பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 கப்பல்‌ கட்டுதல்‌

520 கப்பல் கட்டுதல் தயாரிப்புக் கட்டுப்பாடும் தரக்கட்டுப்பாடும். பல பணிகள் வெவ்வேறு இடங்களிலும், வெவ்வேறு பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் நடப்பதால், முன் னேற்றத்தைக் கண்காணிக்கத் தயாரிப்புக் கட்டுப் பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவை வேலைகள் திட்டப்படி நடக்கின்றனவா, எங்கெங்கு அமைக்க வேண்டும், எங்கு திட்டத்தை மாற்றி வசதிகள் மிகுதியாகக் கொடுக்கவேண்டும் என்று அறிய உதவுகின்றன. இவை தொகுத்து அளிக்கும் தகவல்கள் பிற்காலத் திட்டத்திற்குத் துணையாக உள்ளன. தயாரிப்புக் கட்டுப்பாட்டுக்குக் கணிப் பொறிகள் உதவுகின்றன. தளத்தில் தரக்கட்டுப்பாட்டுத்துறை அனைத்துப் பணிகளையும், பண்டங்களையும் ஆய்வு செய்து தரக்குறைவானவற்றை ஒதுக்கிச் சரிசெய்ய உதவு கிறது. மேலும் தவறுகள் நிகழுமுன்பே தரத்தை உறுதிப்படுத்தும் குழுக்கள் வேலை செய்கின்றன. இந்தத் துறை பின்பு முழுக் கப்பலின் ஆய்வுகள், தேர்வுகள் செய்ய உதவுகிறது. அளவு வரைதல். கப்பல்கள் செல்லும்போது நீர்ச்சலன எதிர்ப்பு ஆற்றலைக் (hydro dynamic resistance) குறைத்து கப்பல்களை ஓட்டும் எந்திரத் தின் ஆற்றலையும், டீசல் எண்ணெய்ச் செலவையும் குறைப்பதற்காக, நீரைத் தொடும் வெளிப் பகுதிகள் வளைவுடன் உள்ளன. வரைவாளர்கள் கப்பலின் வெளிவடிவத்தைமாதிரியாகச் செய்து சோதனைக் குளங்களில் ஆய்ந்து முடிவு செய்கின்றனர். தோற்றத்தைக் வளைவுகளின் சரியான ந்த கண்டு பிடிப்பது அளவு வரைதலாகும். இதற்கு மூன்று முறைகள் உள்ளன. முழு அளவில் வரைதல். இந்தப் பழைய முறையில் ஒரு மரப்பலகையில் கப்பலின் வடிவக்கோடுகள் செதுக்கப்பட்டு அதிலிருந்து வடிவங்கள் ஒட்டுப் பலகையாகத் தயாரிக்கப்படுகின்றன. இந்த அளவு கோல்கள் எஃகுத் தகடுகளிலும் கோணங்களிலும், வரையப்படுகின்றன. பிறகு எஃகு பகுதிகளில் நேரடி யாகச் சுண்ணாம்புப் பொடியால் வரைந்து, இரும்பு ஆணிகளால் செதுக்குகின்றனர். கப்பல்கட்டி முடி யும் வரை அளவுகோல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இம்முறையில் கைவேலைத்திறன் மிகுதியாகப் பயன் படுகிறது. ஒளிகிரண வரைதல். இம்முறையில் 10 வரைந்து, இப்படங்களை அளவுக்கு 1 அளவுக்கு புகைப் 100 கப்பல் அளிவு வரைதல் முட்டுதல் உடல் அடிப்ப உள்தரைக் குழாய்கள வரை தல் தயாரிப்பு அளவுவரைதல் குழாயில் கோந்தல் பூட்டுதல் பொருத்தல் அடிப்பகுதி பொருத்தல் உன்தர எந்திர அடிமானம் பாய்லர்கள் ஒட்டும் எந்திரம் மூக்கிய வேலைகள் அளிவுவரைதல் கோத்தல் பொருத்தல் பொருத்து ஆய்வு பொருத்தல் முடித்தல் ஆய்வு 9 10 21 14 15 நாட்கள் 50 73 100 படம் 4 25 156