பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பு 563

கம்பு 563 புயிராகும் இடங்களில், கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இல்லாத காரணத்தால் அங்குள்ள மக்கள் கம்பைப் பயிரிட்டு உண்பது வழக்கம். பயிரிடப் து பொதுவாக மானாவாரியாகவே படுகிறது. இந்தியாவில் சில இடங்களில் நீர்ப்பாசன முறையில் பயிரிடுவதுண்டு. கம்புச் சாகுபடிக்கு ஒரு மித்த மழையைவிடப் பரவலான மழையே ஏற்றது. விதை முளைத்தலின்போது குறிப்பிட்ட அளவு ஈரப் பசை தேவை. சோளம் போல். நீரற்ற நிலை விதை உறக்கம் (dormancy) கம்புக்கு இல்லை. பூக்கும்போது மிகுதியான மழை இருந்தால் பயிர் கெட்டுவிடும். கதிர்கள் முற்றப் பெரும வெப்பநிலை தேவை. பட்டினி அரிசி எனப்படும் டிஜிட்டேரியா எக்சிலிஸ் Digitaria exilis) தவிர, வேறு எந்தப் பயிரும் வள ராத வறண்ட சூழ்நிலைகளில் கம்பு மட்டும் வளரும் அதன் தன்மை பெற்றது என்பதே சிறப்பாகும். இதைப் புழுதியில் தூவிச் சாகுபடி செய்வதுண்டு. உயர வளரியல்பு. கம்பு நேராக 0.5-4 மீ வரை மாக வளரக்கூடிய ஒரு பருவச் செடியாகும். வேர்கள், நடுத்தண்டிலிருந்தும், தூர்களின் அடிக்கணுக்களி லிருந்தும் உண்டாகும். அதற்கு மேலே தாங்கு (prop) வேர்கள் உண்டாகின்றன. தண்டு, கோரை (culm) வகையைச் சேர்ந்தது. ஒல்லியாகவோ, கவோ உள்ள நீண்ட கணுவை இடைவெளியாகக் கொண்டது. தூரிகள் இல்லாமலும் காண ணப்படும். கணுக்களில் பட்டுப் போன்ற தூவிகள் வட்டமாக அமைந்திருக்கும். காணப்படும். தடிமனா இலை இலைகள். தனித்தவை, மாற்றிலையடுக்கு அமைப்பு, இரு வரிசைகளில் யடிப் பட்டை நீண்டது. மேலே திறந்தும், கீழே தண்டை அணைத்தவாறும் காணப்படும். இலைப் பரப்பு ஈட்டி போலிருக்கும். தடித்த நடு நரம்பு இருப்பதால் இலைகள் தொய்வதில்லை. தூவிகளற்று அல்லது பல அடுக்குத் தூவிகளோடும் காணப்படும். இலைப்பரப்புச் செதில் (ligule) குட்டையானது. அடர்த்தியான இழை (cilia) கொண்டது. மஞ்சரி. தண்டு நுனியில் அமைந்த, சுருங்கிய கூட்டுப்பூத்திரள் (panicle) அல்லது போலித்தூவி ஆகும். 15-140 செ.மீ. நீளமிருக்கும், பசும் மஞ்சள் நிறம் கொண்டது. மஞ்சரி முழுதும் உருண்டை யாகவோ நுனி கூராகவோ இருக்கும். சிறு தூவிகள் (spikelet) நெருக்கமாகவும் பொதுவாக ஜோடியாக வும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் அடியில் 25-90 நீண்ட பெருந்தூவிகள் (bristles) உண்டு. இப்பெருந்தூவிகளின் எண்ணிக்கை, நீளம். வலிமை, மென்மை ஆகியவற்றால் வேறுபடலாம். இப்பெருந்தூவிகளின் நீளம் மிகுதியாக இருந்தால் சிறு தூலிகளின் உதிருந்தன்மை கூடுகிறது. சிலவகை களில் நுனிப்பெருந்தூவி மேற்பரப்பிற்கும் அப்பால் நீண்டு ஆன் (awn) என்னும் உறுப்பைத் தோற்று விக்கும். 3-9 சிறுதூவி. பொதுவாக இருமலர் கொண்டது. வெளியே அமைந் மி.மீ. நீளம் உடையது. திருக்கும் உமிச்செதில் (glume) குட்டையாக. ஜவ்வு போலிருக்கும். உள்ளே அமைந்திருக்கும் உமிச்செதில் மலர்களில் அடி நீண்டது. சிறு தூவியிலுள்ள 2 மலர் 3 மகரந்தத் தாள்கள் கொண்ட ஆண்மலராசு இருக்கும்.சில சிறு தூவிகளில் அவை மலட்டு ராக இருக்கக்கூடும். மேலேயுள்ள சிறுமலர் இருபால் வகையைச் சார்ந்தது. தல் சூலகம் ஓரறை கொண்டது: ஒரே ஒரு சூல் காணப்படுகிறது. சூலகத்தண்டுகள் 2 சிறகு போல் காணப்படும். கனி. தானிய (caryopsis) வகையைச் சேர்ந்தது. 4 மி.மீ. நீளம் இருக்கும். வேறுபட்ட உருவமும் வண்ணமும் கொண்டிருக்கும். மகரந்தச்சேர்க்கை. சாம்சன் என்பார் 1936 ஆம் ஆண்டு இந்திய இனங்களில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையை விவரித்துள்ளார். காற்று மூலம் அயல் வெளிப்பட்ட மகரந்தச்சேர்க்கை நிகழும். கதிர் 2.3 நாளில் சூலகத் தண்டுகள் நீளத் தொடங்கு கின்றன. கதிரின் நுனிப்பகுதியிலிருந்து கீழ்நோக்கி நடைபெறுகிறது. 24 மணி நேரத்தில் இச்செயல் வரை து முடிந்துவிடும். சூலகமுடிகள் ஒரு நாள் செயற்படு நிலையிலிருந்து பிறகு வாடிவிடும். சூலக முடிகள் காய்ந்த பிறகு இருபால் பூக்களிலுள்ள மகரந்தத்தாள்கள் வெளிப்படும். முதலில் கதிரின் நடுவே தொடங்கிப் பிறகு மேலும் கீழுமாகக் தொடரும். இரண்டு நாளுக்குப்பின் ஆண்மலர்களி லுள்ள மகரந்தத்தாள்கள் வெளிப்படும். இவ்வாறு கம்பில் ஆண் முதிர்வும் பெண் முதிர்வும் வெவ்வேறு நாள்களில் நடைபெறுவதால் தன் மகரந்தச் சேர்க் சையே இந்நிலைகளுக்கு நடைபெறுவதில்லை. இடையேயுள்ள இடைவெளி, வெப்பம் காரணமாகக் செய்யலாம். கருத்தரித்த கூடவோ குறையவோ நாற்பது நாளில் மணிகள் முற்றிவிடுகின்றன. கம்புப் சாகுபடி. விதைகளை அறுவடை செய்த பல வாரங்களுக்குப்பின் அவை முளைக்கும் நிலையை அடைகின்றன பயிரைத் தனியாகவும், சோளம், பயறு, துவரை வகைகளுடன் சேர்த்தும் சாகுபடி செய்யலாம். நெல், கோதுமை முதலிய வற்றையடுத்து வறண்ட பருவங்களில் கம்பு பயிரிடு வதும் உண்டு. கதிர்கள் முற்றியவுடன் அறுவடை செய்யப்படும். தூரோடு கூடிய வகைகளில் குச்சி யால் அடித்தும் கால்நடைகளைக் கொண்டு மிதிக்கச் செய்தும் தானியமணிகளைப் பிரிப்பர். விளைச்சலின் அடிப்படையில் இந்திய வகைகள், ஆஃப்ரிக்க வகை களைவிடச் சிறந்தவை. ஆஃப்பிரிக்காவில் ஹெக்