கப்பல் கட்டுதல் 525
பூட்டுந் தொழிற்சாலையில் அல்லது வழுக்குப் பாதையில் தொழிலாளிகள் மேலே ஏறுவதற்கும் வேலை செய்வதற்கும் போதிய அளவு வேலைப் பலகைகளும் (stagings) காற்று வசதியும் தேவை யாகும். பூட்டுதல். துணைக்கோவைகளைக் கோக்கும் சாலையில் ஒன்று சேர்த்து, பிறகு வழுக்குப்பாதை அல்லது கட்டும் அணையில் பூட்டுகின்றனர். முழுக் கோவையின் அளவும் பளுவும் தளத்திலுள்ள தூக்கி களின் ஆற்றலைப் பொறுத்து உறுதி செய்யப்படும். சமவெளிப் பேனல்களைப் பெரிய தட்டையான இரும்புப் பலகைகளில் ஒன்று சேர்க்கின்றனர். வளை வான பேனல்களுக்குத் தனிக் கருவிகள் உதவுகின்றன. கப்பலின் ஒவ்வோர் அங்கத்திற்கும் (unit) தனியான வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கோவைகளைத் திருப்புவதற்கும் தூக்குவதற்கும் வலிமையான தூக்கும் பிடிகள் (lifting eyes) பற்ற வைப்புச் செய்யப்படுகின்றன. ஒரு கப்பலின் பெரிய கனமான உறுப்புகளைத் தூக்கிச் சரியாகச் சேர்ப்பது மிகவும் கடினமான கப்பல் கட்டுதல் 525 வேலையாகும்.உறுப்புகளின் எல்லையில் ஏறத்தாழ 1/8 அங்குலம் நீளமாகவே தகட்டை வைத்துச் சேர்க்கும்போது மிகுதியான பகுதியை வெட்டிச் சரியாக ஒன்று சேர்க்கின்றனர். கணிப்பொறிகளால் தாமாக வேலை செய்யும் தளங்களில் இந்த மிகை யான தகடு வைக்க வேண்டியதில்லை. சேர்ந்தவுடன் கப்பலின் சில பகுதிகளில் நீர் நிரப்பி ஆய்வாளர்கள் தம் மனநிறைவிற்காக நீர் அழுத்த ஆய்வு (water pressure test) செய்கின்றனர். சில பக்கங்களுக்குக் காற்று அழுத்த ஆய்வுகளும் (air pressure tests) செய்யப்படுகின்றன. இவ்வாய்வு களிலும் பிற வேலைகளிலும் உள்ள குறைகளை நீக்க வேண்டும். கோவைகளை ஒன்று சேர்ப்பதில் உயர் தரப் பற்றவைப்பு முறைகள் பயன்படுகின்றன. கூடியவரை கீழ்க்கைப் பற்றவைப்பும், தன்னியக்க முறைகளும் கப்பலின் கையாளப்படுகின்றன. உறுப்புகளில் பரி மாணக் கட்டுப்பாடும் (dimensional control) குலைவுக் கட்டுப்பாடும் (distortion control) இன்றியமையாத வையாகும். படம் 12. ஒரு துணைக்கோவை