பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 கப்பல்கள்‌

534 கப்பல்கள் பீனிஷியர்கள் (Phoenicians) ஆவர். இவர்கள் வணிகக் கப்பல்களைக் கட்டினர். அடுத்து, கிரேக்கர்கள், இக் கலையில் வல்லுநர்களாக இருந்தனர். கிரேக்க நாடு, பல தீவுகனைக் கொண்டு அமைந்திருந்தமையால், கடலில் பயணம் செய்துதான் ஒவ்வொரு தீவுகளுக்கும் செல்லும் நிலை இருந்தது. அதனால் பயணிக் கப்பல் களையும், வணிகக்கப்பல்களையும், போர்க்கப்பல் களையும் பெருமளவில் கட்டத் தொடங்கினர். போர்த்துக்கீசியர்கள் பாய்மரக்கப்பல்களிலே தெடுத் தொலைவு பயணம் செய்து, பலநாடுகளுக்கு வணிகம் செய்ததாக வரலாறு உள்ளது. ப கிரேக்கர்களுக்குப் போட்டியாக, ரோமானியர் களும் போர்க்கப்பல்கள், வணிகக்கப்பல்கள், பயணி களை ஏற்றிச்செல்லும் பிரயாணக் கப்பல்கள் மூன்று வகைக் கப்பல்களை அளவில் பெரியனவாக என வும், வசதிகள் கொண்டனவாகவும் கட்டுவதில் ஆர்வங் காட்டினர். பெரும் பாய்மரக்கப்பல்கள் மூலம் உணவுப் பொருள்கள். பளிங்குக்கற்கள் கல்தூண்கள் போன்றவற்றை எகிப்திலிருந்து ஏற்று மதி இறக்குமதி செய்து, மத்தியதரைக் கடலில் ஆதிக்கம் செலுத்தினர். ரோமானியருக்குப் பின்னர், வட ஐரோப்பியா நாடுகளில், பொருள் வசதிபடைத்த வைக்கிங்குகள் (vikings), பல வகைக் கப்பல்களை மிகவும் சிறந்த முறையில் கட்டினர். வட அமெரிக்கா, கிரீன் லாந்து, வட அட்லாண்டிக் கடல் வழியே காலனிகளில் மக்களைக் குடியேற்றுவதற்கும், கத்திற்கும், போருக்கும் நவீனக் கப்பல்களைப் பயன் படுத்தினர். ஏறக்குறைய 24 மீட்டர் அகலமும் 5 மீட்டர் அகலமும் உள்ள இக்கப்பல்கள், பக்கத் வணி பீனிஷியன் வணிகக்கப்பல் படம் 2. கிரேக்கப் பாய்மரக் கப்பல்