36 கட்டக நில இயல்
36 கட்டக நில இயல் குறுக்கு வெட்டுப்பரப்பு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டமையும் விட்டங்களில், 8 = S Mmdx EI என்னும் சமன் பாட்டில் தொய்வு. M-சுமையினால் ஏற்படும் வளைவுத்திருப்புமை, m - தொய்வு கண் டறியப்படும் புள்ளியில் ஓர் அலகு சுமையால் ஏற்படும் திருப்புமை; (-விட்டத்தின் நிலைமத்திருப்புமை: E- மீட்சிக் குணகம். கோர்வு உத்திரத்தில், 8= SUL Σ AE என்ற சமன்பாட்டில் S-சுமையால் ஏற்படும் தகைவு. U - தொய்வு கண்டறியப்படும் புள்ளியில் ஓர் அலகு சுமையால் ஏற்படும் தகைவு. L-உறுப்பின் நீளம். A-உறுப்பின் பரப்பு, E -மீட்சிக் குணகம். இச்சமன் பாடுகளிலிருந்து விட்டத்திற்கும், கோர்வு உத்திரங் களுக்கும் உள்ள தொய்வைக் கண்டறியலாம். கட்டக நில இயல் ரா. சரசவாணி கனிமங் நில இயல் என்பது நிலம் அல்லது புவியின் தன்மையை விளக்கும் ஓர் அறிவியலாகும். இதன் ஒரு பிரிவு கட்டக நிலஇயல் (structural geology) அல்லது நில அமைப்பியல் ஆகும். புவி பாறைகளாலும் களாலும் ஆக்கப்பட்டுள்ளது. புவியில் உட்புறத்திலும் மேற்பகுதியிலும் அமைந்திருக்கும் பாறைகளின் வடி வங்கள் அமைப்புகளைப் பற்றிய கருத்துகளை விரி வாகக் கூறுவதே சுட்டக நிலஇயலாகும். இவ்வியலை நில ஆக்கம் என்றும் நில ஆக்க இயல் என்றும் குறிப் பிடலாம். புலியில் உள்ள பாறைகள், அமுக்கு விசை, இழு விசை, திருகு விசைகளுக்கு உட்படும்போது அவற்றின் அமைப்புகளில் பற்பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்களால் உருவான நில அமைப்புகளைப் பற்றியும் அவற்றின் தன்மை, பயன் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பது கட்டக நில இயலாகும். பாறைகளில் காணப்படும் அமைப்புகள் முதன்மை அமைப்புகள், துணை அமைப்புகள் என இருவகைப் படும். பிளவுகள், மடிப்புகள், படிவுகள் முதன்மை அமைப்புகளாம். இணைப்புகள், நழுவு தொகுதிகள், பாறைத் திசை அமைவு. சாய்கோணம் போன்றவை துணை அமைப்புகளாம். பாறைக்குழம்பு வெளிவரும் போது ஏற்படும் பாறை அமைப்புகளையும், படிவுப் . பாறைகளில் ஏற்படும் படுகைகளையும் குறுக்குப் படுகைகள், சுவடுகள் போன்றவற்றையும் இவ்வியல் எடுத்துரைக்கும். மேலும் கோளின் மேற்பகுதியில் பிற கோள்களாலோ பிற பொருள்களாலோ உருவாகும் அமைப்புகளையும் இவ்வியல் எடுத்துக்காட்டும். கட்டசு நில இயலின் குறிக்கோள். அமைப்பின் வகை, உருவான காலம், அமைப்பு உருவான சூழ் நிலை என்பன குறிக்கோளாகும். இம்மூன்று நோக்கங் களை ளயும் முன் நிறுத்தியே இவ்வியல் தோன்றி யுள்ளது. அமைப்பின் வகை கண்டறிய உள்ளூர் நில இயல் அறிவு வேண்டும். மேலும் அமைப்பின் வடிவம், நீள அகலம், ஆழம் போன்ற செய்திகளைத் தொகுத் துக்கொண்டு எவ்வகைப் பாறைகளில் இந்த அமைப் புக் காணப்படுகிறது என்பதையும் கொண்டு அதன் அமைப்பைக் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு கண்டு பிடிப்பதற்கு நிலஇயல் களப்பணி மிகவும் இன்றியமை யாதது. நில வரைபடங்கள், வான்புகைப் படங்கள், தொலை உணர்வுப் படிகள் ஆ ஆகியவற்றின் துணை கொண்டு பாறைகள் புவிக்கு வெளியே எங்கெங்கு காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் பாறைகளின் போக்கு, சாய்கோணம் ஆகியவற்றைக் கண்டறிந்து அங்கு காணப்படும் அமைப்பைக் காணலாம். அமைப்பு களைக் கண்டுபிடிப்பதற்கு. நில யலாளருக்கு கூர்நோக்குத் தேவைப்படும். ஓர் அமைப்பை நோக்கும்போது அதன் இன்றி யமையாத் தடயங்களைத் தெரிந்து கொள்ளாவிடில் பிறகு அத்தடயத்தை எப்போதுமே காணமுடியாது. ஏனெனில் ஓர் இடத்தை நில இயலாளர் ஓரிரண்டு மேல் முறைகளுக்கு பார்ப்பதில்லை. மேலும் ஓரிடத்தைப் பார்க்கும்போதே அந்த நுட்பத்தை அறியும் திறனும் வேண்டும். காணும் செய்திகளைத் தொகுத்துக் கொண்டு, அனைத்துச் செய்திகளையும் முழுமையாக அறிந்த பிறகே ஆய்ந்து அறிய வேண்டும். ருவானது தோன்றிய ஓர் அமைப்பு எந்தக் காலத்தில் என்று கண்டுபிடிக்க வேண்டும். புவி காலம் முதல் இன்றுவரை உள்ள காலம் ஏறத்தாழ 450 கோடி ஆண்டாகும். இக்காலம் பற்பல தொகுதி களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு குறிப் பிட்ட அமைப்பு எந்தக் காலத்தில் உருவானது என்று வேண்டும். கண்டறிய தமிழ்நாட்டின் பெரியார் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி கிரானைட் டூம். ஆர்க்கேயன் காலத்தில் தோன்றியது. இமயமலைத் தொடர். டெர்சரி காலத்தில் தோன்றியது என்பவை போலக் காலத்தைக் கண்டறிதல் வேண்டும். சிற்சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளைக் காணலாம். சான்றாக ஓரிடத்தில் மேல் மடிப்பும், பிளவும் டைக்கும் இருந்தால், இவற்றுள் காலத்தால் எது முந்தியது எது பிந்தியது எனக் கண்டுபிடிக்க வேண்டும். ஓர் அமைப்பின் காலத்தையும் வயதையும்