பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 கப்பல்கள்‌

538 கப்பல்கள் இரும்பு, நிலக்கரி, தாதுப்பொருள்கள் ஏற்றிச் செல்பவை, எண்ணெய் ஏற்றிச் செல்பவை, பொது வான பண்டங்கள் ஏற்றிச் செல்பவை, அனைத்துப் பொருள்களையும் ஏற்றிச் செல்பவை என நான்கு வகைகளாக வணிகக்கப்பல்கள் பிரிக்கப்படுகின்றன. போர்க்கப்பல். விமானதளக்கப்பல், நிலநீர்த் தொடர்புடைய போர்க் கப்பல்கள். காவல் கப்பல் கள், கப்பல்களை உடைக்கத்தக்க போர்க்கருவிகளை யும் கருவிகளையும் ஏற்றிச் செல்லும் கப்பல்கள், போர் வேவுக் கலங்கள். நீர்மூழ்கிக் கப்பல்கள் என போர்க்கப்பல்கள் ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன. விமான தளக்கப்பல். இது வெடிகுண்டு விமானங் கள், போர் விமானங்கள், போர் ஹெலிக்காப்டர்கள், சிறுவிமானங்கள் போன்றவற்றை ஏற்றிச்செல்லும். விமானங்கள் விரைவில் மேலே எழுந்துச் செல் வதற்கும்,அதேபோல் இறங்குவதற்கும் ஏற்றவாறு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 85-95 விமானங் கள் வரை ஏற்றிச் செல்லக் கூடிய அளவுக்கு ஏறக் குறைய 335 மீட்டர் நீளமுடையது. 30 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது. நீல நீர்த் தொடர் புடைய போர்க்கப்பல்கள். இவை நிலப்படை, போர்க்கருவிகள், ஊர்திகள், 20-30 20 ஹெலிக்காப்டர்கள் ஆகியவற்றைக் கரையிலிருந்து ஏற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ளன. கடல்மைல் வேகமும் 250 மீட்டருக்குக் குறையாத நீளமும் உடையன. காவல் கப்பல்கள். விமான தளக்கப்பல்களை எதிரிகள் தாக்காதவாறு பார்த்துக் கொள்வது காவல்கப்பல்களின் வேலையாகும். இதில் ஆற்றல் மிகு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் 24-137 கிலோ மீட்டர் வரை தாக்கும் ஆற்றல் உடையவை. மேலும் நீரிமூழ்கிக்கப்பல்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து தாக்கும் கருவி களும்.27 மி.மி. துப்பாக்கிகளும் உள்ளன. ஒன்று அல்லது இரண்டு ஹெலிகாப்டர்கள் இதன் தளத் தில் எப்போதுமே ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன. 180 மீட்டர் நீளமும் 30 கடல்மைல் வேகமு முடையது. இவை, பொதுவாசு அழிக்கும் கப்பல்கள். விமானத் தளக்கப்பல், நீலநீர்த் தொடர்புடைய கப்பல், வணிகக் கப்பல் ஆகியவற்றைப் பாதுகாக்க படம். 6.