து குறிப்பிட்ட இருப்புகளிலுள்ள சுமைகளைத் தாங்கக்கூடிய அமைப்புகளே கட்டகங்களாகும். பொதுப் பொறியியல் பொறிஞர்களால் வடிவமைக் கப்படும் முதன்மைக் கட்டகங்கள் அணைகள், பாலங்கள், கட்டடங்கள், துறைமுகங்கள், தடுப்புச் சுவர்கள், சேமிப்புத் தொட்டிகள், கலங்கள் (bins) செலுத்தக் கோபுரங்கள், வானொலி, தொலைக் காட்சிக் கோபுரங்கள். நெடுஞ்சாலைத்தளங்கள், வானூர்தி இறங்கும் சால்வரிகள் போன்றவையாகும். விண்வெளி மற்றும் கடவியலில் கண்டுபிடிப்புகள் விரிவடைந்து வருவதால், தற்போது பயன்படும் பொறியியல் கட்டகங்களின் வகை, பணி ஆகியவற்றி லிருந்து வேறுபடும் பிற கட்டகங்களின் தேவை பெருகியுள்ளது. ஒரு கட்டகம் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாக வும் பொருளாதாரத்திற்கு ஏற்றதாகவும் அழகாகவும் இருக்கவேண்டும். பாதுகாப்பிற்குச் சிறப்பிடம் கொடுக்கப்படவேண்டும். பொருளாதாரத்திற்குச் சிறப்பிடம் கொடுத்தபின், கட்டுமானத் தோற்றத் திற்கும், அழகியலுக்கும் இரண்டாம் சிறப்பிடத்தை வடிவமைப்புக் கொடுக்கிறது. இத்தேவையை நிறைவு செய்வதற்கு, வடிவமைப்பு நான்கு கட்டங்களில் செயற்படுத்தப்படுகிறது. பணித்தேவைகள் (functional requirements). வடிவ மைப்பின் முதல் பகுதி, பொதுவான அமைவின் (general layout) வளர்ச்சியாகும். இவ்வளர்ச்சி பணித்தேவையை மட்டும் நிறைவு செய்யாது, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அக்கட்டுமானம் அழகாகப் பொருந்துவதாகவும் இருத்தல் வேண்டும். பொது வாக, தேவைக்கேற்ப நிறைவளிக்கும் ஒரு தீர்வைத் தேர்ந்து எடுப்பதற்குப் பல் தீர்வுகள் தயாரிக்கப் படுகின்றன. கட்டுமானத் திட்டம். வடிவமைப்பு முறையில் இரண்டாம் நடவடிக்கை கட்டுமானத்திட்டத்தின் வளர்ச்சியாகும். அதாவது, செலுத்தப்படும் பளுவைத் தாங்கக்கூடியதாக உள்ளஉறுப்புகளின் அமைப்பாகும். கட்டுமானப் பொருள்கள், கண் இடைவெளி (span) நீளங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதால் பணித் திட்டம் பெருமளவில் பயன் பெறுகிறது. அதனால் பணிக்காலத்திலேயே, கட்டுமானத் திட்டம் வளர்ச்சி அடைகிறது. கட்டக அமைவின் தோராயச் செலவு மதிப்பீடு பொருளாதாரத் திட்டத்தைத் தெளிவுப்படுத்துகிறது. சுட்டக இயல்புகள், தன்மை கள். கிடைக்குமிடங்கள் ஆகியவற்றின் அடிப்படை யில் பொருள்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால் பொருள்களைப் பயன்படுத்திப் பணிபுரியும் பல்