பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பூரப் புல்‌ 575

புரோ ரோஜனைத் தவிர வளர்ச்சி ஹார்மோன், லாக்டின், அட்ரினல் குளுேகோ கார்டிகாய்ட்ஸ், இன்சுலின் போன்ற மேலும் சில ஹார்மோன்களைத் தாய்- சேய் இணைப்புத் திசு, பால் சுரப்பிகள் வளர் வதற்காகச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள். சுரப்பிகளை செய்வதற்கும், வளரச் இவற்றைச் சுற்றியுள்ள செல்களுக்குப் பால் மிகுதியாகச் சுரக்கும் திறனை அளிப்பதற்கும் மிகவும் உதவுகின்றன. பால் சுரப்பும் புரோலாக்டின் ஹார்மோனின் தொடர் பும். ஈஸ்ட்ரோஜனும், புரோஜெஸ்ட்ரோனும் சூல் காலத்தின்போது, மார்பகத்தின் புற வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாக இருப்பினும், இவற்றின் தனித்தன்மை பால் சுரப்பைச் சற்றே தடுத்து நிறுத்து வதுதான். ஆனால் தாயின் பிட்யூட்டரி சுரப்பியி லிருந்து சுரக்கப்படும் புரோலாக்டின் என்னும் ஹார் மோன், மார்பகங்களில் பாலைச் சுரக்கச் செய்கிறது. இந்த ஹார்மோனின் அளவு. சூல்கொண்ட ஐந்தாம் வாரத்திலிருந்து சீராக உயரத் தொடங்கும். குழந்தை பிறக்கும் நேரத்தில் மிகுதி யான அளவில் புரோலாக்டின் இரத்தத்தில் காணப் படுகிறது. சூல் கொள்ளாத காலத்தில் இருப்பதைப் போலப் பத்து மடங்கு மிகுதியாக உள்ளது. குழந்தை மார்பைச் சப்பும்போது, நரம்பின் மூலம் மூலம் செய்தி ஹைபோதலாமஸ் என்னும் பகுதியை அடைகிறது. மேலும் தாய்-சேய் இணைத்திசு ஹியூமன் கோரியா னிக் கோனோடோ ட்ரோபின் என்னும் thuman gonado traphic hormone) ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மார்பகங்களில் பாலைச் சுரக்க வைக்கிறது. சூல் கொள் இறுதிக் கட்டத்தில் மார்பின் ஆல்வி யோலைகள் ஒரு மஞ்சள் நிற நீர்மத்தைச் சுரக் கின்றன. இதற்கு, கொலாஸ்ட்ரம் அல்லது சீம்பால் (சேய்ப்பால்) என்று பெயர். இதில் நீர்மக் கசிவுகளும் இரத்த வெள்ளணுக்களும் கலந்துள்ளன. இந்த வெள்ளணுக்கள் குழந்தையின் உடலுக்குத் தேவை யான எதிர்ப்பாற்றலை அளிக்கின்றன. மூன்று நாளுக்குப் பிறகு சீம்பால் மெதுவாக நின்றுபோக, தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். முழு அளவான பால் சுரப்பிற்கு வளர்ச்சி ஹார்மோன், கார்ட்டிசால், பாராதைராய்டு ஹார்மோன் போன்ற ஹார்மோன்களும் காரணமாகின்றன. பால் சுரப்பதற்குத் அமிலங்கள், கொழுப்பு வேறு சில தேவையான அமினோ அமிலங்கள், குளுகோஸ், கால்சியம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கு வளர்ச்சி ஹார்மோன் தேவைப்படுகிறது. குழந்தை மார்பை உறிஞ்சுவதால் ஏற்படும் உணர்ச்சி அலைகளின் பரவலால் பிட்யூட்டரி சுரப்பி யின் முன்புறத்திலிருந்து பாலைச் சுரக்க வைக்கும் ஹார்மோனாகிய புரோலாக்டின் சுரக்கிறது. மேலும் P கர்ப்பூரப்புல் 575 குழந்தையின் உறிஞ்சும் உணர்வு, தாயின் பிட்யூட்டரி யின் பின் பகுதியிலிருந்து ஆக்சிடோசின் என்னும் ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது. இந்த ஹார் மோன் மார்பின் ஆல்வியோலைகளைச் சுற்றியுள்ள மயோ எபிதிலீயல் செல்லை ஊக்குவித்து, ஆல்வி யோலைக்குள் இருக்கும் பாலைப் பால் நாளங் களுக்கு வேகத்தோடு தள்ளி விடுகிறது. எனவே பால் தொடர்ச்சியாகத் தாயின் மார்பிலிருந்து சுரக் கத் தொடங்கும். குழந்தை உறிஞ்சத் தொடங்கிய 30-60 நொடியில் பால் வெளிவரத் தொடங்கும். இதற்குப் பால் பீச்சுதல் என்று பெயர். பால் சுரப்பு என்பது முழுதும் ஹார்மோன்க ளைச் சார்ந்ததன்று. பால் கொடுக்கும்போது தாயின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதும் இன்றியமை யாததாகும். ஒரு மார்பகத்தை உறிஞ்சும்போது மற்றொரு மார்பகத்திலும் பால் சுரக்கிறது. மேலும் தாய் குழந்தையை அணைக்கும்போது, குழந்தையின் அழுகுரலைக் கேட்கும்போது, குழந்தையைக் கொஞ்ச நினைக்கும்போது. தாயின் ஹைபோதலாமஸ் பாலைச் சுரந்து பீச்சச் செய்கிறது. இதே போல், தாய் தன் மனத்தில் கவலைகளை வைத்திருத்தல், கோபப்படுதல், மகிழ்ச்சியின்மை போன்ற மன உணர்ச்சிகள் பால் சுரப்பைப் பாதிக்கின்றன. பால் சுரப்பும் ஓரளவு குறைந்து விடுகிறது. தாயின் உணவும் ஊட்டமுடையதாக இருக்க வேண்டும். பாலுக்காகப் பசும்பால், புரதச்சத்து, கால்சியச் சத்து முதலியவற்றைத் தாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சு.ராஜலட்சுமி நூலோதி. Arthur C. Anyton, Medical physiology, Seventh Edition, W. B, Saunders Co, Philadelphia. 1986. கர்ப்பூரப்புல் இதை முறையாகக் குடிநீரிட்டு 16-32 மி.லிட்டர் வரையில் கொடுக்கூ குழந்தைகளின் வயிற்றுவலி நீங்கி நலமுண்டாகும். பசி ஏற்படும். கர்ப்பூரப்புல் எண்ணெயில் 3-6 துளியைச் சர்க்கரையுடன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வாந்தி இவை குணமாகும். ஊழி நோய்க்கு மேற்கூறிய எண்ணெயை நீரில் மணிக்கொரு வாந்தியை கொடுத்துவர முறை நிறுத்தி உடலுக்கு வெப்பத்தைத் தரும். இந்த எண்ணெயைச் சரி பங்கு தேங்காய் எண்ணெயுடன் கலந்து, வாதப்பிடிப்பு, கீல்வாதம், நரம்புக் குடைச்சல் முதலிய நோய்களுக்குத் தேய்த்து வரலாம். - சே.பிரேமா