பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 கம்பி அமைப்பு, மின்‌

560 கம்பி அமைப்பு, மின் அமைப்பு முறை. கம்பிஅமைப்பு, தொடர் முறை, இணை முறை என இரு வகைப்படும். தொடர் முறை யில் மின்னோட்டம் ஒரே அளவில் இருக்கும். இணை முறையில் ஒரே அளவு மின்னழுத்தம் இருக்கும். இப் முறையையே பெரும்பாலும் வீட்டில் கம்பி அமைப் பிற்குப் பயன்படுத்துவர். தெருக்களில் உள்ள முதன்மைத் தொடரிலிருந்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. வீட்டின் முன்புறம் அளவிப்பலகை (meter board) அமைந்துள்ளது. அப்பலகைக்குக் கம் பத்தில் உள்ள மேலுருகி (aerial fuse) வழியாக மின் சாரம் வருகிறது. இப்பலகையில்தான் மின்சாரம் பயன்படுத்தும் அளவைக் காட்டும் கருவியான அளவி, முதன்மை இணைப்பி உருகி தாங்கி முதலியன பதிக்கப்பட்டிருக்கும். இங்குள்ள முதன்மை இணைப் பியிலிருந்து மின்சாரம் மின் அளவிக்குச் சென்று அங் கிருந்து வெட்டுருகி (cut out) வழியாக நுகர்வோர் பயன்படுத்தும் கருவிகளுக்குச் செல்லும். மின்சாரத்தை வேண்டிய இடத்திற்கு மரத்தாங்கி களில் பதித்தோ பாலிதீன் குழாய்க்குள் இட்டோ எடுத்துச் செல்லலாம். பாலிதீன் குழாய்கள் மூலம் கம்பிகள் செல்வதால் வெளிப்புற ஈரம், உப்புத் தன்மை முதலியவற்றால் கம்பிகள் பழுதடைவ தில்லை. வெட்டுருகியிலிருந்து வெளிவரும் மின்சாரம் சில கிளைகளாகப் பிரிக்கப்படுகிறது. அக்கிளைகளுக்கு முதன்மைச் சுற்றுவழி என்று பெயர். சுற்றிலிருந்து பல கிளைகள் பிரிகின்றன. இவை துணைச் சுற்றுவழி எனப்படும். இத்துணைச் இத்துணைச் சுற்றிலிருந்து இணைப்பி வழியாகப் பயன்படுத்தும் மின்கருவிகளுக்கு மின்சாரம் செல்கிறது. குமிழ், குழல் விளக்கு, மின்விசிறி, மாவு அரைவை எந்திரங்கள், குளிர்விப்பான் (refrigerator), வானொலி, தொலைக்காட்சி, காற்றுப் பதனாக்கக் கருவி முதலியன இந்த மின்சாரத்தால் பயன் பெறு கின்றன. குழாய்களுக்குள் செலுத்தாமல் வெளியே கம்பி தெரியுமாறு எடுத்துச் செல்லும்முறை திறந்த கம்பி அமைப்பு எனப்படும். கம்பிகளைக் குழாய்களுக்குள் செலுத்திக் குழாய்கள் வழியே எடுத்துச் செல்லும் முறையைக் குழாய்க்கம்பி அமைப்பு என்பர். முறையைப் பின்பற்றியே மறைமுக செய்யப்படுகின்றன. இம்முறையால் சுவருக்குள்ளேயே செல்லும். பின்வருமாறு இணைப்புகள் கம்பிகள் கம்பி அமைப்பிற்குப் பயன்படும் கம்பிகளின் தன்மைகள் அமைதல் வேண்டும். கம்பி உலோகத்தால் ஆனதாக இருக்க வேண்டும். அதிலும் செம்பு அல்லது அலுமினியம் சிறப்புடையது. செம்பு விலை மிக்கது. அலுமினியம் விலை மலிவு. உலோகத்தின் மீது வலிய உறுதியான காப்புறை இருத்தல் வேண்டும். சும்பி கனமாக இருத்தல் மேலும் சிறந்தது. மிகவும் மெல்லிய கம்பி வலிய மின்சாரத்தைப் பாய்ச்ச உதவாது. மிகவும் கனமான கம்பிகள் மிகு விலை உடையவை. கம்பிகளின் மேல் உறை மின்சாரத்தின் சுமைக்குத் தக்கவாறு அமைதல் நன்று. நிலத்தின் கீழும் நீரின் கீழும் மின்சாரம் எடுத்துச் செல்ல வடங்கள் பயன்படுகின்றன. கம்பி களை ஒன்றோடு ஒன்று இணைக்கும்போது அவற்றின் மீது காப்பு நாடா சுற்றுவது இன்றியமை யாதது. வெறுங்கம்பிகளின் மீது அமைக்கப்படும் மேலுறைகளை வல்கனைசுடு ரப்பர் (VIR) மூலமும், பாலி வீனைல் குளோரைடு (PVC) மூலமும் அமைக்க லாம். இரப்பர் கிடைக்காத போது பிவிசி பயன் படுத்தப் பட்டது. இது மிகக் குறைந்த வெப்பநிலை யில் வெடித்துவிடும். இதுவே இதில் உள்ள குறைபா டாகும். ஆயினும் நீர், உப்பு அரிப்பு முதலிய வற்றால் கம்பி பாதிக்காதவாறு காக்க உதவுகிறது. பலமாடிக் சும்பி கட்டடங்களுக்குக் அமைப்புச் செய்யும்போது ஈயம் மூடிய தாள் காப்பு வடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட ஆயுட்காலம் உடைடயது. மிகு மின்னோட்டம் செல்லுமாயின் வல்கனைசுடு இரப்பர் உறையைவிட இது மிகு தாங்கும் திறன்படைத்தது. கம்பி அமைப்பு இணைப்பு முறையில் பயன்படும் கருவிகள் கம்பிகளை இணைக்கும் கிளைகளைத் தாங்கும் சந்திப்புப் பெட்டி, ஆய்வுப் பெட்டி, மின் சாரத்தை நிறுத்தவும் செலுத்தவும் உதவும் இணைப்பி, ஒளி விட உதவும் குமிழ், குழல் விளக்கு. செருகிகள், மின் குமிழைப் பிடித்துக் கொள்ளும் பிடிப்பிகள் (iolders), முள் முனைகள், 'டி' வடிவுகள் சுவரைத் துளையிட உதவும் சுவர்த்துளைப்பான், மரத்திருகுகள், கம்பிகளைச் சேர்த்துப் பிடிக்கும் பிடிப்பிகள், வளைவுகள், உருகி தாங்கிகள். சுவரின் மேலே இருந்து கீழே தொங்கவிட உதவும் கூரைக்குவிவு (ceiling rose), மின் இயங்கியைக் கட்டுப்படுத்த உதவும் தொடங்கி முதலியனவாகும். கம்பி அமைப்பில் பயன்படும் கம்பிகளைப் பட்டியலில் காணலாம். இதில் மிகச் சிறிய அளவு 1/0.044. ஆ மிகப்பெரிய அளவு 19/0.044.இதில் கூறியுள்ள ம்பியர் கம்பி சூடாகாமல் மின்னோட்டம் செல்லும் அளவைக் குறிக்கும். உச்ச அளவு மின் னோட்டம் காப்புறையின் தன்மையையும் வடத்தி லுள்ள கடத்திகளின் எண்ணிக்கையையும், அமைப்பு முறையையும் பொறுத்தது ஆகும். கம்பத்தின் மேல் மின் சீர்செய்ய வேண்டுமானால் அதை மின்வாரியம் மின் சீர் அழைப்புப் பதிவேட்டில் எழுதி வைத்தால் அவர்கள் சீர் செய்வார்கள். வை தவிரப் பொது உருகிகளில் பழுதானால் அவற்றை எவரும் மாற்றலாம். உருகிகளைப் பொருத்துவதற்குமுன் உருகி அறுந்து போனதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வது நலம். சில உருகிகளின் அளவும் திறனும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. கம்பி அமைப்பில் சில விதிமுறைகளைப் பின் பற்ற வேண்டும். விளக்குகள், செருகிகள் அமைக்கும்