பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பி அமைப்பு, மின்‌ 559

கம்பி அமைப்பு, மின் 559 சூழலில் நீலம் கலந்த பச்சையாகவும், கறுத்த சூழலில் நீலம் கலந்த சாம்பல் நிறமாகவும் மாறும். இதே போன்று வளையும் கம்பளிப் புழுக்களை (looping caterpillar) அவற்றின் இளமையில் கறுத்த குச்சிகளி னிடையே வைத்தால் அடர்ந்த பழுப்பு நிறத்தையும், இலைகளினிடையே இருக்கும்போது பச்சை நிறத்தை யும் அடைகின்றன. பூக்கும் தாவரங்களான உயர் தாவரங்களை மட்டுமே கம்பளிப்புழுக்கள் உண்கின்றன. இவ்வகைத் தாவர இனம் ஒவ்வொன்றும் பெரும்பாலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்பளிப்புழு இனத்திற்கு உணவாகாமல் இருந்ததில்லை. ஆடுதின்னாப்பாளை என்னும் செடி, மிக அழகான ஒருவகைக் கம்பளிப் புழுவிற்கு உணவாகிறது. கம்பளிப் புழுக்களில் சிலவே ஊன் உண்ணிகள்; லைகேனிட் (Lyckenid) என்னும் வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப்புழுக்கள் இவ்வகை யானவை. லைகேனா ஏரியான் (Lycaena arion) என்னும் வண்ணத்துப் பூச்சியின் கம்பளிப்புழு தொடக்கத்தில் தாவரத்தை உண்ணும்; இறுதியில் எறும்புப்புற்றில் நுழைந்து எறும்பின் புழுக்களைத் தின்னும். ஃபெனிஸிகா டார்க்குனீயஸ் (Feniseca tarquinius) என்னும் கம்பளிப் வட அமெரிக்கக் புழுக்கள் அசுவுணிகளை (aphid) உண்பவை. மத்திய தரைக்கடற்பகுதி நாடுகளிலும், தெற்காசியாவிலும் உள்ள நாக்டுயிட் (Noctuid) இனத்தைச் சேர்ந்த யூப்ளெம்மா Eublemma என்னும் கம்பளிப்புழு செதில் பூச்சிகளை உண்ணும்; இவை அரக்குப் பூச்சி களையும் சில சமயங்களில் உண்பதால் தீமை விளை விப்பன. சில கம்பளிப்புழுக்கள் தம்மினத்தையே உண்பவை (Cannibalistic) காலிம்னியா ட்ரபீஸினா Calymnia trapezina) என்னும் ஐரோப்பிய கம்பளிப் புழு இத்தகையது; ஆயினும் இவை இலை தழை களையும் மிகுதியாகத் தின்பவை. கம்பளிப்புழுக்களில் ஒட்டுண்ணிகளும் காணப்படுகின்றன. பட்டுப்புழுவின் பட்டுநூல் சிறந்த இழையாகும்; இதைக்கொண்டு விலையுயர்ந்த அழகிய பட்டுத் துணிகள் நெய்யப்படுகின்றன. ஒரு பட்டுப்புழுவின் பட்டுநூல் சுரப்பியிலிருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் நீளமான மெல்லிய உண்டாக்கப்படுகிறது. பட்டுப்புழு முசுக்கட்டைச் செடியின் லைகளை பெருமளவில் உண்டு வளர்கிறது. இழை ளைப் கம்பளிப்புழுக்கள் பயிர்வகைகள், மற்றும் இயற் கையில் தாமாகவே வளரும் பல்வகைச் செடிகொடி களுக்குப் பேரழிவை விளைவிக்கின்றன. கம்பளிப் புழுக்கள் ஓய்வின்றி உண்பதையும், வளர்வதையும், மட்டுமே கொண்டவை. இவை 4. 5 முறை தோலுரிக் கும். சிலவகை 9 முறை கூடத் தோலுரிக்கும். கூட்டுப்புழு நிலையை அடையுமுன் நன்கு வளர்ந்த கம்பளிப்புழு, உண்பதை நிறுத்திவிட்டு வசதியான இடத்துக்குச் சென்று கூடு கட்டத் தொடங்கும். பி.எம். ஸுதா கம்பி மின்னோட்டத்தைக் கடத்தக் கூடிய கடத்தி கம்பி (wire) என்று பொதுவாகக் கூறப்படும். கடத்தியில் ஒன்றோ அதற்கு மேற்பட்ட புரிகளோ இருக்கலாம். ஒற்றைக் கடத்திகளை விடப் பல்புரிக் கட த்திகள் நெகிழ் தன்மை (flexibility) கொண்டவை. மின் கம்பியமைப்பிற்காகப் பயன்படும் கடத்திகள் செம்பு அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கும். செம்பு மிகு விலை கொண்டதாக இருப்பதால் விலை குறைவான அலுமினியமே தற்போது பெரும்பாலும் கடத்தியாகப் பயன்படுகிறது. தேவையான பல குறுக் களவு கொண்ட நியமங்களில் செம்புக் கடத்திகளும் அலுமினியக் கடத்திகளும் கிடைக்கின்றன. உள்ளவை இருக்கலாம். 10 F. மி.மீ. வரை குறுக்களவுள்ள செம்புக் கடத்திகளும், 25 ச.மி.மீ. வரை குறுக்களவுள்ள அலுமினியக் கடத்திகளும் ஒரு புரிக் (strand) கடத்தி களாக உற்பத்தி செய்யப்படும். உயர் குறுக்களவு பல புரிக் கடத்திகளாகக் கிடைக்கும். கம்பிகள் வெற்றுக் கடத்திகளாகவோ, காப்புறை கொண்டவையாகவோ கம்பியின் காப்புப் பொருள், ரப்பர். பி.வி.சி. அல்லது வினைல் கலந்த பொருளாக இருக்கும். காப்புப் பொருளைச் சுற்றுப்புற மற்றும் எந்திரவியல் இழப்பிலிருந்து தடுக்கத் தக்க கலவையில் ஊறியதுணி உறையிடுவதும் உண்டு. அதிர்வுகளைத் தாங்க வேண்டியிருந்தால் நாகப்பூச்சுக் கொண்ட இரும்புக் கம்பிகளால் சுற்றிக் காப்பதும் உண்டு. கம்பி அமைப்பு, மின் எஸ். சுந்தரசீனிவாசன் மின்கருவிகளைப் பயன்படுத்த உதவுவது மின்கம்பி அமைப்பு எனப்படும். மின்கம்பி அமைப்பின் நோக்கம், மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு அதை எடுத்துச் செல்வதே ஆகும். கம்பி அமைப்பில் கவனிக்க வேண்டியவை அதன் தோற்றப்பொலிவு, நுகர்வோருக்குத் தீங்கு விளைவிக்காமை, எளிதில் கெடாமை, சுற்றுப்புறச் சூழலால் நைந்து போகாமை முதலியன ஆகும். ஒரு மின்கல அடுக்கில் +, எனும் இரு முனை கள் உள்ளன. இரு மின்முனைகளையும் ஒரு குமிழின் இரு முனைகளோடு ஒரு கம்பி வழியாக ணை த் தால் குமிழ் ஒளியை உமிழ்கிறது. கம்பியின் இடையில் ஓர் இணைப்பியை வைத்தால் மின்சாரத்தை நிறுத் தவும் பாய்ச்சவும் முடியும். இதுவே கம்பி அமைப்பின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.