554 கம்பளி நூல் உற்பத்தி
554 கம்பளி நூல் உற்பத்தி இழையின் நீளமும், மென் தன்மையும் ஒன்றோ டொன்று இணைந்து செயல்படும் பண்புகள் கம்பளி இழையின் நீளம், அவ்விழையின் விட்டம் இவற்றைப் பொறுத்தே அமையும். உடையது சுருங்கும் பண்பு, கம்பளி இழையின் மென்மை யைச் சுட்டுகிறது. இக்கம்பளி இழைகள் நூலாக நூற்கப்படும்போது, இழைகள் ஒன்றோடொன்று ணைந்து முறுக்கேற உதவுகின்றன. கம்பளி வகை களிலேயே பெருமளவில் நூற்சுருக்கம் மெரினோ கம்பளியேயாகும். ஏறத்தாழ முப்பது சுருக்கங்களைப் பெற்றுள்ளது. சுருங்கும் இயல்பு. கம்பளி இழைகளுக்குச் சிறந்த மீட்சித்தன்மையை (elasticity) அளிக்கிறது. பெரும்பான்மையான கம்பளி இழைகள் ஏறக் குறைய வெள்ளை நிறமாகவே காணப்படும். சில கம்பளி வகைகள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருப்பதும் உண்டு. இத்தகைய கம்பளி இழைகளில், மிகவும் மென்மையாக இருக்கும் சில இழைகள், எவ்விதப் பளபளப்பும் இல்லாமல், மென்மையற்ற சில இழைகள் மட்டும் மிகுந்த பளப் பளப்பாக இருக்கும் நிலையைக் காணலாம். க கம்பளி, நீரை உறிஞ்சும் உயர் தன்மையைப் பெற்றுள்ளது. நீரை உறிஞ்சிய பின்னரும், கம்பளி யைத் தொட்டால் உலர்ந்திருப்பதோடு, வெப்பத்தை உடனடியாக வெளியேற்றிக் கதகதப்பையும் அளிக் கிறது. கம்பளி இழைகளை நூலாக நூற்கும்போது நிலைமின்சாரம் (static electricity) உண்டாவதைக் காணலாம். மேலும் இது தீயை எதிர்க்கும் பண்பை யும் கொண்டுள்ளது. கி கம்பளியின் பயன்கள். கம்பளி ஆடைகளாக நெய்தபின், உடுத்துவதற்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் பயன்படுகிறது. சிறப்பாக மருத்துவத் துறையில் கம்பளியின் பணி சிறப்புமிக்கது. பல சிறு துளைகள் உடைய கம்பளி மிகுந்த நீள்மீட்சி (resilienec) கொண்டுள்ளமையால், நோயாளியைக் கதசுதப்போடு பாதுகாக்கப் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் ஆடை உடலோடு ஒட்டுவதால் ஏற்படும் தீய விளைவுகளைக் கம்பனியால் தவிர்க்கலாம். தரமான இக்கம்பளி நீண்ட நாள் பயன்படும். மேலும் பிற ஆடைகளில் வரக்கூடிய நூல் எழுச்சிகளும் (piling) இதில் காணப்படா, கம்பளி இழைகளால் ஆன ஆடைகள் தைப்பதற்கு எளிமையாக உள்ளன. வே. சுப்ரமணியன் கம்பளி நூல் உற்பத்தி ஆடுகளினின்று கிடைக்கும் இழை, கம்பளி எனப்படும். ஆட்டின் இழை இரு திறமாகக் கிடைக்கிறது. நீள மான மயிர் அவற்றின் மேலிருக்கும் சிறு இழைகளைக் காக்கின்றன. இச்சிறு இழைகளே கம்பளி எனப்படும். கம்பளி ஆடைகள்நெய்யவும், துணிகள் பின்னவும் பயன்படுகிறது. இவற்றுடன், தொப்பிகள். மிதியடி கள் போன்றவற்றைச் செய்வதற்கும் கம்பளி இழைகள் பயன்படுகின்றன. ஆடைகள் உற்பத்தி செய்கையில் கம்பளி வகை நூலாக நூற்கப்படுகிறது. முதல்வகை, கம்பளி நூல் (woolen) என்றும், பிறிதொரு வகை முறுக்கிய கம்பளி நூல் (worsted) என்றும் கூறப்படுகின்றன. நூல் நூற்கு முன்னர் இழைகள் பின் வரும் முறையில் பலவகை நிலைகளைக் கடந்து, இறுதியில் நூல் வடிவம் பெறுகின்றன. இத்தகைய நூலே பின்னர் கம்பளி ஆடை நிலையை அடைகிறது. அழுக்குகளைக் களைதல். கம்பளி இழைகளி லுள்ள கலப்புப் பொருள்களான இயற்கைப் பொருள் களைக் (vegetable matter) களையக் கால்வாய்த் துப் புரவு செய்யும் முறையைப் (scouring) பின்பற்ற வேண்டும். இது. கம்பளியை வெதுவெதுப்பான நீரில் சோடா உப்புடனும், சவுக்காரத்துடனும் கலந்து இயக்கும் முறையாகும். இம்முறையில் அனைத்துவகைக் கலப்புப் பொருள்களையும் செல் வனே களைந்து எடுத்தாலும், இயற்கைப் பொருள் சளைக் களைந்தெடுக்க இயலாது. கம்பளியுடன் மேலும் சில பொருள்களும். குறிப்பாகப் 'பர்' (burr) என்று கூறப்படும் பொருளும் கலந்துள்ளன. அத் தகைய 'பர்' என்னும் கலப்புப் பொருள் கால்வாய்த் துப்புரவு முறையிலும் பின்னர் கார்டிங் (carding) முறையிலும் ஓரளவு நீக்கப்படும். இவை நீக்கப் பட்ட பின்னர், கம்பளி சூடான கந்தக அமிலத்தால் பதனிடப்படுகிறது. இயற்கைப் பொருள்களைக் களைந்தெடுக்கும் இம்முறை 'கார்பனைசிங்' (car- bonizing) எனப்படும். இம்முறை துணிகளுக்கும் அளிக்கப்படுகிறது. கலத்தல். இது வெவ்வேறு வகைக் கம்பளிகள் கலக்கப்படும் முறையே ஆகும். கம்பளித் தொழிலில், பயன்படுத்திய களைப் பொருளான கம்பளிகளும் கலக்கப்படுகின்றன. இந்த முறையில், கம்பளி இழை களுக்குச் சிறிதளவு எண்ணெயும் இடப்படுகிறது. இது, வெவ்வேறு விதமான கம்பளி இழைகளும் கலக்க உதவி புரிகின்றது. கார்டிங். கால்வாய்த் துப்புரவு முறையில் கம்பளி இழைகள் ஒரே சீராக இராமல் ஒன்றோடொன்று சிக்கித் தாறுமாறாக உள்ளன. இவற்றைக் கார்டிங் முறையால் சீராக்கவியலும். இம்முறையில், இழைகள் நுண்ணிய ஆணிகள் உள்ள உருளைகளால் நேராக்கப் பட்டுக் கயிற்றின் வடிவம் பெற்று வெளியே வரு கின்றன. மேற்கூறப்பட்ட இருவகை நூல்கள், இக் கார்டிங் முறையை அடுத்து வெவ்வேறு முறையில்