கம்பளி 551
கபாலமின்மை உடலமைப்பில் தோன்றும் பிறவிக் குறைபாடுகளில் கபாலமின்மையும் ஒன்றாகும். இக்குறைபாடுடன் வளரும் கருக்களில் 20% கருச் சிதைவுக்குட்பட்டு அழிகின்றன. எஞ்சிய கருக்கள் இறந்து பிறக்கலாம், அல்லது உயிருடன் பிறந்து சில மணி நேரங்களில் இறந்தும் போகலாம். இக்குறையுடன் பிறக்கும் குழந்தைகள் பிழைக்க வாய்ப்பே இல்லை. இதற்கு மருத்துவமும் இல்லை. பல் நாடுகளிலிருந்தும் கிடைத்துள்ள கணக் கெடுப்பின்படி, 1000 கருத்தரிப்புகளில் 1 -4 வரை இத்தகைய குறைபாட்டுக்கு உட்பட்டுப் பிறக்கு முன்னரோ பிறந்த சில மணி நேரத்துக்குள்ளோ இறக்கின்றன. தாய்க்கு இத்தகைய கருவளர்ச்சிக் குறைபாடு ஒருமுறை ஏற்பட்டால் அவளது அடுத்த கருத்தரிப்பு இத்தகைய குறைபாட்டுக்காளாகும் வாய்ப்பு 3-30 மடங்கு வரை மிகைப்படுவதாகக் கணக்கெடுக்கப் பெற்றுள்ளது. இத்தாய்மார் அடுத்துக் கருத்தரிக்கும் முன் தக்க மரபியல் வல்லுநர் மருத்துவர்களின் அறிவுரையை நாடினால் குறை ஏற்படாமல் தவிர்க்க வழியுண்டு. க கரு வளர்ச்சிப் போக்கில் நரம்புக் குழாய் அமையப் பெற்று முன்முனைப் பகுதி முன்மூளையாக அமைய வேண்டும். இந்நிலையில் அப்பகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான இரத்தக் குழாய்கள் அமையப் பெறாவிடில் முன்மூளைப் பகுதிக்கான நரம்பணுக்களின் முன்னோடிகள் நலிந்து சிதைந்து மறைகின்றன. மூளைப் பகுதியைச் சுற்றித் தோல் வளர்ச்சியுற்றாலும் மண்டையோடு அப்பகுதியைச் சூழ்ந்து அமைவதில்லை. நடுமூளை பாலமூளை, முகுளம் போன்ற மூளைத் தண்டுப் பகுதிகளும், சிறு மூளையும்,தண்டுவடமும், பிற நரம்புகளும் சரிவர அமைகின்றன. ஆனால் இப்பகுதிகளில் மூளையில் இருந்து வரும் இறங்குதடங்கள் இருப்பதில்லை மேலும், மூளையடிச் சுரப்பியின் அமைப்பும் குறை படலாம்; அமையாமலும் போவதுண்டு. சிறுநீரகமடு நாளமில்லாச் சுரப்பியின் புறணிப் பகுதியும் வளர்ச்சி குன்றிக் காணப்படும் இக்குழந்தைகளின் தலை, முகப் பகுதிகளின் கொண்டே தோற்றத்தைக் இக்குறைபாட்டைக் கண்டுகொள்ளலாம். கண்கள் மிகவும் பிதுங்கியிருக் கும். தலையின் முன்பகுதி சரிவர அமையாமல் பின் நோக்கிச் சாய்வாகக் காணப்படும். இக்குழந்தைகள் பெரும்பாலும் உணர்வின்றியும் அசைவின்றியும் கிடப்பர். அவ்வப்போது தாமாகவே மெல்ல வதும் உண்டு. யாரேனும் தொட்டால் இக்குழந்தை மெல்ல நெளிந்து அசைந்து, தலையைத் திருப்பும்; கை கால்களையும் மடக்கலாம். பிறந்த குழந்தை களிடம் இயல்பாகக் காணப்படும் மறிவினைச் செயல் சை கம்பளி 551 களுள் சிலவாகிய மோரோ மறிவினைச் செயல் போன்றவற்றை இக்குழந்தைகளிடம் காணலாம். சில குழந்தைகள் உதடசைந்து, வாய்கூட்டிச் சப்பவும் கூடும். ஆனால் அழுகை, கொட்டாவி, தும்மல் போன்ற செயல்கள் தோன்றா. உணர்ச்சி வசப்பட் டழுவது போன்ற முக அசைவுகள் கூடத் தோன்ற லாம். இந்நிலையில் இக்குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்னும் உண்மையை அவற்றின் தாய்மார்களோ, தந்தையரோ, உற்றாரோ ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இக்குறை மூன்றுக்கு இரண்டு என்னும் விகிதத் தில் பெண் கருக்களையே மிகையாகத் தாக்குகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள் கருத் தரிக்கும்போது இக்குறை தோன்றும் வாய்ப்பு மிகும். மகப்பேற்று நிலையில் தாயின் உணவூட்டக் குறைவு. தாய்மை நிலையில் உட்கொள்ளும் சில மருந்துகள், நுண்கதிர் வீச்சுக்கு ஆளாதல் போன்ற காரணங் களால் இக்குறை தோன்றும் வாய்ப்பு மிகும். ம் ஒரு தாயின் வயிற்றில் வளரும் கரு இக்குறைக்கு ஆளாகியிருக்குமோ என்னும் ஐயம் தோன்றினால் அத்தாயின் சிறுநீர், இரத்தம் முதலியவற்றை ஆய்வ தோடு, கருப்பை நீரை ஆய்வு மூலமும், நுண்கதிர்ப் படம், கடவொலிப் பதிவு, கருக்காண் முறை போன்ற வற்றின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். இக்குறை கருச் உள்ளமையைத் தெளிவாக்கிக் கொண்டால், இத்தாய்மாரின் சிதைவுண்டாக்கி குறைக்கலாம். கம்பளி துன்பத்தைக் கா. லோ. முத்துக்கிருஷ்ணன் விலங்குகளின் மேலுள்ள அடர்ந்த மயிரைப் பக்குவப் படுத்தி நூலாக்கி, அதன் மூலம் ஆடையாக்குதல் தொன்று தொட்டு நிலவும் வழக்கமாகும். இதில் புரதப்பொருள் மிகுந்துள்ளது. கம்பளி இழைகள் விலங்குகளிலிருந்து பக்குவப் படுவதால், விலை மிகுந்தவையாக இருந்தாலும், ஆடைகளுக்கு அவை மிகுந்த சூட்டையும், மென் தன்மையையும் அளிக்க வில்லனவாக உள்ளன, கம்பளியில். புரதச்சத்து மிகுந்த அளவில் அமைந்து, கரைய முடியாததாகின்றது. இச்சத்தைக் கெரேட்டின் (keratin) என்பர். இறகுகள், தோலின் மேற்பகுதி நகம், மாட்டின் கொம்பு, மயிர் போன்ற பொருள்களில் கெரேட்டின் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றது. கம்பளி இழையின் அமைப்பு. கீழே உள்ள கம்பளி இழையின் படத்தில் கம்பளத்தின் உள் அமைப்பு