பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 கர்ப்பமும்‌ பால்‌ சுரப்பும்‌

574 கர்ப்பமும் பால் சுரப்பும் வகையிலும் பாதிப்பதால் அவ்வப்போது அதிகரிப்பைக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பமும் பால் சுரப்பும் எடை ஜோதி விஜயராணி பருவமெய்திய பெண்களுக்கு, அவர்களின் சூலசுத்தி லிருந்து (ovary) மாதம் ஒரு சினை (ovum) முதிர்ச்சி யடைந்து வெளியே வருகிறது. இந்தச் சினை ஆண் விந்துடன் சேருவதற்கு வாய்ப்பில்லையென்றால் அழிந்து விடுகிறது. சூலுக்காகக் காத்திருந்த சூல் பையகமும் (endometrium) சிதைந்து மாதவிடாயாக வெளியேறி விடுகிறது. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வாய்ப்புக் கிடைத்தவுடன், இந்தப் பெண்ணின் சினை ஆணின் விந்துடன் சேர்ந்து, அடுத்து ஏற்படும் விளைவுகளுக்கே சூல் அல்லது கர்ப்பம் என்று பெயர். சினை சூலகத்திலிருந்து வெளியில் விழுந்து மீண்டும் கருக்குழலை அடைகிறது. இதற்குள் ஆணின் விந்து, பெண்ணுக்குள் செலுத்தப்பட்ட பத்து நிமிடங்களுக்குள் கருக்குழலை. அடைந்து விடுகிறது. கருக்குழலில் தான் சினையும் ஆண் விந்தும் ஒன்று சேர்கின்றன. வை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவுடன் உண்டாவதுதான் சூல் ஆகும். இந்தச் சூலைத் தாங்கிக் கொள்வதற்காகச் சூல் பையகம் தன்னைத் தயார் செய்து கொள்கிறது. மூன்றிலிருந்து ஐந்து நாளுக்குள் சூல் அல்லது கரு, கருப்பைக்குள் மெல்ல மெல்லத் தள்ளப்படு கிறது. இதற்கு, கருக்குழலின் சுருங்கி விரியும் தன்மையும், அலை போன்ற அமைப்புள்ள செல் களும் மிகவும் உதவுகின்றன. ஏழு நாளுக்குள் கரு, கருப்பையகத்தின் உட்சுவரில் தன்னை ஆழ்த்திக் கொண்டு விரைவாக வளரத் தொடங்கும். இக் கருவிற்கு ஊட்டமளிப்பதற்காக ஏற்பட்ட சிறப்பான அமைப்புகள் கரு உணவும், (yolk) தாய்-சேய் இணைத் திசுவும் (placenta) ஆகும். தாய் - சேய் இணைத்திசுவின் உதவியுடன் வளரும் கரு, ஆக்சிஜனையும், உணவுச் சத்துகளையும் ஏற்றுக் கொண்டு, கார்பன் டைஆக்சைடையும் கழிவுகளை யும் நீக்குகிறது. மேலும் தாய்-சேய் இணைத்திசு சில ஹார்மோன்களைச் சுரக்கிறது. ஹார்மோன்கள் கருவை வளர்ப்பதற்குப் பயன்படுவது மட்டுமன்றிக் குழந்தைக்குத் தேவையான பாலைத் தாயின் மார்பகங்கள் சுரப்பதற்கும், மறைமுகமாக உதவு கின்றன. பால் சுரப்பு. சூல் நிலையைத் தாய் அடைந்தவுடன் அதைத் தாங்கி நிற்கப் பல உறுப்புகள் தயாராகி விடுகின்றன. பெண்ணின் மார்பகங்கள், சூலை நேரடி யாகத் தாங்காவிடினும், பிறக்கப் போகும்குழந்தைக்கு உதவத் தம்மைத் தயாராக்கிக் கொள்கின்றன. பெண்களின் மார்பகங்களின் உள் அமைப்பு. பெண் களின் மார்பகங்களின் நுண்ணிய உள் அமைப்பைப் பால் சுரக்கும் பகுதி (g'andular tissue), தாங்கும் பகுதி (supporting tissue) என வகையாகப் பிரிக்கலாம். பால் க்ரக்கும் பகுதியைக் கிளைகளுள்ள மரத் திற்கு ஒப்பிடலாம். பால் சுரக்கும் சிறிய வட்டமான அமைப்பிற்கு ஆல்வியோலை என்று பெயர். இவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு மெல்லிய நாளம் தொடங்குகிறது. சுரக்கும் பாலை இந்த நாளங்கள் எடுத்து வருகின்றன. மார்பின் காம்புப் பகுதிக்கு இந்த நாளங்கள் வந்து சேரும்போது, சற்று விரிவடைந்து மீண்டும் மெலிந்து காம்பின் முனையில் உள்ள துளை யில் முடிவடைகின் ன்றன. சற்று விரிவடையும் பகுதிக்குப் பால் தங்கும் ஸைனஸ் (lactiferus sinus ) என்று பெயர், இவை மிக முக்கியமான பகுதியாகும். ஏனென்றால் சுரந்த பால் இங்கு தேக்கி வைக்கப் படுகிறது. செல்லிலிருந்து நாளத்திற்குள் பாலைப் பீச்சச் செய்யும் மயோ எபிதீலிய செல், (myoe- pithelial cell) ஆக்சிஸ்ட்டோசின் என்னும் ஹார் மோனுக்குக் கட்டுப்படும். பெண் சிறுமியாக இருக்கும்போது இந்த ஆய்வி யோலை என்னும் பகுதி மிகவும் சிறியதாக இருக்கும், பெண் பருவம் அடையும்போது அவள் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் மிகுதியாகச் சுரக்கிறது. மார்பகங்களின் பால் சுரப்பிகளும் இந்த வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜனையே சார்ந்துள்ளன. எனவே பருவமடையும் பெண்ணின் உடலில் சுரக்கும் மிகுதியான் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனும் மார்பகங்களைச் சற்றே பெரியவையாக வளரச் செய்கின்றது.பால் சுரப்பிகள் சற்றே மிகுதியாக விரிவடைந்து வளர வளர, அவற்றைத் தாங்கும் சதையும் அளவில் மிகவே, பெண்ணின் மார்புகள் விரிந்து பெருத்து வளரத் தொடங்கும். சூலடையும்போது மார்பகங்கள் மிகப் பெரியவை ஆகின்றன. சற்றே கெட்டிப்படுகின்றன. மார்பின் காம்பு பெரிதாகிறது. அதைச் சுற்றியுள்ள கறுத்த பகுதியும் விரிவடைந்து ஆழ்ந்த கருமை நிறமாக மாறுகிறது. இதனால் மார்பகங்கள் பெருக்கின்றன. சூல்பருவ காலம் முழுதும் தாய்-சேய் இணைத் திசுவிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மார்பகங் களின் பால் சுரப்பிகளை அகலப்படுத்துவதற்கும், பால் நாளங்களின் கிளைகளை அதிகரிப்பதற்கும், அவை வளர்வதற்கும் மிகவும் உதவுகின்றன. ஈஸ்ட்