பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பளி நூல்‌ உற்பத்தி 555

நூற்கப்படுகின்றன. இவ்விரு நிலைகளைப் பின்வரும் அட்டவணையில் காணலாம். கம்பளி இழைகள் வேறுபடுத்தல் பிரித்தெடுத்தல் கலத்தல் அழுக்கை எடுத்தல் கம்பளி நூல் கார்டிங் நூல் நூற்றல் விட்டமுடைய நூல் மெலிந்து மென்மை வடிவம் பெறுதல் முறுக்கிய கம்பளி நூல் t கார்டிங் (சிறு இழைகளை நீக்கிச் சீராக்குதல்) நீட்டுதல் (மென்மையாக்குதல்) நூல் நூற்றல் (நூல் மென்மையாக, நுண்ணிய கடினத் தன் மைகளைப் பெறுதல்) கம்பளி இழைகளை நூலாக நூற்பதில், கம்பளி நூலும் முறுக்கிய கம்பளி நூலும் அமையும் நிலைகளைச் சித்திரிக்கும் அட்டவணை. கம்பளி நூல்கள் சிறு இழைகளைத் தம்முள் கொண்டும், சீராகவிராமல் பிசிறுகளை உடையன வாகவும் உள்ளன. கார்டிங் முறையால் கிடைக்கும் கயிறு போன்ற இழைகள் வடிகலம் (condenser ) என்னும் எந்திரத்தால் ஒரு பந்து போல் சுருட்டப் படுகின்றன. கம்பளி நூல்கள் இருவகை முறையில் நூற்கப்படுகின்றன. முதல்முறை மியூல் (mule) எனவும், இரண்டாம் முறை ரிங்பிரேம் (ring frame } எனவும் கூறப்படும். இம்மியூல் மியூலினால் நூற்கும் முறை. என்னும் நூற்பு முறையைப் பின்வரும் படத்தில் காணலாம். சுழல் 'S' கம்பளிப் புரியிழையிலிருந்து சிறிது தொலைவு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சில சுழல்கள் கொடுக்கப்படுகின்றன. இது, நூலில் முறுக்கு அளிக்க உதவுகிறது. பின்னர். இச்சுழல் நிற்க, நூல் மிகவும் விரைவாகச் சுற்றப்படுகின்றது. இவ்வாறு சுற்றுகையில், நூலில் ஒரு குறிப்பிட்ட அளவே முறுக்கேற்றப்படுகிறது. இந்த அளவு சாதா ரணமாக ஓர் அங்குலத்திற்குப் பத்து முறுக்குகள் வீதம் வரையறுக்கப்பட்டுள்ளது. பின்னர், கதிர் பின் னால் சென்று, இரு உருளைகளில் நடுவின் ஓட நூல் கற்றப்படுகின்றது. கம்பளி நூல் உற்பத்தி 555 ஒரு கம்பளி மியூலில், 300-400 கதிர்கள் உள்ளன இத்தகைய நூற்பு எந்திரம் மிகவும் குறைவான வேகத்தில் சுழலுவதால், உற்பத்தி குறைந்த அள வாகவேயுள்ளது. மேலும், இவ்வெந்திரம் மிகவும் அதிகமான இடத்தை அடைப்பதால், இன்று மிகுதி யாகப் பயன்படுவதில்லை. ரிங்பிரேமினால் ரிங்பிரேம் முறை. நூற்கும் என்னும் இந்நூற்பு எந்திரத்தில், கம்பளிப் புரியிழை எனப்படும் தடிப்பான நூல் இரு உருளைகளின் வழியாகச் செலுத்தப்படுகின்றது. இவ்வுருளைகள் கம்பளிப் புரியிழையை நீட்டித்து, பின்னர் பயணர் எனப்படும் சிறு பொருளினுட் சென்று அடையுமாறு அமைந்துள்ளன. பயணர் சுற்றும்போது, நூற்கதிர் கள் முறுக்கேறி, மேலுள்ள குழலில் சுற்றப்படு கின்றன. இம்முறையில், கதிர்கள் மிகவும் விரைவாக இயங்குகின்றன. இவ்வகை நூற்பில், நீட்டித்தல், முறுக்கேற்றுதல், நூலைச் சுற்றல் போன்ற செயல் கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. முறுக்கிய கம்பளிநூலின் நிலைகள். கார்டிங்கிற் குப் பின்னர், இந்நூல் நூற்கும் நிலைகள் பின்வரு மாறு: கில்லிங் (gilling), சீவுதல் (combing), நீட்டித் தல் (drawing) (இந்நீட்டுதலைப் பலமுறை செய்ய வேண்டும்),நூற்றல் (spinning) என்பன. கம்பளியை மேற்கூறிய முறைகளில் சாயம் போடவும் இயலும். கம்பளியைத் தூய்மை செய்து உலர வைத்தலும் உண்டு. இவை கீழே விளக்கப்பட்டுள்ளன. கில்லிங். கில்லிங் நிலை சீவுதல் நிலைக்கு முன்னர் உள்ளமையால் கம்பளியிலுள்ள இழைகள் ஒரே சீராக அமைய இயலும். இம்முறையில், இரும் பில் பல் உள்ள ஓர் அமைப்பைக் காணலாம். கம்பளி யால் உருவாக்கப்பட்ட கயிற்றிழை (sliver) இரு உருளைகளின் நடுவே போகும்போது. இவ்விரும்பு கம்பளியில் உள்ள இழைகளைச் சீவி, அவற்றை ஒரே சீராக்கும். இவ்விழைகள் மேலும் பல இழை களுடன் சேர்க்கப்பட்டு மீண்டும் கில்லிங் எனப்படும் முறையில் செய்யப்படுகின்றன. இந்நிலையில் எண்ணெயும் சிறிதளவு பயன்படுகிறது. இது கம் பளியை மேலும் சீராக்க உதவுகிறது. சீவுதல். இச்சீவுதல் கம்பளியிலுள்ள இழைகளை மீண்டும் சீர்செய்து, அவற்றிலுள்ள சின்னஞ்சிறிய முயலுகிறது. இழைகளை நீக்க இதனால், பல விதக் கம்பளிகளை நன்கு கலக்கவும், அவற்றிலுள்ள இயற்கைப் பொருள்களை அகற்றவும் முடியும். இதனால் சீராக்கப்படும் கயிறு 'டாப்' (10p) எனவும், சிறு இழைகள் கம்பளிச் சீவல்கள் (noil) எனவும் கூறப்படுகின்றன. கம்பளி இழைகள் ஒரு சீப்பில் செலுத்தப்பட்டுப் பின்னர் நன்றாகச் சீவப்பட்டு, மீண்டும் கயிற்றின் வடிவம் பெறுகின்றன. பிரென்ச் சீவுதல் (french combing), நோபெல் சீவுதல் (noble) எனச் சீவுதல் முறை இரு திறத்தனவாகும்.