பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிற்று ஓட்டு 567

system) தொகுதியைச் சேர்ந்தது. இப்படிகங்கள் நீண்ட செவ்வகங்களாகவும், தகடுகளாகவும், பட்டை களாகவும் கிடைக்கின்றன. கயனைட் நீலங் கலந்த பச்சை நிறமானது. இதில் கனிமப் பிளவுகள் காணப் படுகின்றன. கண்ணாடி மிளிர்வு அல்லது முத்து மிளர்வு தில் காணப்படும். சீரற்ற முறிவு உடையது. இதன் கடினத்தன்மை நீள்வாட்டத்தில் 5 ஆகவும் குறுக்கே 7 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடர்த்தி எண் 3.56 - 3.68. உற்பத்தி, உலகிலேயே கயனைட்டை மிகுதியர்க உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்காவாகும். அமெரிக்கா உற்பத்தி செய்யும் அளவில் இந்தியா பாதியளவு உற்பத்தி செய்கிறது. கயனைட் சோவியத் ஒன்றியக் குடியரசில் எக்கோட்டாரின் பர்க், யூரல் மலை ஆகிய இடங்களில் கிடைக்கிறது. பீகாரில் கரஸ்வான் மாவட்டத்திலுள்ள லாப்சபரு என்னும் இடத்தில் கயனை--குவார்ட்ஸ் பாறைகளில் கிடைக் கிறது. இங்கு 0.7 மில்லியன் டன் கயனைட் இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத் திற்கு அடுத்ததாக மகாராஷ்ட்ரம், மாநிலங்களில் கயனைட் கிடைக்கிறது. கர்நாடக காணப் பீகாரிலுள்ள சிங்பும் மாவட்டத்தில் படும் கயனைட்டில் 64-68% அலுமினிய ஆக்சைடு உள்ளது. கயனைட்டில் இரும்பு ஒரு மாசுப் பொருளாகக் காணப்படும். இதனால் இந்தக் கனிமத் தின் மதிப்புக் குறைகிறது. கர்நாடக மாநிலத்தில் கூர்க், அஸ்ஸாம், மைசூர் ஆகிய மாவட்டங்களில் கயனைட் காணப்படுகிறது. கேரளத்தில் கண்ணனூர் மாவட்டத்திலுள்ள இரிட்டி என்னும் டத்தில் கயனைட் சிறிதளவில் கிடைக்கிறது. பயள். உலைக்கல, வேதிய, மின் பொருள்கள். சிமெண்ட், மட்பாண்டம் முதலியவற்றின் உற்பத்திச் சாலைகளில் கயனைட் மிகுதியாகப் பயன்படுகிறது. செம்பு, தாமிரம், நிக்கல் கலவை. உயர்தர எஃகு முதலியவற்றை உருக்குவதற்குக் கயனைட்டால் ஆன உலைக்கலன்கள் பயன்படுகின்றன. மேலும் தங்கம், துத்தநாகம் இவற்றைப் பிற கலவைகளிலிருந்து பிரித் தெடுப்பதற்கும் பயன்படுகிறது. கயனைட் உயர் வெப்பத்தைத் தாங்கக் கூடிய ஆற்றல் கொண்டதால் ஆய்வுக்கூடங்களிலுள்ள உயர் வெப்ப அடுப்புகள் (laboratory kilns) கட்டப் பயன்படுகிறது. இதைச் சிறிதளவு கண்ணாடியுடன் சேர்ப்பதால் அதற்கு மிகுந்த கடினத்தன்மை ஏற்படுகிறது. தோற்றம். கயனைட் குறைந்த வெப்பத்திலும் அழுத்தத்திலும் அண்டாலுசைட், சில்லிமனைட் ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படுகிறது. ஒரு கனிமத்திலிருந்து மற்றொரு கனிமத்திற்கு மாறுவது மிகவும் மெதுவாக நடக்கிறது. ஆனால் இம்மூன்று கனிமங்களும் ஒரே பாறையில் காணப்படுகின்றன. அபிரகப் படலப் பாறைகளில் கார்னட், ஸ்ட்டா கயிற்று ஓட்டு 567 ரோலைட், குவார்ட்ஸ், மஸ்க்கோவைட், பயோனைட் ஆகியவற்றுடன் கயனைட் சேர்ந்து காணப்படுகிறது. ஸ்விட்சர்லாந்திலுள்ள செயின்ட்கோத்தார்டில் அணிகலன்களாகப் பயன்படக்கூடிய கயனைட் வகை கிடைக்கிறது. இந்தியாவிலும், அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா, வட கரோலினா ஆகிய டங்களிலும் கிடைக்கும் கயனைட் உயர்ந்த வகை உலைக்கலப் பொருளாகப் பயன்படுகிறது. கயிற்று ஓட்டு கோ.சி.இராஜசேகரன் இயக்க ஆற்றலை ஓர் எந்திரத் தண்டில் இருந்து மற்றோர் எந்திரத்தண்டிற்குச் செலுத்த. கீழ்க் காணும் எந்திர உறுப்புகள் பொதுவாகப் பயன்படு கின்றன. அவை பல்சக்கரங்கள் (gear), பட்டை (belt), கயிறு (rope), சங்கிலி (chain) ஆகியவை யாகும். உள்ள எந்திரத் தண்டுகளுக்கு இடையே தொலைவு மிகக் குறைவாக இருந்தால் பல்சக்கரங் களைப் பயன்படுத்தி ஆற்றவை ஒரு தண்டிலிருந்து மற்ற தண்டிற்குச் செலுத்தலாம். எந்திரத்தண்டு களுக்கு இடையே உள்ள தொலைவு மிகுதியாக இருக்கும்போது பட்டை ஓட்டு (belt drive), சுயிற்று U படம் 1.