கப்பல் கட்டுதல் 526
526 கப்பல் கட்டுதல் பற்றவைப்புச் செய்யும் முன்பு உள் துருவெடுத்த சாயமிடப் கோணங்களிலும் தகடுகளிலும் படுகிறது. கடலில் தோயும் வெளிப்பகுதிகளில் துருப் பாதுகாப்பு நெய்வனம் (anti corrosive paint) தடவப் படுகிறது. அதற்குமேல் கடல்வாழ் உயிரினங்களில் இருந்தும் செடிகொடிகளிலிருந்தும் அழுக்கு ஏறாமல் இருக்க நச்சுள்ள அழுக்குப் பாதுகாப்பு நெய்வனம் (toxic antifouling paint) தடவுகின்றனர். கப்பலின் உள் பகுதிகளின் பயன்பாட்டைப் பொறுத்து அழகு நெய்வனங்களோ (decorative paints) பாதுகாப்பு நெய்வனங்களோ (protective paints) பூசப்படும். பற்றவைப்பு முறைகள்,. இத்துறையில் பல முன் னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பக்க ஒரு முறைப் பற்றவைப்பு, மின்சாரப் புகை மின்சார ஸ்லாக் பற்றவைப்பு, உயரப்பெட்டகங்களுக்கு மந்த வளிமப் பற்றவைப்பு கரியமில வளிம அமிழ்வுப் பற்ற வைப்பு என்பன சிலவாம். குலைவுகளைக் கட்டுப் படுத்த பல வழிமுறைகளைத் தளங்களில் பின்பற்று கின்றனர். அவற்றில் சரியான பற்றவைப்பு வரிசை முறை பெட்டகங்களின் நடுவிலிருந்து கட்டப்பெறாத ஓரங்களுக்குச் செல்லுதல், பின் செல்லும் முறைகள், தகட்டின் அளவுக்குச் சரியான மின்முனைகளையும் சிறும இசைவுடைய மின்னோட்டத்தையும் பயன் படுத்தல். தன்னியக்க முறைகள். எதிர்பார்க்கும் குலைவுத் திசைக்கு எதிர்த்திசையில் முதலிலேயே வளைத்தல், பெட்டகங்களை வலிவுபடுத்தல், கப்பல்களில் ஓரளவு அலுமினியப் பகுதிகளையும் பற்றவைப்புச் செய்தல் என்பன குறிப்பிடத்தக்கவை. இப்பகுதிகளை இப் போது ஆர்கான் வளிமக் சூழலில் டிக் (Tig-tungsten gas) அல்லது மிக் (Mig-metal gas) முறைகளில் சேர்க் கின்றனர். உள் வெள்ளோட்டமிடல். புதிய பெரிய தளங்களில் கப்பலின் எந்திரங்களையும் பகுதிகளையும் கப்பலின் உடல் கட்டும்போதே சேர்த்து அமைக் கின்றனர். இந்த முன் வெள்ளோட்ட முறையில் கோவைகள் தயாரிக்கும்போதே அவற்றுள் குழாய்கள், மின்கம்பிகள், காற்றுப் பாதைகள், கருவிகள் முதலிய வற்றையும் பொருத்தி வைக்கின்றனர். இம்முறையில் வேலை செய்யும் நுழைவு மிகவும் எளிதாகிவிடுகிறது. படம் 13. அடித்தளம் இடுதல்