பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பத்தில்‌ எடை கூடுதல்‌ 573

தாய்மையால் ஏற்படும் விளைவுகள் கர்ப்பப்பை, மார்பகம், இரத்தத்தின் அளவு கூடுதல், புரதம், கொழுப்பு மிகைப்பு, நீர் மிகைப்பு ) உயர் சிசு (fetus) சராசரிப் பிறப்பு எடை, குடும்பத் தாய்மார்களிடம் மிகுதியாகக் காணப்படு கிறது.ஓர் இந்தியக் குழந்தையின் சராசரிப் பிறப்பு எடை 2.9கிலோ கிராம் ஆகும். இரண்டாம் குழந்தை முதல் குழந்தையைவிட எடை கூடுதலாகவும், மூன்றாம் குழந்தையைவிடச் சிறிது குறைவாகவும், அதற்குப் பிறகு ஒரே எடை உடையதாகவும் அமையும். குழந்தைகளின் பிறப்பு எடை தாயாரின் உணவு முறையைச் சார்ந்தே அமையும். கர்ப்பப்பையில் முதன் முதலில் பிண்டத்தின் எடைமிகைப்பு மெதுவாகவே நடைபெறுகிறது. இருபது வாரங்களுக்குப் பிறகே தொடர்ச்சியான எடை கூடுதல் ஏற்படுகிறது. ஆனால் நஞ்சின் எடை மாற்றமோ இதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளது. முதல் பதினைந்து வாரங்களில் மிகவும் விரைவான எடை கூடுதலும், அதற்குப் பிறகு இருபது வாரங்கள் வரை தொடர்ச்சியான சீரான எடை கூடுதலும். பேறுகாலம் வரை மெதுவான எடை கூடுதலும் ஏற் படும். கர்ப்பத்தின் பதினைந்து வாரங்களுக்கு முன் நஞ்சின் எடை பிண்டத்தின் எடையைவிட மிகுதியாக இருக்கும். ஆனால் பேறுகாலத்தின்போது குழந்தை யின் எடையில் 20% தான் நஞ்சு இருக்கும். பனிக்குட நீர் (Amniotic fluid). பனிக்குட நீரின் எடை முதல் பத்து வாரங்களில் மிகவும் வேகமாக அதிகரிக்கிறது. இருபது வாரங்களில் 300 மி.லி. ஆகவும், முப்பது வாரங்களில் 600 மி.லி. ஆகவும் முப்பத்தைந்து வாரங்களில் 1000 மி.லி. ஆகவும் இருக்கும் அதன்பிறகு பேறுகாலம் வரை தொடர்ச்சி யாக அளவில் குறைவு ஏற்பட்டு 600 மி.லி. ஆகப் பனிக்குட நீர் அமையும். உரிய பேறுகாலத்திற்கு மேலும் கர்ப்பம் தொடருமானால் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது. 43 வாரங்களில் 250 மி.லி, பனிக்குட நீர் இருக்கும். பனிக்குட நீர் பிண்டத்தை. ஒரே அளவான வெப்பநிலையில் வைத்து அதற்கு எத்தகைய தீங்கும் நேரா வண்ணம் பேணுகிறது. மேலும், பிண்டம் எடையே இல்லாத பொருள் போலக் குறைந்த ஆற்றலுடன் பனிக்குட நீரில் நகர முடிகிறது. பனிக்குட நீருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது. எடை கர்ப்பத்தின் எடை கூடுதலுக்குரிய தாய்மைக் காரணி கள். கர்ப்பப்பையின் பேறுகாலம் முழுதும் உயர்ந்து கொண்டே இருக்கும். இது கர்ப்பப்பையின் பெருக்கத்தால் முதல் இருபது வாரங்கள் மாகவும் நாற்பது வாரங்கள் வரை மெதுவாகவும் நடைபெறுகிறது. பேறுகாலத்தின்போது பான எடையைவிட 900 வேக இயல் கிராம் மிகுதியாக கர்ப்பத்தில் எடை கூடுதல் 573 இருக்கும். மார்பகங்களின் எடையும், பேறுகாலம் முழுதும் இரத்தத்தின் அளவும் கூடுதலாகவே இருக்கும். கர்ப்பத்தின்போது கொழுப்புச் சத்துக் கூடுவது உட்கொள்ளும் மாவுச்சத்தையும், கொழுப் புச்சத்தையும் பொறுத்து அமையும். பொதுவாக மூன்று - நான்கு கிலோ கிராம் கொழுப்புச் சத்து மிகுதியாகும். இதனுள் 90% முப்பது வாரங்களுக்கு முன் நடைபெறும். சேர்த்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து 25000 -35000 கலோரி ஆற்றல் பேறுகாலத்தில் பயன்படுமாறு வெளிப்படும். புரதச் சத்தின் கூடுதல் கர்ப்பகாலம் முழுதும் நடைபெற்றா லும் மிகு அளவு உடலில் தேக்கி வைத்துக் கொள்ளப் படுவதில்லை. முப்பது வாரங்களுக்குப் பிறகு பேறுகாலத்தில் அளவுக்குமேல் எடை கூடுதலுக்குக் காரணம் நீர் தங்கி விடுவதேயாகும். சராசரிப் பெண்மணிக்கு முப்பது வாரங்கள் வரை 3.6 லிட்டர் அளவும், பிறகு பேறு காலம் வரை மூன்று லிட்டர் அளவும் நீரின் தேக்கம் ஏற்படலாம். இதில் முக்கால் பங்கு நீரின் கூடுதல் செல்புறம்பு (extracellular) நிலையில் ஏற்படுகிறது. அளவுக்குமேல் எடை கூடுவதால் உடல் வீக்கமாகத் தோன்றும். இதைத் தொடர் எடை குறித்தல் மூலம் கண்டறியலாம். முப்பது வாரங்களுக்குப் பிறகு ஏதேனும் ஒரு வாரத்தில் ஒரு கிலோவிற்கு மேல் எடை கூடுதல் ஏற்பட்டால் எச்சரிகையான கண் ணோட்டத்தில் காணவேண்டும். ஏனெனில் இதுவே முன் சூல் வலிப்பு (preclampsia) ஏற்படுவதற்குரிய முதற்குறியாகும். உடல் பொதுவாக, உடல்நலமுள்ள இளம் பெண்ணின் உடல் எடையில் 52% அவளின் மொத்த நீர் எடை அமைகிறது. உடல் வீக்கமில்லாத பெண் களுக்கு ஏறத்தாழ 6.8 லிட்டர் நீர் அதிகரிப்பும், கால்களில் மட்டும் வீக்கமுள்ள பெண்களுக்கு 7.2 லிட்டர் அதிகரிப்பும், உடல் முழுதும் வீக்கமுள்ள பெண்களுக்கு 9.8 லிட்டர் நீர் அதிகரிப்பும் ஏற் படும். பொதுவான சராசரி நீர் அதிகரிப்பு சில சமயங் களில் 8.5 லிட்டர் ஆக உள்ளது. கர்ப்பகாலத்தின் போது பெரும்பாலும் காணப்படும் கால்வீக்கம் பொதுவாக மாலை நேரத்தில் தோன்றிச் சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு மறைந்து விடுகிறது. இதன் முக்கிய காரணம் கருவளர்ச்சியின்போது முனைகளில் (entremities) ஏற்படும் சிரையியல் இரத்த அழுத்தத் தின் (venous pressure of the blood) கூடுதலே ஆகும். அளவு உடல் நீர் அளவில் மாற்றத்தின் விளைவாகக் கர்ப்ப காலத்தின்போது ஹீமோகுளோபின் குறைந்து காணப்படுகிறது. உண்மையில் மொத்த ஹீமோகுளோபின் அளவு உயரவே இதையே கர்ப் பத்தின்போது ஏற்படும் உடலியல் இரத்தச்சோை (physiological anaemia) என்பர். கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் எடை அதிகரிப்பு, பெண்களைப் பல