பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல்கள்‌ 533

கப்பல்கள் 533 செல்லக்கூடிய தன்மை கொண்ட சிறுசாதனங்களை அமைத்தனர். பின்னர் துடுப்பால் உந்தப்படும் படகு களையும், நெடுந்தொலைவு பயணம் செய்வதற் கேற்பப் பாய்மரக்கப்பல்களையும் பயனபடுத்தினர். நாகரிகம் வளர, வளர மனிதனின் கடல் ஆதிக் கம் பெருகிற்று. நாட்டின் வலிமையையும் செழிப்பை யும் உணர்த்துமளவுக்கு, பொருளாதார நிலையும், தொழில் வளமும் மேம்படுத்தப்பட்டன. மக்கள் பயணத்திற்கும், பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்து பொருளீட்டவும். பிற நாடுகளின் மேல் படையெடுத்துக் கவர்ந்து கொள்ளவும் கடல்வழி யைப் பயன்படுத்த, தங்கள் அறிவுத்திறனைப் பயன்படுத்தி, சிறிய கப்பல்களிலிருந்து ஓரளவுக்குப் பெரிய கப்பல்கள் வரை கட்டினர். அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இச்செயலில் மிகுந்த ஆர்வங்காட்டின. ஆனாலும் கப்பல் கட்டும் கலையை முதன்முதலில் வளரச் செய்தோர் உட்குடைவுள்ள மரம் துடுப்பால் தள்ளப்படும் படகு மிதவை பாய்மரக்கப்பல் படம் 1. கட்டுமரம்