பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 கம்பளி நூல்‌ உற்பத்தி

556 கம்பளி நூல் உற்புத்தி TO R L = கம்பளிப் புரியிழை R= உருளிகள் S = சுழல் படம். கம்பளி நூலை பிரென்ச் சீவுதல். இதில், சீப்புகள் நேராக, பதி னெட்டு வகையான கம்பிகளைச் கொண்டுள்ளன. கம்பிகளின் அமைப்பும், வடிவமும் வெவ்வேறாக உள்ளன. கம்பளி இழைகள் இச்சீப்புகளின் மேல் சென்று நன்றாகச் சீவப்பட்டு, பின்னர் ஓர் அளவில் நீக்கப்பட்டு மீண்டும் சீவப்படுகின்றன. சிறுவிழைகள் நீக்கப்பட்டு, ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுக் கயிற்றிழை வடிவம் பெறுகின்றன. இது ஒரே நீள மாகவும், ஆனால் ஒரே சீராகவிராமல் நடுநடுவே சற்றுப் பருமனாகவும் காணப்பபடும். . மியூல் என்னும் கருவியால் நூற்றல் நோபல் சீப்பு, இச்சீப்பு வட்ட வடிவமானதாகும். இது கயிற்றிழைகளை நன்றாகச் சீவி ஒரே சீராக்க உதவுகிறது. 72 கயிற்றிழைகள் 3 அல்லது 4 அடி விட்டமுள்ள எந்திரத்தில் சென்று, மிகவும் மெது வாகச்சுற்றி, இரண்டு இடங்களில் கம்பிகளால் நன்கு சீவப்படுகின்றன. சுழலும் பெரிய சீப்பில் இரு சிறிய கம்பிகள் இவற்றைச் சீவி இழைகளை ஒரு பாயில் இட்டு இணைக்கின்றன. சிறு இழைகள், நெப் (neps) எனப்படும். இழைக்கட்டிகள், மற்றும் களைகள் அனைத்தும் இம்முறையில் கம்பளி இழைகளினின்று நீக்கப்படுகின்றன.