542 கப்பல் புழு
542 கப்பல் புழு (bulk head) எனப்படும். கடற்கரைக்குச் செங்குத் தாகவோ, சாய்கோணத்திலோ கட்டப்படும் மேடை கொம்புத்துறை (pier) எனப்படும். இக்கட்டுமானங் கள், மண் அணைப்பைத் தாங்குவதற்கும், செய் கரைகளைக் (embankments) காப்பதற்கும் தேவைப் படுகின்றன. ஆனால் அதே சமயத்தில் இம்மேடைகள் தளமாகவும் பயன்படுகின்றன. எஃகு, கற்காரை, தேக்கு முதலியவற்றாலான குத்துத் தூண்களை உடைய மேடைகளுடன் வலிவூட்டப்பட்ட கற்காரை அல்லது செங்கற்களாலான தாங்கு சுவர்களும் பயன்படுகின்றன. இம்மேடைகளின் நகர்வு (move- ment), படிமானம் (settlement), உடனடியான குலைவு ஆகியவை அடிக்கடி நிகழ்வனவாகும். செயற்கை யான இக்கப்பல் தங்குமிடங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் கப்பல் தங்கவும் இயங்கவும் பயன்படும். ஓர் இடத்திலிருந்து கப்பல் இருக்கும் இடத் திற்குச் சரக்குகளைக் கொண்டு செல்வதற்குப் பயன் படும் சாலைகள், இருப்புப்பாதைகள், சரக்குகளை ஏற்றும் இறக்கும் இடங்கள், சரக்குகளைப் பிரிக்கும் இடங்கள், பிற வசதிகள் அனைத்தும் கப்பல் துறை யில் இன்றியமையாதவை. கப்பல்துறை நீர்த்துறை (wer dock), உலர்துறை (dry dock), மிதக்கும் துறை (tiloating dock) என மூவகைப்படும். உலர் லா நீர்த்துறை. கப்பல் தந்து கொண்டிருக்க வேண்டிய ஆழம், துறைமுகத்தில் உள்ள ஏற்ற இறக்கம் காரணமாக நிலையாக ல்லாமல் நீர் மட்டம் குறைந்து விடலாம். இச்சூழ்நிலையைத் தவிர்க்க துறைமுகத்தருகில் கடலினுள் பல கிலே மீட்டர் வரை வலிமையான சுவர் எழுப்பப்படுகிறது. அச்சுவரில் நீர் நுழைய முடியாதபடி கதவு அமைக் கப்படுகிறது. கப்பல் துறைமுகத்தின் உள்ளே வந்ததும் சுப்பல் மிதக்கத் தேவையான நீர் மட்டம் உள்ளபோது கதவு மூடப்படுகிறது. இதனால் நீர் மட்டம் ஒரே நிலையில் இருக்கும். இத்தகைய செயற் கைத் துறைமுக அமைப்பே நீர்த்துறை எனப்படு கிறது. கப்பலைப் பழுது பார்க்கவும், சரக்குகளையும், பயணிகளையும் ஏற்றவும் இறக்கவும் இத்துறை பெரிதும் பயன்படுகிறது. . உலர்துறை. கடலில் மிதக்கும்போது அதன் அடிப் பகுதி ஓரளவிற்கு நீரில் மூழ்கி இருக்கும். மூழ்கியிருக் கும் பகுதியிலும், கப்பலின் அடிக்கட்டைப் (keel) பகுதியிலும் பழுதுகள் ஏற்பட்டால் அதைச் சீர்செய்ய இயற்கை அல்லது செயற்கை முறையில் நீரை வெளி யேற்ற அமைக்கப்படும் துறையே உலர்துறை எனப் படும். நீரை வெளியேற்றும்போது கப்பல் கவிழ்ந்து விடாமல் இருக்கத் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. இத்துறை கற்காரையால் கட்டப்படுகிறது. இங்கிலாந்தில் சவுத்தாம்டனில் 360 மீ. நீளமும், 40.5 மீ. அகலமும் உடைய உலர் துறையே உலகில் மிகப்பெரியதாகும். மிதக்கும் உலர்துறை. கப்பல் கடலில் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் பழுது ஏற்பட்டால் பழுதுபார்க்கும் துறைக்கு அனுப்பாமல் உடனடி யாகப் பழுதுபார்க்கும் துறையே மிதக்கும் உலர் துறை எனப்படும், இது இரு சுவர்கள் கொண்ட மிதவையாகும். இச்சுவர்களிலும் அதன் அடிப்பகுதியி லுள்ள அறைகளிலும் நீர் நிரப்பப்படுகிறது. பின்னர் பழுதடைந்த சுப்பலுக்குக் கீழே இம்மிதவை இறக்கப் படுகிறது. இறக்கப்பட்ட மிதவையிலுள்ள நீரை வெளியேற்றும்போது கப்பல் மிதவை மீது நிற்கும். பின்னர் கப்பலிலுள்ள பழுது சீர் செய்யப்படுகிறது. இதுபோன்ற மிதக்கும் உலர்துறைகள் போர்க்காலங் களில் பெரிதும் பயன்படுகின்றன. இவை எஃகு, இரும்பு முதலியவற்றால் கட்டப்படுகின்றன. பிற கப்பல் துறைகளைவிட இது சிக்கனமானது. ஆனால் அவற்றைவிடக் குறைந்த காலமே பயன்படக் கூடியது. ட துறைமுகத்தின் பரப்பு, வடிவம், கடற்கரை யமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து கப்பல்துறை விசிறி வடிவிலோ, கவை வடிவிலோ அமைக்கப் படுகிறது. இத்துறையை அமைக்கும்போது, கப்பலைப் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அருகில் இருப்பது மிகவும் இன்றியமையாததாகும். மேலும் கப்பல் துறைகள் எவ்வடிவில் இருந்தாலும் கப்பல்கள் வந்து தங்கவும், இயங்கவும் போதுமான வசதிகள் பெற்றி ருக்கவேண்டும். கப்பல் புழு 24 இரா. சரசவாணி ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கப்பல் மரப்பலகைகள், துறைமுகங்களில் நடப்பட்டுள்ளன. மரத்தூண்கள்: கட்டுமரத்தோணிகள் போன்றவை கப்பல் புழுக்களால் (ship worms) அழிவடை கின்றன. கொலம்பசின் நான்காம் கடற்பயணத்தின் போது, இப்புழுக்களால் அவர் கப்பல்கள் அழிந்தன என்பதை வரலாற்றில் அறியலாம். அனைத்துக் கடல்களிலும் காணப்படினும், வெப்பக்கடல் களிலேயே இப்புழுக்களின் முனைப்புடைய செயலால் கேடுகள் மிகுதியாகின்றன. இந்திய நாட்டுக் கிழக்குக் கடற்கரைக் கப்பல் புழுக்களில் 23 இனங்களும் மேற்குக் கடற்கரைப்புழுக்களில் 10 இனங்களும் காணப்படுகின்றன. இவற்றில் டெரிடோ (Teredo), பேங்கியா (Bankia) நாசிடோரா (Nausitora) போன்றவை வலிமையான மரப்பலகைகளையும் துளைத்து அழித்துவிடுவதால் முக்கியத்துவம் பெற் றுள்ளன. பொதுவாக ஆழம் குறைந்த அண்மைக் கடல்களிலேயே மிகுந்த அளலில் இவை காணப்பட் டாலும், 1000 மீட்டருக்கும் மேல் உள்ள ஆழ்