பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 கம்புச்‌ செடியில்‌ பசுங்கதிர்‌ நோய்‌

564 கம்புச் செடியில் பசுங்கதிர் நோய் டேருக்கு 250-750 கி.கி கிடைத்தால் இந்தியாவில் ஹெக்டேருக்கு 750-1100 கி.கி. கிடைக்கும், நீர்ப் பாசன முறையில் ஹெக்டேருக்கு 3,000 கி.கி. வரை எட்டக்கூடும். சிறு மணிகளைக் கொண்ட கதிர்கள் இனிப்புச் சுவையின் காரணமாக மனி னுக்கு உணவாகின்றன. பெருமணி வகைகள் கால் நடைத் தீவனமாகின்றன. தீவனமாகப் பயன்படுத்தும் போது மணிகள் பால் கட்டும் நிலையில் செடிகள் அறுக்கப்பட வேண்டும். த பயன். இது ஆஃப்ரிக்கா, இந்தியா, அரேபியா வின் வறண்ட பகுதிகளில் உணவு தானியமாகக் கருதப்படுகிறது. நெல், முத்துச்சோளம், கோதுமை ஆகியவற்றை அடுத்து இது நான்காம் தானியம் ஆகும். மழை குறைந்த இடங்களில் பயிராவதன்றி நீண்ட நாள் தேக்கி வைக்கவும் ஏற்றதாகும். தவிடு நீக்கி அரிசி போல் சமைத்து உண்பர். நீர்ப் பாசன இனங்களில் போர் அடிக்கும்போதே நீங்கிவிடும். ஆனால் வறண்ட நிலைகளில் போர் அடித்த பின்னும் உமி தங்கியிருக்கும். பிறகு அவற்றை உரலில் இட்டுக் குத்தி நீக்கவேண்டும். கம்புமாவைக் கொண்டு சப்பாத்தி, அடை, தோசை முதலியவற்றைத் தயாரிப்பர். கம்பு மணிகளை வறுத்துப் பொரி தயாரிப்பர். உமி கம்பை முளைக்க வைத்துப் பானங்கள் தயாரிப்ப துண்டு. ஆஃப்ரிக்காவில், முளைத்த கம்பிலிருந்து பீர் தயாரிக்கின்றனர். சர்க்கரை நோயுள்ளோர் கம்பை உணவாகக் கொள்வதுண்டு. கம்புக்கு வெப்பத் தன்மை இருப்பதால் வட இந்தியர்கள் குளிர்காலங் களில் பயன்படுத்துவர். கம்பு சற்று முரடான தானியமாகையால் அரிசியுண்போர் திடீரென்று கம்பு உண்டால் செரியாமைக் குறைபாடுகள் தோன் றலாம். கம்பில் வைக்கோல் சத்துக் குறைவானதால் கால்நடைத் தீவனமாகப் பயன்படுவதில்லை. ஆனால் அதைப் படுக்கை செய்யவும் வேலிபோடவும் கூரை வேயவும் அடுப்பு எரிக்கவும் பயன்படுத்துவர். இந்தியக் கம்பில் ஈரப்பசை 12. 4%, புரோட்டீன் 11. 6%. கொழுப்பு 5% கார்போஹைட்ரேட் 67.1%,நார் 1. 2%, சாம்பல் சத்து 2.7% என்னும் அளவில் சத்துகள் உள்ளன. சாம்பலில் காணப்படும் வேதி மூலகங்கள் கால்சியம், பாஸ்ஃபரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் ஆகும். இவற்றைத் தவிரப் பேரியம், குரோமியம், கோபால்ட், தாமிரம், ஈயம், மாங்கனீஸ், நிக்கல், வெள்ளி போன்ற (361) மூலகங்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படும். கம்பில் காணப்படும் புரோட்டீனில் புரோலமைன். டைபாய்டின் மிகுந்த அளவில் உண்டு. கம்பின் ஊட்டச்சத்து அரிசி, கோதுமைக்குச் சம மாகும். நோய்கள். பொதுவாகக் கம்பு, பிற பயிர்களைப் போல் நோய்களால் தாக்கப்படுவதில்லை. இயற்கை யாகவே அது நோய் எதிர்ப்பாற்றல் பெற்றது. ஆனாலும் பூஞ்சைகள், பூச்சிகள், குறிப்பாகப் பற வைகள் பேரழிவை உண்டாக்கும். எர்காட் என்னும் நோய் குறிப்பிடத்தக்கது. இதனால் பயிர் அழிவது மட்டுமல்லாமல் அதை உண்பதால் மனிதர்கள் மயக் கம், வாந்தி, தலைச்சுற்றல், வயிற்றுப்போக்கு ஆகிய வற்றால் துன்பம் அடைகின்றனர். ஆனால் உயிருக்குக் கேடு விளைவிக்காது. தி. ஸ்ரீகணேசன். நூலோதி எம்.எல். லீலா, தாவரப் பொருளாதாரச் சிறப்புகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. 1972; J. W.Purseglore, Tropical Crops- Monocots, ELBS, London, 1975. கம்புச் செடியில் பசுங்கதிர் நோய் இந்நோயைக் கீழ்ச்சாம்பல் (downy mildew) அல்லது அடிச்சாம்பல் நோய் என அறிகுறிகளைக் கொண் பகுக்கலாம். கம்பு பயிரிடப்படும் பகுதிகள் அனைத்தி லும் பசுங்கதிர் நோய் (green ear) காணப்படுகிறது. தென் ஆஃப்ரிக்கா, உகாண்டா, இந்தியா, ஈரான் இஸ்ரேல், சீனா, ஃபிஜித்தீவுகள், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நோய் மிகுதியாகக் காணப் படுகிறது. இந்தியாவில் இந்நோய் தமிழ்நாடு, ஆந் திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங் களில் பெரும்பான்மையாகத் தோன்றுகிறது. தமிழ கத்தில் கம்பு பயிராகும் அனைத்து மாவட்டங்களிலும் இந்நோய் காணப்படுகிறது. இந்நோயால் 27-30% வரை இழப்பு ஏற்படுகிறது. ஸ்கிளிரோஸ்போரா கிராமினிக்கோலா (scicros- pora graminicola) என்னும் பூசணத்தால் பசுங்கதிர் நோய் உண்டாகிறது. இப்பூசணத்தின் இழைகள் நிறமற்றும் குறுக்குச்சுவர்கள் இல்லாமலும் பல நியூக்ளியாக்களைக் கொண்டும் காணப்படும் இப்பூசணம் பயிரின் திசுவறைகளுக்கிடையில் வளர்ந்து சுவறைகளில் உறிஞ்சிகளை (haustoria) உட் செலுத்துகிறது. இவ்வுறிஞ்சிகள் வழியாகப் பயிரி லுள்ள சத்துப் பொருள்களைப் பூசணங்கள் எடுத்துக் கொள்கின்றன. இவற்றிலிருந்து விதைப்பையைத் தோற்றுவிக்கும். தண்டுகள் இலைத்துளை வழியாக வெளிவருகின்றன. இத்தண்டுகள் 120-150 மைக்ரான் நீளமுடையவை. விதைப்பை (sporangium) நீண்ட உருண்டை வடிவமும் மேலுறையும் கொண்டு மேல் புறம் குவிந்துள்ளது. விதைப்பை 19-31 12-21 மைக்ரான் அளவுடையது. ஈரப்பதத்தில் இது முளைத்து 3-12 இயங்கு விதைகளை (zoospores) வெளிப்படுத்துகிறது. நாளடைவில் பூசண இழைகளி லிருந்து கடின உறைவிதைகள் (toospores) இலை