பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கட்டகப்‌ பாறை இயல்‌

38 கட்டகப் பாறை இயல் பிளவு உருவாகிறது. பசையின் சமதளத்திற்குச் செங்குத் தாக விசை செயல்பட்டால் இழுவிசை அல்லது குறுக்குவிசை உருவாகலாம். ஏதேனும் ஒரு நுனியில் மட்டும் விசை செயல்பட்டால் பிளவு உருவாகலாம். பொதுவாக அனைத்துக் கட்டகப் பசைகளும் உராய்வுப்பிரிவை எதிர்க்கவல்லவையாகவும் படுவதைத் தவிர்க்க முடியாதவையாகவும் உள்ளன. இதன் பயனாக உராய்வுப்பிரிவை உண்டாக்கும் மேல்படிவு முறை ஒட்டுதலே கட்டகப் பசையால் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்பட்ட பகுதிகளின் வலிமை, மேல்படிவின் அகலத்தைப் பொறுத்தே அமையும். இரண்டங்குல மேல்படிவுள்ள இணைப்பு ஓரங்குல மேல்படிவு இணைப்பைவிட இரு மடங்கு வலிமையுடையது. மேல்படிவின் நீளத் திற்கும் வலிமைக்கும் தொடர்பில்லை. ஒட்டி இணைக்கப்படும் பொருள்களின் விறைப்புத்தன்மைக் கேற்ப வலிமை நேர்விகிதத்தில் வேறுபடுகிறது. கட்டகப் பசை - வகைகள். இறுதிப் பயன்பாட்டின் அடிப்படையில் பசையை உலோக இணைப்புப்பசை என்றும், இடைநிரப்புப் பசை என்றும் பிரிக்கலாம். தோற்ற அடிப்படையில், நீர்மநிலைப்பசை, திண்ம நிலைப்பசை, தூள் பசை எனப் பிரிக்கலாம். கட்டக பசையின் இணைப்பு உருவாகும் வெப்பநிலை அடிப் படையில் குளிர் இறுகு பசை, வெப்ப இறுகு பசை. அறை வெப்பநிலை இறுகு பசை எனப் பிரிக்கலாம். பயன்படுத்தும் முறைகள். கட்டகப் பசை பயன் பாட்டில் ஒட்டப்படவேண்டிய பரப்புகளைத் தூய்மை செய்தல், பசை தடவும் முறைகள். இணைப்பு உருவாக்கும் முறைகள் என மூன்று பிரிவுகள் உண்டு. சரியான இணைப்புக் கிடைக்க வேண்டுமானால் ஒட்டப்பட வேண்டிய பரப்பிலிருந்து அனைத்துத் தூசும் நீக்கப்பட வேண்டும். வண்ணம், துரு. ஆக்ஸைடு போன்றவை நீக்கப்பட வேண்டிய தூய்மை யற்ற பொருள்களாகும். பசை திண்மநிலை, நீர்ம நிலை, துகள் என எந்த நிலையில் உள்ளதோ அதற்கேற்றவாறு பசை தடவும் முறைகள் கணிக்கப்படுகின்றன. நீர்ம நிலையிலிருந்தால் மட்டை கொண்டு தடவுதல் அல்லது விசைத்தெளித்தல் முறைப்பயன்படும். கட்டகம் பசை, கூழாக இருந்தால் கத்திமுனையால் தடவலாம். அறைவெப்பநிலை இறுகு பசை நீங்கலாகப் பிற வற்றிற்கு வெப்பமும் அழுத்தமும் இறுகுதற்குத் தேவைப்படும். வெப்பம், அழுத்தம் இவற்றின் அளவுகள் பசையின் தன்மைகளுக்கேற்ப மாறுபடும். பசைத் தயாரிப்பாளரே வெப்பநிலையைப் பரிந் துரைப்பதும் உண்டு. பொதுவாக 330° 350°F வரை வெப்பம் தேவைப்படும். எவ்வளவு கால அளவுக்குள் இந்த வெப்பநிலையை எட்டலாம். எவ்வளவு கால அளவில் மீண்டும் வெப்பத்தைக் குறைக்கலாம் என்பதற்கேற்ப வலிமையில் மாற்றம் உண்டாகும். இவற்றில் மிகவும் இன்றியமையாதது போதுமான அழுத்தம் பரப்பு முழுதும் செலுத்தப்பட வேண்டியதேயாகும். கட்டகப் பாறை இயல் - வயி. அண்ணாமலை நில இயலின் பெரும் பிரிவுகளில் பாறை இயலும் ஒன்றாகும். பாறைகள் அனற்பாறை, படிவுப் பாறை. உருமாறிய பாறை என மூவகைப்படும். இப்பாறை களில் காணப்படும் பெரிய நுண்ணிய அமைப்புகளை விளக்கிக்கூறும் பாறை இயலின் ஒரு பிரிவே கட்டகப் பாறையியல் (structural petrology) ஆகும். கட்டகப் பாறை இயலுக்கும் கட்டக நில இயலுக்கும் அடிப் படை வேறுபாடுகள் உள்ளன. கட்டக நில இயல் புவியின் ஆக்கம் பற்றியும் அதில் உள்ளும் புறமும் காணப்படும் பெரும் அமைப்புகள் பற்றியும் எடுத் துரைக்கும். ஆனால் கட்டகப் பாறையியல் பாறை கள் உருவாகும்போது தோன்றிய பாறை அமைப்பு களை மட்டுமே கூறும். அனற்பாறை அமைப்புகள். அனற்பாறை அமைப்பு கள் இருவகைப்படும். குழம்புத் திட்டுகள், குழம்புக் கயிறுகள், தலையணைக் குழம்பு, ஓட்டுக்குழம்புப் பட்டைகள், பட்டக அமைப்புகள், அறுபட்டைத் தூண்கள், பாறை இணைப்புகள், வெடிப்புகள் ஆகி பவை பெரிய பாறைக்குழம்பிலிருந்து உருவாகும் அமைப்புகளாகும். வாதாம்பருப்பு அமைப்பு, கோள அமைப்பு, ஆர அமைப்பு போன்றவை நுண்ணிய அனற்பாறை அமைப்புகளாகும். இவை தவிர வினை X கடலூர் மணற்பாறை அரியலூர் படிவுகள் திருச்சிராப்பள்ளிப் படிவுகள்) உத்தத்தூர் படிவுகள் மேல் கோண்டுவாளா. . x ×

  • ஆர்க்கேயன் பாறைகள்

படம் 1. திருச்சிராப்பள்ளி மாவட்டக் கிரிட்டேசியஸ் படிவுப்பாறைகள்