பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 கம்பு

562 604 யின் வேறுபாட்டால் தாவரவியலர்கள் கம்புக்குப் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஏய்ரி-ஷா என்பார் பெ. டைபாய்டியம் என்று குறிப் பிடுகிறார். மாத்யூ கூற்றுப்படி கம்பு, பெ. அமெரி கானம் (P.americanum) ஆகும். கம்புக்குப் பல வட் டாரப் பெயர்கள் உள்ளன. இவை முத்துத்தானியம். ஸ்பைக் தானியம், பூனைவால் தானியம், புல்ரஷ் (bull - rusi) தானியம், பஜ்ரா எனப்படும். பென்னி சிடம் என்னும் இனம் போயேசி எனப்படும் ஒருவித் திலைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய மாகும். இதில் ஏறத்தாழ 100 சிற்றினங்களுண்டு. இவை ஒரு பருவ அல்லது பலபருவப் புற்களாகவும் வெப்ப நாட்டுப் பயிராகவும் உள்ளன. இன பல் வகைப்பாடு. கம்பின் வகைப்பாடு சற்றுச் சிக்க லானது. பயிரிடப்படும் வகைகள் பலவாக இருப்ப தால் ஏற்படும் குழப்பமே இதற்குக் காரணமாகும். போர் என்பாரின் கருத்துப்படி, கம்பு என்பது துணைச் சிற்றினங்களைக் கொண்ட ஒரே சிற்றின மாகும். ஆனால் ஸ்டாஃப், ஹப்பர்ட் என்பார். கம்பு என்னும் சிற்றினக் கூட்டத்தை 18 சிற்றினங் களாகப் பிரித்துள்ளனர். இவற்றில் 6 சிற்றினங்கள் இந்தியாவிலும், ஆஃப்ரிக்காவிலும் காணப்படு கின்றன. பயிராகும் வகைகள். இந்தியாவிலும் ஆஃப்ரிக்கா விலும் பல வகைகள் உண்டு. மேற்கு ஆஃப்ரிக்கா வகைகள் அல்லது முன் பருவவகை 60-95 நாள், பின்பருவ வகைகள் 130-150 நாள் கொண்டவை. இந்திய வகைகள். குறுகிய காலப் பயிர் 80 நாள். நடுத்தர வகைகள் 100 நாள், நீண்ட காலப் பயிர் 180 நாள் ஆகும். பயிர் செய்யப்படும் வகைகளின் கதிர்கள் நிலைத்தவை, நுனி அகன்றவை, தானியங் கள் பருத்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். ஆனால் தன்னிச்சையாக வளரும் வகைகளில் உதிரும், நுனி கூராக இருக்கும், தானியங்கள் சிறுத்து உமியால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். இதனால் தன்னிச்சையான வகைகளில் விதை பரவுதல் எளிதில் நடைபெறுகிறது. கதிர் தோற்றம். இதன் தாயகம் மேற்கு வெப்ப ஆப்பிரிக்கா ஆகும். ஏனெனில் இங்குதான் தன் னிச்சையானவையும் வளர்ப்பு வகைகளும் காணப் படுகின்றன. சிவாலியர் என்பாரின் கூற்றுப்படி அந்நாள் சஹாரா நீர்வளம் பெற்றிருந்த நிலை யில் கம்பு போன்ற பல பயிர்களுக்குத் தாயக மாக இருந்திருக்கக்கூடும். தன்னிச்சையான சிற்றின மொன்று முதலில் வறண்ட மேற்கு ஆப்பிரிக்காவில் வளர்க்கப்பட்டு, பிறகு வேறுபட்ட சூழ்நிலைகளில் பயிரிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என் பது பர்ஸ்க்லெள என்பாரின் கருத்தாகும். ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து கம்பு இந்தியாவை அடைந்திருக்கலாம். மேலும் கம்பு கம்பு 1. செடி 2. மஞ்சரி S. டீலர்